இஸ்ரவேலும் சபையும் #3 Jeffersonville, Indiana, USA 53-0327 1அல்லது, எண்ணாகமம், எண்ணாகமம் 20வது அதிகாரம், இன்றிரவு அங்கே தான் நாம் நம்முடைய கருப்பொருளை (theme) அடிப்படையாக உபயோகிக்கப் போகிறோம். யாராவது எங்களோடு ஆராய்ந்து படிக்க விரும்பினால், இப்பொழுது இன்னும் ஏறக்குறைய நான்கு வேதாகமங்கள் எங்களிடம் உள்ளன. இங்கே கூடுதலாக இருக்கும் இந்த நான்கு வேதாகமங்களையும் உங்களிடம் கொண்டு வருவதற்கு மூப்பர்களில் சிலர் மகிழ்ச்சியுடையவர்களாய் இருப்பார்கள். யாருக்காவது ஒரு வேதாகமம் தேவைப்பட்டால், அப்படியே உங்கள் கரத்தை உயர்த்துங்கள். சரி, இதோ, இங்கே சிலர் இருக்கிறார்கள். சகோ. பிளீமன் அவர்களே, நீர் வந்து, அவைகளைப் பெற்று-பெற்று, அவைகள் தீருவது மட்டுமாக அவைகளைக் கொடுப்பீரா. 2எண்ணாகமம், எண்ணாகமம், 20ம் அதிகாரம், நாம் எண்ணாகமத்திலிருந்து மிகவும் சீக்கிரமாக இந்தப், “பிரயாணத்தை” மேற்கொள்ளப் போகிறோம், எனென்றால் அது யாத்திராகமம் தருவதைக் காட்டிலும் இன்னும் விரிவாக (காரியங்களைத் தருகிறது, அது விவரமான அறிக்கையைக் கொடுக்கிறது. நாம் ஏறக்குறைய ஏழாவது வசனத்திலிருந்து துவங்கி வாசிக்க விரும்புகிறோம். கர்த்தர் மோசேயை நோக்கி: நீ கோலை எடுத்துக்கொண்டு, நீயும் உன் சகோதரனாகிய ஆரோனும் சபையாரைக் கூடிவரச் செய்து, அவர்கள் கண்களுக்குமுன்னே கன்மலையைப் பார்த்துப் பேசுங்கள்; அப்பொழுது அது தன்னிடத்திலுள்ள தண்ணீரைக் கொடுக்கும்...... (ஆங்கிலத்தில் his water என்றிருக்கிறது, அதாவது அவருடைய தண்ணீரைக் கொடுக்கும் என்பதாக எழுதப்பட்டுள்ளது - மொழிபெயர்ப்பாளர்.) அது அவருடைய, அவருடைய தண்ணீ ரைக் கொடுக்கும்“ என்றிருப்பதை நீங்கள் கவனிக்கும்படி விரும்புகிறேன், தனிப்பட்ட பிரதிபெயர். ... இப்படி நீ அவர்களுக்குக் கன்மலையிலிருந்து தண்ணீர் புறப்படப்பண்ணி, சபையாருக்கும் அவர்கள் மிருகங்களுக்கும் குடிக்கக் கொடுப்பாய் என்றார். அப்பொழுது மோசே தனக்குக் கர்த்தர் கட்டளையிட்டபடியே கர்த்தருடைய சந்நிதியிலிருந்த கோலை எடுத்தான். மோசேயும் ஆரோனும் சபையாரைக் கன்மலைக்கு முன்பாக கூடிவரச் செய்தார்கள்; அப்பொழுது மோசே அவர்களை நோக்கி: கலகக்காரரே, கேளுங்கள், உங்களுக்கு இந்தக் கன்மலையிலிருந்து நாங்கள் தண்ணீர் புறப்படப் பண்ணுவோமா என்று சொல்லி, தன் கையை ஓங்கி, கன்மலையைத் தன் கோலினால் இரண்டுதரம் அடித்தான்; உடனே தண்ணீர் ஏராளமாய்ப் புறப்பட்டது, சபையார் குடித்தார்கள்; அவர்கள் மிருகங்களும் குடித்தது. 3இப்பொழுது, வார்த்தையைத் திறப்பதற்கு எந்த மனிதனுக்கும் தகுதியில்லை. வேதாகமத்தில் கூட அது, வந்து, புஸ்தகத்தை எடுத்து, முத்திரைகளை உடைத்து, வார்த்தையைத் திறப்பதற்கு பாத்திரராயிருந்த ஒரேயொருவர் உலகத்தோற்ற முதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் மாத்திரமே“ என்று அது கூறுகிறது. இப்பொழுது, இயேசு மறுபடியும் வரும் வரையில் நம்மோடு தங்கியிருக்கும்படியாக, அவர் தம்முடைய ஸ்தானத்தில் திரும்ப அனுப்பின பரிசுத்த ஆவியானவர். சகோதரன் நெவில் அவர்களே, உங்களுக்கு விருப்பமானால், தேவனுடைய வார்த்தை புறப்பட்டுப் போகையில், அவர் இப்பொழுது நம்மை சந்தித்து, தம்முடைய வார்த்தையை ஆசீர்வதிக்கும்படியாக, நீர் நின்று தேவனிடம் வேண்டிக்கொள்வீரா?... அவருடைய வார்த்தையை விளக்கமாக எடுத்துரைக்க, இப்பொழுது அவர் வந்து, நமக்கு உதவி செய்யும்படி அவரிடம் வேண்டிக்கொள்ளும். 4நாம் நம்முடைய தலைகளை வணங்கியிருக்கையில், ஒரு சிறு ஜெபம் [சகோதரன் நெவில் பின்வரும் ஜெபத்தை ஏறெடுக்கிறார். எங்கள் பிதாவே, நாங்கள் இன்றிரவு உண்மையான தாழ்மையோடு மறுபடியுமாக உமக்கு முன்பாக வருகிறோம், கர்த்தாவே, நீர் உமது ஆவியினாலே ஒன்றாக கூட்டியிருக்கிற இந்த மந்தையின் ஆவிக்குரிய தேவைகளைச் சந்திக்க மனித திறமை போதாது (inadaquate) என்பதை உணர்ந்து கொள்கிறோம் - ஆசிரியர்.) உண்மை, கர்த்தாவே! [மேலும் பிதாவே, நான் இன்றிரவு இங்கே ஒரு இடையிட்டாளராக நின்று கொண்டிருக்கையில், என்னுடைய தீர்மானத்தின் மூலமாயல்ல, ஆனால் உம்முடைய தெரிந்து கொள்ளுதலின் மூலமாக, பரிசுத்த ஆவியானவரின் அதிகாரத்தின் மூலமாக, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சபையின் மேல் சுதந்தரவாளியாக நான் நின்று கொண்டிருக்கையில்.) ம்ம். [அந்த இரக்கத்தின் அளவில்.... இன்றிரவு எங்கள் மேல் நோக்கமாயிருக்க (look upon) வேண்டுமென்று, இயேசுவின் நாமத்தில், நான் உம்மிடம் வேண்டிக்கொள்ளுகிறேன்.... ஆம், பிதாவே. [- அதில் எங்களுக்கு உமது பார்வையில் தயவு கிடைக்க முடியுமே. இவருடைய தாயின் வயிற்றிலிருந்து நீர் அழைத்திருக்கிற இந்த எனது சகோதரனும், சக பிரயாணியும், உடன் - ஊழியக்காரருமாகிய இவர், இன்றிரவு பரிசுத்த ஆவியின் மூலமாக வேதவாக்கியத்தைத் திறக்க முடிய வேண்டுமென்று நான் உம்மிடம் வேண்டிக்கொள்ளுகிறேன்.... இதை அருளும், கர்த்தாவே. [.. இந்த மகத்தான மந்தையின் நிர்வாகியாயிருக்கிற ஒருவர்.) இதை அருளும், கர்த்தாவே. [பிதாவே, இங்கே அதிக அளவில் பேசுவதற்கல்ல... ஆனால் சிலுவையில் அறையப்பட்ட உமது குமாரன் மூலமாக நாங்கள் கண்டடைந்திருக்கிற தயவின் நிமித்தமாகத்தான், இன்றிரவு...) ஆம். எங்கள் மேல் நோக்கமாயிருந்து, பரலோகத்திலிருந்து வருகிற எழுப்புதலின் வல்லமையினால் மறுபடியும் எங்களை ஞானஸ்நானம் பண்ணும். இதை அருளும், கர்த்தாவே. [வேதவாக்கியத்திற்கு எங்கள் சிந்தைகளைத் திறந்தருளும், நீர் அருளியிருக்கிற இந்தக் காரியங்களைக் குறித்து, நாங்கள் ஒன்றாக கூடி பேசுகையில், எங்கள் இருதயங்கள் தாமே எங்களுக்குள்ளே கொழுந்துவிட்டு எரிவதாக.] ஆம், பிதாவே. [ஓ, எங்கள் பிதாவே, மகத்தான தேவனே, இன்றிரவு தியானம் செய்யத்தக்கதான ஆவியில், பரலோகத்தின் ஆசீர்வதிக்கப்பட்ட விதானத்தின் கீழாக, இப்பொழுது இன்றிரவு நாங்கள் அமைதியாக இருக்கட்டும். உமது ஜனங்களிடம் வருகை தந்து, வார்த்தையிலிருந்து எங்களோடு போதித்தருளும். ஓ, இன்றிரவு தோன்றி மறைகிற (transatory) ஒவ்வொரு - ஒவ்வொரு சிந்தனைகளையும் கீழ்ப்படுத்தியருளும்.) ஆமாம். [மகத்தான தேவனே, எங்கள் சிந்தைகளை ஒருமுகப்படுத்தும் (settle)]. ஆமென். [—- இன்றிரவு அற்புதமான ஆசீர்வாதத்தை எங்களுக்குக் கொடுத்தருளும்.) இதை அருளும், கர்த்தாவே. [மேலும் இப்பொழுதும், பிதாவே, இயேசுவின் கொண்டிருக்கையில்.) ம்ம். [அந்த இரக்கத்தின் அளவில்.... இன்றிரவு எங்கள் மேல் நோக்கமாயிருக்க (look upon) வேண்டுமென்று, இயேசுவின் நாமத்தில், நான் உம்மிடம் வேண்டிக்கொள்ளுகிறேன்.... ஆம், பிதாவே. [- அதில் எங்களுக்கு உமது பார்வையில் தயவு கிடைக்க முடியுமே. இவருடைய தாயின் வயிற்றிலிருந்து நீர் அழைத்திருக்கிற இந்த எனது சகோதரனும், சக பிரயாணியும், உடன் - ஊழியக்காரருமாகிய இவர், இன்றிரவு பரிசுத்த ஆவியின் மூலமாக வேதவாக்கியத்தைத் திறக்க முடிய வேண்டுமென்று நான் உம்மிடம் வேண்டிக்கொள்ளுகிறேன்.... இதை அருளும், கர்த்தாவே. [.. இந்த மகத்தான மந்தையின் நிர்வாகியாயிருக்கிற ஒருவர்.) இதை அருளும், கர்த்தாவே. [பிதாவே, இங்கே அதிக அளவில் பேசுவதற்கல்ல... ஆனால் சிலுவையில் அறையப்பட்ட உமது குமாரன் மூலமாக நாங்கள் கண்டடைந்திருக்கிற தயவின் நிமித்தமாகத்தான், இன்றிரவு...) ஆம். எங்கள் மேல் நோக்கமாயிருந்து, பரலோகத்திலிருந்து வருகிற எழுப்புதலின் வல்லமையினால் மறுபடியும் எங்களை ஞானஸ்நானம் பண்ணும். இதை அருளும், கர்த்தாவே. [வேதவாக்கியத்திற்கு எங்கள் சிந்தைகளைத் திறந்தருளும், நீர் அருளியிருக்கிற இந்தக் காரியங்களைக் குறித்து, நாங்கள் ஒன்றாக கூடி பேசுகையில், எங்கள் இருதயங்கள் தாமே எங்களுக்குள்ளே கொழுந்துவிட்டு எரிவதாக.] ஆம், பிதாவே. [ஓ, எங்கள் பிதாவே, மகத்தான தேவனே, இன்றிரவு தியானம் செய்யத்தக்கதான ஆவியில், பரலோகத்தின் ஆசீர்வதிக்கப்பட்ட விதானத்தின் கீழாக, இப்பொழுது இன்றிரவு நாங்கள் அமைதியாக இருக்கட்டும். உமது ஜனங்களிடம் வருகை தந்து, வார்த்தையிலிருந்து எங்களோடு போதித்தருளும். ஓ, இன்றிரவு தோன்றி மறைகிற (transatory) ஒவ்வொரு - ஒவ்வொரு சிந்தனைகளையும் கீழ்ப்படுத்தியருளும்.) ஆமாம். [மகத்தான தேவனே, எங்கள் சிந்தைகளை ஒருமுகப்படுத்தும் (settle)]. ஆமென். [—- இன்றிரவு அற்புதமான ஆசீர்வாதத்தை எங்களுக்குக் கொடுத்தருளும்.) இதை அருளும், கர்த்தாவே. [மேலும் இப்பொழுதும், பிதாவே, இயேசுவின் நாமத்தில், நாங்கள் கேட்டுக் கொண்டிருக்கிற இந்த எல்லாவற்றிற்காகவும், அதற்காக நாங்கள் உமக்கு துதியையும் கனத்தையும் மகிமையையும் செலுத்துவோம். ஆமென், ஆமென்.) ஆமென். உமக்கு நன்றி. 5அங்கே நமது மத்தியில் ஒரு அந்நியர் இருக்க நேரிட்டிருக்கலாம்; அவர் தான் இங்கேயிருக்கும் நமது மேய்ப்பராகிய சகோதரன் நெவில் அவர்கள். அவருடைய தொண்டையில் கொஞ்சம் குரலடைப்பு அவருக்கு ஏற்பட்டிருந்தது, ஆகையால் தான் கடந்த இரண்டு இரவுகளில் அவரைக் குறித்து அதிகமாக நாம் கேள்விப்படவில்லை. அந்தக் காரணத்தினிமித்தமாக, அவருடைய தொண்டை... பதற்கு ஒரு வாய்ப்பைக் கொண்டிருக்கும் வரையில், அவரால் எவ்வளவு கூடுமோ அவ்வளவு பேசாமல் அமைதியாக இருக்கும்படி அவர் ஒருவிதத்தில் கேட்டுக்கொண்டார், அவர் மறுபடியும் குணமடையும்படியான ஒரு வாய்ப்பை கொண்டிருக்கிறார். 6இப்பொழுது, நாம் யாத்திராகம புத்தகத்தை ஆய்ந்து படித்து வருகிறோம். யாத்திராகமம் என்றால், “தேவனுடைய பிள்ளைகள் வெளியே அழைக்கப்படுதல்” என்பதாக இருக்கிறது. அவர்கள் எகிப்திலே இருந்த காலம் வரையில் அவர்கள் தேவனுடைய ஜனங்களாக இருந்தார்கள். ஆனால் அவர்கள் தங்களுடைய வெகுஜனப் புறப்பாட்டைக் (exodus) கொண்டிருந்த போது, அவர்கள் தேவனுடைய சபையாக ஆனார்கள், சபை என்ற வார்த்தைக்கு “வெளியே அழைக்கப்பட்டவர்கள்” என்று அர்த்தமாம். இன்றிரவு நமக்கும் ஒரு யாத்திரை அருகாமையில் இருக்கிறது என்று நம்புகிறோம். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? நாம் வேறொரு யாத்திரைக்கு, ஒரு வெளியே அழைக்கப்படுதலுக்கு அருகாமையிலிருக்கிறோம், வேறு பிரிக்கப்பட்டு ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறறோம். 7இப்பொழுது, நான், முன்னடையாளங்களைக் கொண்டு பொருத்திக் காட்டுகிறவனாக (typologist) இருப்பதை விரும்புகிறேன், நான் அவ்வாறு தான் இருக்கிறேன், நான் அவ்வாறு இருப்பதைக் குறித்து குற்றம் சாட்டப்பட்டு வந்திருக்கிறேன், ஏனென்றால் பழைய காரியங்கள் எல்லாமே வரப்போகிற காரியங்களுக்கு ஒரு நிழலாக இருந்தன என்று நம்புகிறேன். வேதவாக்கியம் அவ்வாறு போதிக்கிறது. நம்மால் ஏதோவொரு காட்சியைக் கொண்டிருக்க முடிந்து, பழைய ஏற்பாடு எப்படிப்பட்டதாக இருந்தது என்பதை நோக்கிப்பார்க்க முடியுமானால், நாம் பழைய ஏற்பாடு எப்படியிருக்கிறது என்பதைக் காண்போம், அல்லது, இன்னும் சரியாகச் சொன்னால், புதிய ஏற்பாடு எப்படியிருக்கிறது என்பதைக் காண்போம். பாருங்கள், அந்த முன்னடையாளம். அவைகள், என்ன செய்ய வேண்டுமென்று நாம் அறிந்து கொள்ளும்படியான நிழல்களாகவும் திருஷ்டாந்தங்களாகவும் இருந்தன. அவர்கள் எவ்வாறு விழுந்தார்கள் என்றும் எவ்வாறு அவர்கள் எழுந்தார்கள் என்றும் அவர்கள் தேவனை சேவிப்பதாக அவர்கள் என்ன செய்தார்கள் என்றும் காணலாம், அது நமக்கு ஒரு நிழலாக உதவி செய்கிறது. 8இப்பொழுது, முதலாவது இரவாகிய, புதன்கிழமை இரவில், அடிப்படையில், சபையானது என்னவாக இருந்தது என்பதைக் கண்டுபிடிக்கும்படியாக, நாம் “சபை” என்பதை கற்றுணர்ந்து கொண்டோம். இப்பொழுது சுகமளிக்கும் கூட்டத்தில் ஏழு வருடங்களில், இந்த மாதிரியான ஒரு எழுப்புதலை நான் கொண்டிருப்பது இதுவே முதல்முறையாகும். ஏழு வருடங்களில், வரவிருக்கும் இந்த வாரத்தில், நான் கூடாரத்தை விட்டுப் புறப்பட்டு, வெளியே சுகமளிக்கிற ஆராதனைகளைக் கொண்ட சுவிசேஷ கூட்டங்களுக்குப் போவேன். பெரும்பாலும், பிரசங்கத்தைப் பண்ணியிருக்கிற மேலாளர்களிடம் நான் அதை ஒப்புவித்திருக்கிறேன், நான் தெய்வீக சுகமளித்தல் என்ற பொருளின் பேரில் மாத்திரமே பேசுவேன், ஏனென்றால் நாம் மெதோடிஸ்டுகள், பாப்டிஸ்டுகள், பிரெஸ்பிடேரியன்கள், கத்தோலிக்கர்கள், ஆர்த்தோடாக்ஸ், யூதன், மற்றும் எல்லாமும் கலந்த ஒரு கூட்டமாக இருந்தோம். சிலசமயங்களில் நீங்கள் ஜனங்களுடைய கிறிஸ்தவ சபை சார்ந்த போதகங்களின் பேரில் நீங்கள் நடந்து செல்வீர்களானால், அது ஊழியக்காரர்கள் ஜனங்களை சபையிலிருந்து விலக்கி வைக்கச்செய்துவிடும், உண்மையாகவே ஜெபிக்கப்படும்படி வருவதற்கு அவசியமாயிருந்த அவர்களில் சிலரை அவ்வாறு செய்துவிடும். எனவே நான் எல்லாவற்றிலும் பேரில் உள்ள (காரியங்களை அப்படியே நிறுத்திவிடுகிறேன், ஆனால் வேதாகமத்தினுடைய மகத்தான சுவிசேஷ அடிப்படை போதகங்களான, கிறிஸ்துவின் மரணம், அடக்கம், உயிர்த்தெழுதல் பற்றி போதகங்களையே (பேசுகிறேன்); அடிப்படையான சுவிசேஷ போதகம் என்பவை என்னவென்று உங்களுக்குத் தெரியுமே. 9ஆனால் இப்பொழுது இங்கே கூடாரத்தில், இருபது வருடங்களுக்கு முன்பு தேவன் எனக்குக் கொடுத்த என்னுடைய சிறு சபையில், என்னுடைய நம்பிக்கைகள் என்னவோ அவைகளை என்னால் போதிக்க முடியும்படி நான் - நான் தயங்குவதில்லை. மேலும் பிறகு, நமக்கு இங்கே எந்த அங்கத்துவமும் கிடையாது, நாம் - யோடு ஒருவர் ஐக்கியத்தை உடையவர்களாயிருக்கிறோம். நீங்கள் இங்கே இன்றிரவு இருக்கையில், ஒரு அங்கத்தினராக இருக்கிறீர்கள், நீங்கள் ஒரு அங்கத்தினராக இருக்கிறீர்கள். எங்களுக்கு எந்த - எந்த அங்கத்தினர்களும் கிடையாது, வெறுமனே ஐக்கியம் தான். 10நாம் இப்பொழுது, இங்கே உள்ளேயிருக்கையில், நீங்கள், “சகோதரன் பிரன்ஹாமே, நான் அதனோடு இணங்க மாட்டேன்” என்று கூறும் காரியங்களை நீங்கள் கண்டுபிடிக்கலாம். நல்லது, இப்பொழுது, உங்களால் இணங்க முடியாவிட்டால், நீங்கள் இதைச் செய்யுங்கள், நான் ஒரு மகத்தான பெரிய செர்ரி பையை சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, ஒரு கொட்டை அகப்பட்டால், நான் செய்கிற அதே முறையை நீங்களும் பயன்படுத்துங்கள். நான் செர்ரி பையை புசிப்பதை நிறுத்தி விட மாட்டேன், நான் அப்படியே கொட்டையைப் புசிப்பதில்லை. நான் அப்படியே கொட்டையை வெளியே எறிந்து விட்டு, செர்ரி பையைத் தொடர்ந்து புசித்துக்கொண்டேயிருப்பேன். அல்லது நீங்கள் கோழிக்கறியைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, அதனுடைய காலில் உள்ள ஒரு எலும்பைக் கொண்டிருக்க வேண்டியிருக்கும் என்பது உங்களுக்குத் தெரியும். எனவே கோழிக்கறியை தூர எறிந்து விட வேண்டாம், ஏனென்றால் உங்களுக்கு எலும்பு அகப்பட்டது, வெறுமனே அந்த எலும்பைத் தூர எறிந்து விடுங்கள். நீங்கள் நினைப்பது எலும்பைப் பெற்றிருக்குமானால், அல்லது... நல்லது, நீங்கள் இப்பொழுதே அதைத் தூர எறிந்து விட்டு, எது சரியாக இருக்கிறது என்று நீங்கள் நினைப்பதை எடுத்துக்கொள்ளுங்கள். 11இப்பொழுது, தேவனுடைய சபை என்பது ஜனங்களுடைய சித்தமாக இல்லை என்பதை நாம் காண்கிறோம். அது தெரிந்து கொள்ளுதலாக இருக்கிறது. தெரிந்து கொள்ளுதல் தேவனுக்குள் இருக்கிறது. ஆதியிலே, விசுவாசத்தின் தோற்றுனராக இருந்த, ஆபிரகாமை தேவன் அழைத்தார். தேவனே ஸ்தாபகராக (Founder) இருந்தார், நிச்சயமாக. ஆனால், ஆபிரகாமோ, ஆதியிலே, கல்தேயாவிலுள்ள, ஊர் பட்டணத்திலிருந்து, சிநெயார் சமபூமியிலிருந்து அழைக்கப்பட்டான், அது அவனுக்குச் சொந்தமான எந்த தகுதியைக் கொண்டுமல்ல. தேவன் அவனை நிபந்தனையற்ற விதமாக இரட்சித்து, அவனுடைய சந்ததி எல்லாருக்குமான வாக்குத்தத்தத்தை நிபந்தனையற்ற விதமாக அவனுக்குக் கொடுத்தார். 12இயேசு, அவர் தோன்றின போது, அவர், “என் பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால், அவனால் என்னிடத்தில் வர முடியாது” என்று கூறினார். அப்படியானால், தேவனிடம் வருவதைக் குறித்து உங்களுக்கு எதுவுமே கிடையாது. தேவன் தான் உங்களை இயேசுவிடம் இழுத்துக்கொள்கிறார். “என்னிடத்தில் வருகிற ஒருவனையும் நான் புறம்பே தள்ளுவதில்லை, என் வசனங்களைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு; அவன் நியாயத்தீர்ப்புக்கு உட்படாமல், மரணத்தை விட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறான். என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம் பண்ணுகிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு.” நிகழ்காலம் “நான் அவனைக் கடைசிநாட்களில் எழுப்புவேன்.” அதைத்தான் அவர் சொல்லியிருக்கிறார், எனவே நான் வெறுமனே நான் அவருடைய வார்த்தையை மேற்கோள் காட்டிக் கொண்டிருக்கிறேன். அது சாத்தியம் என்று நான் விசுவாசிக்கிறேன். 13ஆகையால், தேவன் திருஷ்டாந்தங்களை அமைத்திருக்கிறார் என்று நான் விசுவாசிக்கிறேன். அவர் ஆபிரகாமை நிபந்தனையற்றவிதமாக இரட்சித்தார். அவர் மனிதனோடு ஒரு உடன்படிக்கையை செய்தார், மனிதன் எப்போதுமே தன்னுடைய உடன்படிக்கையை முறித்துப் போடுகிறான். ஆனால் மனிதன் எப்போதுமே தன்னைத்தானே இரட்சித்துக்கொள்ளக்கூடிய ஏதோவொரு வழியைக் கண்டுபிடிக்க முயற்சித்து, தனக்குத்தானே உண்டாக்கிக்கொள்ள முயலுகிறான். அது கடும் முயற்சி செய்வதிலிருந்து வருகிறது : ஏதேன் தோட்டத்தில், மனிதன் தான் பாவம் செய்து விட்டான் என்பதை உணர்ந்து கொண்ட போது, அவன் தனக்குத்தானே ஒரு மார்க்கத்தை உண்டுபண்ண முயன்றான், அது ஒரு மூடலாக இருக்கிறது. மதம் என்ற வார்த்தைக்கு “மூடல்” என்று அர்த்தம். ஆதாமும் ஏவாளும் அத்தி இலைகளை ஒன்றாக தைத்து, தங்களுக்குத் தாங்களே ஒரு மார்க்கத்தை உண்டு பண்ணினார்கள். அது முதற்கொண்டு கீழே காலங்களினூாக அது மனிதனுடைய கடும் முயற்சியாக இருந்து வருகிறது, அவன் தன்னைத்தானே இரட்சித்துக்கொள்ள ஏதோவொன்றைச் செய்ய முயற்சிக்கிறான். ஆனால் நீங்கள் கிருபையின் மூலமாகவும், தெரிந்து கொள்ளுதலின் மூலமாகவும், தேவனுடைய முன்னறிவின் மூலமாகவும், முன்குறிக்கப்படுதலின் மூலமாகவும், முன்குறிப்பின் மூலமாகவும் இரட்சிக்கப்பட்டீர்கள். எபேசு சபைக்குப் பவுல் சொல்லுகிறான், “தேவன் உலகத் தோற்றத்துக்கு முன்பே கிறிஸ்துவுக்குள் நம்மை முன்குறித்திருக்கிறார்” என்று. அதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள்! “உலகத் தோற்றத்துக்கு முன்பே கிறிஸ்துவுக்குள் நம்மை முன்குறித்திருக்கிறார்.” அப்படியானால் எதைக் குறித்து கவலைப்படுகிறீர்கள்? கவலையிலிருந்து தூர விலகியிருங்கள், நீங்கள் எப்பொழுதும் கண்டிருக்கக் கூடிய சிருஷ்டிகளிலேயே நாம் மிகவும் சந்தோஷமான சிருஷ்டிகளாக இருக்கிறோம். என்னே, அதை விசுவாசித்து விட்டு, உங்களால் எப்படி சந்தோஷப்படாமல் இருக்க முடியும்? 14நான் வழக்கமாக வயதான சகோதரன் பாஸ்வர்த் அவர்களைக் காண்கிறேன், அவர், “சகோதரன் பிரன்ஹாம்!” என்றார். நான், “சகோதரன் பாஸ்வர்த் அவர்களே, நீங்கள் இந்தக்காலையில் எவ்விதம் உணருகிறீர்கள்?” என்று கேட்டேன். அவர், அதே பழைய தொல்லை திரும்பவும் என்மேல் வந்துவிட்டது, சகோதரன் பிரன்ஹாமே“ என்றார். நான், அதே பழைய தொல்லையா, என்ன அது? என்றேன். “அப்படியே மிகவும் சந்தோஷமாய் இருப்பது, என்னால் தூங்கவே முடியவில்லை!” என்றார். நான் சொன்னேன்... அவர், சகோதரன் பிரன்ஹாமே, நான் விசுவாசிப்பதை விசுவாசித்துக்கொண்டு, என்னால் எப்படி சந்தோஷமாக இல்லாமல் இருக்க முடியும்?“ என்றேன். பாருங்கள், அது சரியே. 15கிறிஸ்து ஏற்கனவே ஒரு பாவியான உங்கள் ஸ்தானத்தை எடுத்துக்கொண்டு விட்டார் என்பது உங்களுக்குத் தெரியும். அவர் மரித்தார். தேவன் அவரை ஏற்றுக்கொண்டார். அவர் மீண்டும் உயிரோடெழுந்து, அவருடைய மகத்துவத்தின் வலது பாரிசத்தில் உட்கார்ந்திருக்கிறார். தேவன், “இவர் என்னுடைய நேச குமாரன், இவரில் நான் பிரியமாயிருக்கிறேன், இவருக்குச் செவிகொடுங்கள்” என்றார். அங்கே அவர் இருக்கிறார், அவர் வாசலாகவும், கதவாகவும், வழியாகவும், சத்தியமாகவும், ஜீவனாகவும் இருக்கிறார். நாம் எவ்வாறு அவருக்குள் வருகிறோம்? அவரே சபையாக இருக்கிறார். சபைக்கு நித்திய ஜீவன் உண்டு, மாசற்றவர்களாயும் குற்றமில்லாதவர்களாயும் தரிசனமாவதற்கு (appear) அது ஏற்கனவே முன்குறிக்கப்பட்டுள்ளது. அது அங்கேயிருக்கும் என்று தேவன் சொல்லியிருக்கிறார், அது அங்கே இருக்கத்தான் போகிறது! இப்பொழுது, தேவன் அவ்வாறு சொல்லியிருக்கிறார். எனவே அப்படியானால், நாம் எவ்வாறு சபைக்குள் வருகிறோம் ? ஒரே அங்கத்துவத்தினாலேயா? இல்லை. யாரோ ஒருவருடைய கரத்தைக் குலுக்குவதின் மூலமாகவா? இல்லை. ஏதோவொரு வடிவ அல்லது ஒரு...? இல்லை. ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டு, அந்த சரீரத்தின் அங்கத்தினர்களாக ஆகிறோம்.“ 1 கொரிந்தியர் 12, ”ஒரே ஆவியினாலே நாமெல்லாரும் ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டு, அந்த சரீரத்தின் அங்கத்தினர்களாக ஆகிறோம்“ என்று கூறுகிறது. அது எவ்வாறு? கிறிஸ்துவின் சரீரத்திற்குள் நம்மை அமர்த்துகிற ஆவிக்குரிய ஞானஸ்நானத்தினால், அப்போது நாம் தேவனுடைய ஆவியால் நிறைக்கப்படுகிறோம். 16எவ்வளவு காலம் வரை முத்திரையிடப்பட்டிருக்கிறோம்? எபேசியர் 4:30, “நீங்கள் மீட்கப்படும் நாள் மட்டும் முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்.” ஒரு எழுப்புதல் தொடங்கி வேறொரு எழுப்புதல் வரை அல்ல; ஆனால், “நீங்கள் மீட்கப்படும் நாள் மட்டும்.” ஆமென். நித்திய ஜீவன்! நித்தியம் என்பது வெறுமனே ஒரு சிறு.... அல்ல, ஒரு குறிப்பிட்ட கால அளவு அல்ல, நித்தியம் என்பது, என்றென்றும் நித்தியமாக ஒரு சோள தானியமானது ஒரு முட்செடியாக ஆக முடிவதைக் காட்டிலும் இனி மரிக்க முடியாது. ஒரு மனிதன் தேவனுடைய ஆவியால் பிறந்திருந்தால், அவன் தானாகவே அந்த ஜீவியத்தை ஜீவிக்கிறான். குடித்தல், புகைப்பிடித்தல், சூதாட்டம், குடித்தல், சபித்தல், பொய்யாணையிடுதல், அவை பாவமல்ல, அவை பாவத்தின் தன்மைகளாகும். நீங்கள் ஒரு பாவியாக இருக்கிற காரணத்தினால், ஆகையால் தான் அந்தக் காரியங்கள் புறப்பட்டு வருகின்றன. ஆனால் நீங்கள் ஒரு விசுவாசியாக இருந்தால், அந்தக் காரியங்கள் புறப்பட்டு வர முடியாது, ஏனென்றால் கசப்பும் தித்திப்புமான தண்ணீர் ஒரே ஊற்றுக்கண்ணிலிருந்து வர முடியாது. ஒரு முட்செடியால் முடிந்தது. கோதுமை தானியத்தினால் (corn of wheat) முட்செடிகளைப் பிறப்பிக்க முடியாது, ஏனென்றால் அதனுடைய சுபாவமே கோதுமை தான். அது எப்படியிருக்கிறதோ அதையே அது உற்பத்தி செய்ய வேண்டும். பரிசுத்த ஆவியானவர் உள்ளே இருப்பாரானால், அது கிறிஸ்துவின் ஜீவனை உற்பத்தி செய்யும். ஆமென். அதுதான் விசுவாசமாக இருக்கிறது. ஆமென். சரி. 17இப்பொழுது, அதன்பிறகு நாம் அதைக் கண்டு கொள்கிறோம், நாம் இப்பொழுது அந்த நிழல்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறோம். மேலும் அதன்பிறகு, ஒவ்வொரு கோத்திரப்பிதாக்களிடத்திலும் கிறிஸ்து இருப்பதையும், அல்லது காலங்களினூடாக வழிவழியாக, தேவன் நமக்கு திருஷ்டாந்தத்தை தருவதை நாம் காண்கிறோம். ஆபிரகாமில், தேவன் தெரிந்துகொள்ளுதலை உடையவராயிருந்தார். ஈசாக்கினிடத்தில், நீதிமானாக்கப்படுதல், அழைக்கப்படுதல். தேவன் இயேசுவுக்குச் செய்தது போன்று, ஈசாக்கை, அவன் பிறப்பதற்குக் கூட முன்பு தேவன் அவனை அழைத்து, அவனுடைய பெயரை அவனுக்குக் கொடுத்து, எல்லாவற்றையும் செய்தார். அதன்பிறகு நான் கவனிக்கிறேன், ஈசாக்கு பரிபூரணமாக.... அதைப் பிடித்துக்கொள்ள நமக்கு நேரமில்லை, ஆனால் வாக்குத்தத்தம் மூலமாக, தன்னுடைய குமாரனுக்கு ஒரே குமாரனாகிய ஈசாக்கை நீங்கள் கவனித்தீர்களா, அவன் விறகை ஒன்றாகக் கட்டி அதே மலையின் மேல் சுமந்து, தன்னுடைய கைகள் கட்டப்பட்டு, ஒரு பலியாக செலுத்தப்பட்டதைக் கவனித்தீர்களா. ஆபிரகாம், அவன் தன்னுடைய சொந்த குமாரனுடைய ஜீவனை எடுக்கத் துவங்கின போது, ஒரு சிறிய மிருகம், ஒரு சிறு செம்மறியாடு கத்தினது, செம்மறி ஆட்டுக்கடாவானது மாட்டப்பட்டு (hooked), அந்த வனாந்தரத்தில் தன்னுடைய கொம்புகளால் பற்றிக்கொளுவியிருந்தது. அப்போது பரிசுத்த ஆவியானவர் வானத்திலிலுருந்து கூப்பிட்டு, உன் கையைப் போடாதே“ (என்றார்). அவன் சென்று, அந்த ஆட்டுக்குட்டியை எடுத்து, அவனுக்குப் பதிலாக பலியாக செலுத்தினான். அது உலகத்தோற்ற முதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியாக இருந்தது. அங்கே தான் காரியம், அழகான காட்சி. 18ஆபிரகாமில், அழைத்தலும், தெரிந்துகொள்ளுதலும். ஈசாக்கில், நீதிமானாக்கப்படுதல். யாக்கோபில், கிருபை யாக்கோபுடைய ஜீவியத்தை எப்பொழுதாவது வாசிக்கும் எவரும், நீங்கள் கிருபையில் விசுவாசம் கொண்டாக வேண்டும் என்பதை அறிந்து கொள்வீர்கள். யாக்கோபில், அது கிருபையாக இருக்கிறது. யோசேப்பில், பரிபூரணம், வேதாகமத்தில், அவனுக்கு விரோதமாக எதுவுமில்லை; பரிபூரண மனிதன், கிறிஸ்துவின் பரிபூரணம். அதன்பிறகு கோத்திரப்பிதாக்கள் எல்லாருமே எகிப்துக்குச் சென்று, அங்கே அவர்கள் ஜீவனம் பண்ணினார்கள் என்பதை நாம் கண்டுகொண்டோம். அவர்களுடைய கோத்திரங்கள் அதிசீக்கிரமாக விருத்தியாகி, அவர்கள் அந்த தேசத்தையே மூடிக்கொண்டார்கள், ஏனென்றால் தேவன் அதை ஆபிரகாமுக்கு வாக்குப்பண்ணியிருந்தார். 19தேவனுடைய வார்த்தை நிச்சயமாக ஒவ்வொரு முறையும் நிறைவேறியே ஆக வேண்டும். தேவனுடைய தீர்க்கதரிசன பற்கள் மெதுவாகத்தான் அரைக்கிறது, ஆனால் நிச்சயமாக அரைத்துக்கொண்டு தான் இருக்கிறது. நீங்கள் தவறு செய்வீர்களானால், நீங்கள் கவனிக்கப்படுவதில்லை என்று நினைக்கலாம். ஆனால் வாலிபனே அல்லது வாலிப பெண்ணே, இதை சற்று ஞாபகம் கொள், இந்நாட்களில் ஒன்றில், அது சரியாக உன்னுடைய கதவை நோக்கி அரைத்துக்கொண்டு வரத்தான் போகிறது. அது எப்போது, எப்படி என்று நீ வியப்படைவாய், ஆனால் அது அங்கேயிருக்கும். ஒவ்வொரு முறையும் நீ விதைத்ததை அறுப்பாய். தேவன் அதை உரைத்திருக்கிறார், அது அவ்விதமே இருந்தாக வேண்டும். உம்முடைய வார்த்தை பரலோகத்தில் என்றென்றுமாக நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது. அது ஏற்கனவே கூறப்பட்டு விட்டது. அங்கே மேலே அதைக் குறித்து அவர்கள் தர்க்கம் செய்வதில்லை; அது ஏற்கனவே நிலைநிறுத்தப்பட்டு விட்டது. நாமோ அதைக் குறித்து தர்க்கம் செய்கிறோம். ஆனால், மகிமையில், அது நிலைநிறுத்தப்பட்டு விட்டது. தேவன் எதையாவது கூறும்போது, அது அவ்வாறே இருந்தாக வேண்டும். நல்லது, அது அற்புதமாக இல்லையா? இன்றிரவு உங்களால் அதை உங்கள் இருதயத்தில் நிலைநிறுத்த முடியவில்லையா? “கர்த்தராகிய இயேசுவே, நான் உம்மை விசுவாசிக்கிறேன். அது அதைத் தீர்த்து வைக்கிறது. அல்லேலூயா! நான் இப்பொழுதே வருகிறேன், ஆவியின் ஞானஸ்நானத்தை நீர் எனக்குக் கொடுக்க வேண்டுமென்று விரும்புகிறேன்.” அப்பொழுது நீங்கள் சரியாக அங்கேயே அதைப் பெற்றுக்கொள்வீர்கள். சரி. அப்போது, என்றென்றுமாக, நீங்கள் மீட்கப்படும் நாள் மட்டும், தேவன் உங்களைப் பரிசுத்த ஆவியைக் கொண்டு முத்திரையிடுவார். சரி. 20அதன்பிறகு, அடுத்த இரவு பாடத்தில், நாம் கவனிக்கிறோம், யோசேப்பு தன்னுடைய எலும்புகளைக் குறித்து குறிப்பிடுவதை நாம் காண்கிறோம். அவன் எவ்வளவு பரிபூரணமாக, கிறிஸ்துவில் முன்னடையாளமாக இருந்தான் என்றும், அவனுடைய அங்கிக்கும், எல்லாவற்றிற்கும் கூட கிறிஸ்துவுக்குள் முன்னடையாளமாக இருந்தான். இப்போது வரையில் எல்லாமே பரிபூரணமாக கிறிஸ்துவுக்குள் நிறைவேறி வந்திருக்கிறது. கவனியுங்கள். அவர் இறுதியான மனிதராகவும், ஆபிரகாமுடைய சந்ததியின் கடைசி பலியாகவும் இருந்தார். அவன் அந்த மலையின் மேல் பலிகளைச் செலுத்தின போது, நாம் அதைக் கண்டு கொள்கிறோம் (இல்லையா?), சிறிய வெளிச்சம் அதற்கு இடையே போய், அந்த ஆணையை உறுதிப்படுத்தினது. தேவன் அங்கே நின்று, கல்வாரியில் அந்த உறுதிமொழியைச் செய்தார், அந்நாட்களில் ஒரு உடன்படிக்கையைச் செய்யும் விதத்தை நாம் கண்டுகொண்டது போல, அவர் அந்த ஆணையை எடுத்து, வேதவாக்கியத்தை (Scripture), அல்லது எழுதப்பட்டதைக் கிழித்து, ஒரு பாகத்தை எடுத்துக்கொண்டார். 21நாம் இன்று கரங்களைக் குலுக்குவது போல. இந்தியாவில், அல்லது சீனாவில் என்று நம்புகிறேன், அவர்கள் ஒருவர் மற்றவர் மேல் கொஞ்சம் உப்பை எறிகிறார்கள். ஒரு ஆணையின் உறுதிப்பாட்டிற்காக அவர்கள் அநேக நேரங்களில் ஒரு பிள்ளையை ஒருவர் மற்றவருக்குக் கொடுக்கிறார்கள். ஆனால் கிழக்கத்திய காலங்களில், அவர்கள் அதைத் தாளின் மேல் எழுதி, அவர்கள் ஒரு மிருகத்தைக் கொன்று, மரித்த மிருகத்தின் துண்டங்களுக்கு இடையே நின்று, அந்தத் துண்டு காகிதத்தைக் கிழித்து, ஒன்றாக்கி, அதை ஒவ்வொருவருக்கும் கொடுக்கிறார்கள். பிறகு அது ஒன்றாக கொண்டு வரப்பட்ட போது, அந்தக் காகிதத்தின் ஒவ்வொரு துண்டும் கட்டாயம் மற்ற துண்டோடு பொருந்த வேண்டும். 22அழகாயுள்ளதே! தேவன் கிறிஸ்துவை கல்வாரியில் எடுத்து, அவரை, ஆத்துமாவும் சரீரமுமாகக் கிழித்தார். அவர் அதை அனுப்பினார், சரீரத்தை மேலே அவருடைய வலது பாரிசத்திற்கு அனுப்பி, பரிசுத்த ஆவியைத் திரும்ப அனுப்பினார். ஜனங்களோடு செய்து கொண்ட உடன்படிக்கை! ஆபிரகாம் செய்ததைப் போன்று, நீங்கள் விசுவாசத்தின் மூலமாக, விசுவாசிக்கிறீர்கள், அவனுடைய விசுவாசத்தின் ஒரு உறுதிப்பாட்டிற்காக அவர் விருத்தசேதனமாகிய முத்திரையைத் தந்தருளினார். நீங்கள் இயேசுவை விசுவாசித்து, அவரை உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளும் போது, உங்கள் விசுவாசத்தின் ஒரு உறுதிப்பாடாக, தேவன் உங்களுக்கு பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தைக் கொடுக்கிறார். “விசுவாசித்தும் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளவில்லை” என்று நீங்கள் கூறலாம். (அப்படியானால்) உங்கள் விசுவாசத்தோடு ஏதோ தவறு இருக்கிறது. விசுவாசி உண்மையாகவே முழுமையாக ஒப்புவிப்பதற்குள் வரும் அந்த நிமிடத்திலேயே தேவன் இருதயத்தை விருத்தசேதனம் செய்கிறார். ஆமென். நல்லது, நிச்சயமாக ஏதோவொன்று செய்யப்பட்டிருக்க வேண்டும், நான் அது திரும்பி வருவதைக் கூட உணருகிறேன் என்று கூறுலாம். அதைப் பெற்றுக்கொள்ளுங்கள்! விசுவாசி கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பேரில் திடமான விசுவாசத்தைக் கொண்டிருக்கும் போது, அவனுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுக்க தேவன் கடமைப்பட்டவராயிருக்கிறார் (under obligation). அவனுடைய விசுவாசத்தின் உறுதிப்பாடு! “சகோதரன் பிரன்ஹாமே, காரியம் தான் என்ன?” என்று கேட்கலாம். வெறுமனே உங்கள் விசுவாசம், அவ்வளவு தான். நீங்கள் உண்மையாகவே விசுவாசிப்பீர்களானால், அதை உங்களுக்குக் கொடுக்க தேவன் அங்கேயிருக்கிறார். “பேதுரு இந்த வார்த்தைகளைப் பேசிக்கொண்டிருக்கையில், வசனத்தைக் கேட்டவர்கள் மேல் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார்.” அது சரிதானா? அப்போஸ்தலர் 10:49. சரி, கவனியுங்கள், பரிசுத்த ஆவியும் அக்கினியும் வானத்திலிருந்து வந்து, கறைகள் எல்லாவற்றையும் சுட்டெரித்து (burnt out), இருதயத்தை விருத்தசேதனம் பண்ணி , உபரியாயிருக்கும் எல்லாவற்றையும் வெட்டியெறிந்து, ஒரு புது சிருஷ்டியாக ஆகிறீர்கள். 23இப்பொழுது, பிறகு நாநூறு வருடங்கள் கழித்து, நாம் அதைக் கண்டுகொள்கிறோம்.... கடந்த இரவில், நாம் கோத்திரப்பிதாக்களுடைய முன்னடையாளத்தைக் கொண்டிருந்தோம். வரிகளுக்கு இடையே திரும்பி வந்து, அவர்கள் ஏன் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தில் அடக்கம் பண்ணப்பட விரும்பினார்கள் என்பதையும் பார்த்தோம். உங்களுக்கு அது விருப்பமாக இருந்ததா? நீங்கள் அதை அனுபவித்து மகிழ்ந்தீர்களா? ஏன், இப்பொழுது, அது அங்கே எழுதப்பட்டிருக்கவில்லை, ஆனால் நீங்கள் அதைக் காண்கிறீர்கள். 24ஆபிரகாமைக் குறித்து நாம் பேசிக் கொண்டிருந்தது போன்று, தேவன் எப்படியாக சாராளையும் ஆபிரகாமையும் எடுத்து, அவர்களுக்கு நூறு வயதாக இருந்தபோது, அவர்களைத் திரும்பவும் வாலிபனாகவும், வாலிப பெண்ணாகவும் மாற்றி, அவர்களுக்கு இந்தக் குழந்தையைக் கொடுத்தார். முதலாவது, அது ஒருவிதத்தில் பார்க்க கடினமாகத்தான் இருந்தது. ஆனால் நீங்கள் வேதவாக்கியத்தை நோக்கி, அங்கே கருத்தூன்றி பார்த்த பிறகு, என்ன சம்பவித்தது என்பதைக் கண்டுகொண்டோம், அது சாத்தியம் என்பதை நீங்கள் காண்கிறீர்கள். அவர் என்ன செய்து கொண்டிருந்தார்? வயதாகி, தலை நரைத்து, சுருக்கம் விழுந்த நாம் ஏதோவொரு நாளில், மறுபடியுமாக திரும்ப வாலிப் மனிதனாகவும், வாலிப பெண்ணாகவும் குதித்து வெளியே வருவோம் (spring back) என்ற அவருடைய வார்த்தையை உறுதிப்படுத்திக் கொண்டிருந்தார். தேவன் நமக்கு ஜீவனைக் கொடுத்தார், நாம் முதிர்ச்சியடைகிறோம், மரணமானது துவங்கி, நம்மை ஒரு புதிய இடத்திற்கு எடுத்துக்கொண்டு போய் விடுகிறது. ஆனால் மரணத்தினால் செய்ய முடிந்த எல்லாமே, நம்மை ஒரு புதிய இடத்திற்கு எடுத்துக்கொண்டு செல்வது தான், அதன்பிறகு அது முடிந்து விடுகிறது. அதன்பிறகு எல்லா - அந்தப் பழைய சந்தேகத்தின் பாகமும் மற்றும் எல்லாமுமே, அங்கே உள்ளே மனித ஜீவியத்தைப் போன்று இருக்கிறவைகள் வெளியே போய் விட்டது, அதன்பிறகு அங்கே பரிபூரணத்தைத் தவிர வேறு எதுவும் மீதியாக விடப்படுதில்லை. இந்த சரீரமானது பரிபூரணத்தில் இருந்தபோது, அது எப்படி இருந்தது, உயிர்த்தெழுதலில் அது உயிர்த்தெழும்போது, தேவன் எவ்வாறு நோக்கம் கொண்டிருந்தாரோ, அவ்வாறு அது பரிபூரணமாகவே இருக்கும். ஆமென். ஓ, நான் அதைக் குறித்து சிந்தித்துப் பார்க்கும் போது, என்னுடைய இருதயம் திடீர் மீள்திருப்பத்திற்கு (flipflops) போய் விடுகிறேன்! ஆம். அது வெறும் ஒரு கற்பனை கனவல்ல. அது கர்த்தர் உரைக்கிறதாவது என்பதாக இருக்கிறது. தேவன் அவ்வண்ணமாகக் கூறியிருக்கிறார், அப்படியானால் நான் என்னுடைய ஜீவனை சரியாக அங்கே வைப்பேன். ஆம், ஐயா. தேவன் அவ்வண்ணமாகக் கூறியிருக்கிறார், அது அதை என்றென்றுமாகத் தீர்த்துவைக்கிறது. உ-ஊ. அது பரலோகத்தில் தீர்க்கப்பட்டு விட்டது, பரலோகத்தின் ஒரு சிறு பாகம் நமக்குள்ளே இருக்குமானால், அது அதை அங்கேயே தீர்த்து வைக்க வேண்டும். அவ்வளவு தான். அது அதைச் சரியாக ஆக்கி விடுகிறது. “தேவனே, நீர் அவ்விதம் கூறியிருக்கிறீர். நான் அதை விசுவாசிக்கிறேன், அவ்வளவு தான், அது போதுமானது.” 25இப்பொழுது, அந்தப் பிரயாணத்திற்கு சற்று முன்பாக, நாம் அவர்களைக் கொண்டு வருவோம். மோசே எத்திரோவின் ஆடுகளை மேய்த்துக் கொண்டு வந்தபோது, தேவன் அவனிடம் பேசினார் என்பதை நாம் காண நேர்ந்தது. மோசே அவருடைய மகிமையைக் காண விரும்பினான். தேவன் அவனுக்கு தம்முடைய மகிமையைக் காண்பித்தார், அது அற்புதங்களை நடப்பித்தலாக இருந்தது, மற்றும் தெய்வீக சுகமளித்தல். அது சரிதானா? அது நிச்சயமாக தேவனுடைய மகிமையாக இருக்க வேண்டும். ஷெக்கினா மகிமையைக் குறித்து பேசுகிறீர்கள், நாம் இன்றிரவு அதைக் கொண்டிருக்க வேண்டும்! 26சகோதரனே, நாமெல்லாரும் கிறிஸ்தவர்களைக் கொண்ட கூட்டமாக (Christendom) இருக்கிறோம், நாம் கர்த்தருடைய வருகையையும், சபையின் எடுத்துக்கொள்ளப்படுதலையும், வார்த்தையைக் குறித்த எந்த அறிவையும் பெற்றிருக்கிற எல்லாவற்றிற்காகவும் எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறோம். நல்லது, தெய்வீக சுகமளித்தலுக்காக போதுமான விசுவாசத்தை நம்மால் கொண்டிருக்க முடியாவிட்டால், நாம் எப்படி எடுத்துக்கொள்ளப்படுதலுக்கேற்ற விசுவாசத்தைக் கொண்டிருக்கப் போகிறோம்? ஓ, அங்கே ஒரு மகத்தான அழைப்பு புறப்பட்டு வந்து கொண்டிருக்கிறது என்று நான் விசுவாசிக்கிறேன். தாவீது கூறினதுபோன்று, வரைக்குமாக அவன் அங்கேயே கிடந்து, காத்துக் கொண்டிருந்தான், அவன் கவனமாகக் கேட்டபடி காத்துக் கொண்டிருந்தான். முசுக்கட்டைச் செடியின் இலைகளினூடாக வேகமாக செல்லுகிற காற்று அடிக்கிற சத்தத்தைக் கேட்கையில், அது சுழன்று அடித்துக் கொண்டிருந்தது. அப்போது தேவன் அவனுக்கு முன்பாகப் போய்க் கொண்டிருந்தார் என்பதை அவன் அறிந்து கொண்டான். ஓ சகோதரனே, நான் இலைகளில் வேகமாக அடிக்கும் (அதையே) கவனித்துக் கேட்டுக் கொண்டிருக்கிறேன், முசுக்கட்டை செடிகளில் கேட்கும் சத்தத்தையே கவனித்துக் கொண்டிருக்கிறேன். தேவன் யுத்தத்தின் முன்பாகப் போய்க் கொண்டிருக்கிறார், அப்படியானால் நாம் எழுந்து, தேவனுடைய முழு சர்வாயுதவர்க்கத்தையும் தரித்து, பட்டயத்தை உருவினவர்களாய், அதற்குப்பிறகே போவோம்! அப்போது, யுத்தம் நம்முடையதாகி விடுகிறது. அடையாளங்கள் மற்றும் அற்புதங்கள் மூலமாக, தேவனுடைய கரம் தொடர்ந்து செல்வதை நாம் காணும் போது, நாமும் தொடர்ந்து பின்பற்றிச் செல்ல துவங்குவோம். 27இப்பொழுது, பிறகு, மோசே தன்னுடைய ஆசாரிய வேலையில் (clergy work) ஓய்வேயில்லாமல் பிசியாகி விட்டதைக் கண்டு கொள்கிறோம், அவன் ஏதோவொன்றை மறந்து விட்டான். அவன் - அவன் - அவன் செய்திருக்க வேண்டிய மிகவும் அடிப்படையான காரியத்தை அவன் மறந்து போய் விட்டான். அவன் சரியாக விடுதலைக்கு சற்று முன்பாக, அவன் தன்னுடைய குமாரனை விருத்தசேதனம் இல்லாமல் எகிப்திற்கு அழைத்துக் கொண்டு போனான். மேலும் சிப்போராள்.... தேவன் அந்த சத்திரத்தில் வைத்து, அவனைக் கொன்று போட்டிருப்பார், ஆனால் சிப்போராளோ அந்தப் பிள்ளையை விருத்தசேதனம் பண்ணினாள். உடன்படிக்கையின் முத்திரை, உங்களுக்கு அது புரிகிறதா? அங்கே விடுதலை இருக்க முடிவதற்கு முன்பாக, ஒவ்வொரு நபரும் கட்டாயமாக உடன்படிக்கையில் இருந்தாக வேண்டும், ஏனென்றால் இன்று தேவனிடம் ஒரு உடன்படிக்கை இருக்கிறது. இப்படியாக சிப்போராள் பிள்ளையை விருத்தசேதனம் பண்ணினாள், அந்த உடன்படிக்கை, அது தேவ கோபத்தை திருப்பி விட்டது. 28மேலும், நண்பர்களே, இன்று, நாமெல்லாரும் மகத்தான எழுப்புதல்களைக் கொண்டிருக்கிறோம், அல்லது அவைகளைக் கொண்டிருக்க முயற்சிக்கிறோம், ஆனால் பரிசுத்த ஆவியாகிய, புறக்கணிக்கப்பட்ட கல்லை மறந்து கொண்டிருக்கிறோம், அந்த அதே... கலந்து, கல் துண்டுகளை ஒன்றாக பற்றிக்கொள்ளும் சுண்ணாம்பு சாந்து (Mortar). அது இல்லாமல் நாம் எவ்வாறு இதைச் செய்யப் போகிறோம்? தேவன், “நான் என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய இருதயப் பலகைகளில் எழுதுவது சம்பவித்தாக வேண்டியிருந்தது. கற்பனையின் மேல் கற்பனையும், பிரமாணத்தின் மேல் பிரமாணமும், இங்கே கொஞ்சமும் அங்கே கொஞ்சமுமாம். எது நலமானதோ அதை இறுகப் பற்றிக்கொள்ளுங்கள். பரியாச உதடுகளினாலும் அந்நிய பாஷையினாலும் இந்த ஜனத்தோடே பேசுவேன். இதுவே இளைப்பாறுதல்.” ஏசாயா 28. இவை எல்லாவற்றையும் அவர்கள் கேட்காமல், புறக்கணித்து, தங்கள் தலையை ஆட்டுகிறார்கள்.“ அழிவுக்காகவே, மனிதன் தன்னுடைய வழியில் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறான். 29அதன்பிறகு, தேவனுடைய கோபம் நீங்கின பிறகு, இப்பொழுது இஸ்ரவேல் புத்திரர்களை விடுவிக்கும்படியாக அவர்கள் எகிப்தில் இருந்தார்கள். இது ஒரு அழகான அதிகாரம் என்று நினைக்கிறேன். நாம் அவை எல்லாவற்றிற்கும் போகாமல் இருந்தாலும், நான் நிச்சயமாக எப்படியாவது அதிலிருந்து சிலவற்றை வாசித்தாக வேண்டும். இப்பொழுது, நாம் 12ம் அதிகாரத்தில் துவங்கலாம், யாத்திராகமம் 12ம் அதிகாரத்தை வாசித்து, நிறுத்தாமல் துரிதமாகப் போகலாம். நான் உங்களை களைப்படையச் செய்ய முயலமாட்டேன், ஏனென்றால் போவதற்கு நமக்கு இன்னும் நீண்ட நேரம் இருக்கிறது. கர்த்தர்... மேசேயையும் ஆரோனையும் நோக்கி... என்றார். நான் சற்று நேரம் பொறுத்திருப்பேன், அப்பொழுது இந்த வேதவாசிப்பை நீங்கள் நிச்சயமாகப் புரிந்து கொள்வீர்கள். நீங்கள் இதைத் தவற விடுவீர்களானால்.... அவ்வளவு மகத்தான அழகான அடையாளங்கள்! எனக்கு அது பிடிக்கும். இப்பொழுது, நாம் பேசப்போகிற அந்தப் பலி இதோ இருக்கிறது. 30இப்பொழுது, வாதைக்குப் பின் வாதைகளை அவர்கள் உடையவர்களாக இருந்தார்கள், தேவன் எல்லாவிதமான அற்புதங்களையும் அடையாளங்களையும் நடப்பித்திருந்தார். ஓ, நான் சற்று நேரம் அதன்பேரில் பிரயாணம் செய்ய எவ்வளவாக விரும்புகிறேன்! விடுதலைக்கு சற்று முன்பு (eve), தேவன் அடையாளங்களையும் அற்புதங்களையும் அதிசங்களையும் காண்பிக்கத் தொடங்குகிறார். பாருங்கள், தேவன் எப்போதுமே நிகழ்காலத்தில் தான் இருக்கிறார். அவர் மோசேயிடம், “இருக்கிறேன்” என்றார். “இருந்தேன்” என்றோ, அல்லது “இருப்பேன்” என்றோ அல்ல.) “இருக்கிறேன்”, இப்பொழுது, நிகழ்காலம். அவர் இன்றிரவும் அதே இருக்கிறவராக இருக்கிறார். (“நான் அங்கே கடந்த காலத்தில் இருந்தேன்” என்பதல்ல.) “நான் இருக்கிறேன்!” உடன்படிக்கையின் தூதனானவர் இன்னும் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராகவே இருக்கிறார், அதே தூதனானவர். இப்பொழுது கவனியுங்கள், இதோ அந்த கடைசியானது இருக்கிறது. 31அவர்கள் உண்ணிகளையும் (fleas), வண்டுகளையும் (flies), கொப்புளங்களையும் கொண்டிருந்தார்கள். நீங்கள் இதைக் கவனிக்க வேண்டுமென்று விரும்புகிறேன், அவர்கள் போலியாட்களை (impersonators) உடையவர்களாக இருந்தார்கள். இதற்கிடையில், அது போகும் மட்டுமாக, யந்நேயும் எம்பிரேயும் அவர்களுக்கு எதிர்த்து நிற்க முயன்று, இவர்கள் செய்து கொண்டிருந்த அதே காரியங்களை அவர்களும் செய்தார்கள். வேறு வார்த்தைகளில் கூறினால், அவர்கள் சுவிசேஷத்தைப் பிரசங்கம் பண்ணிக் கொண்டிருந்து, மோசேயையும் ஆரோனையும் போன்று போலியாக பாவனை செய்ய முயற்சித்து கூடவே சென்றார்கள். ஆனால் நீங்கள் வேறொரு காரியத்தைக் கவனிக்க நான் விரும்புகிறேன். இப்பொழுது நீங்கள் வாசிக்கப் போவதாக இருந்தால், அங்கு தான் நாம் கடந்த இரவில் விட்டு வந்தோம், 6வது அதிகாரம் தொடங்கி, 12வது அதிகாரம் முடிய இந்த மந்திரவாதிகள், அவர்களால் அந்தக் காரியங்களைக் கொண்டுவர முடிந்தது, ஆனால் அவர்களால் அவைகளை எடுத்துப்போட முடியவில்லை. நீங்கள் அதைக் கவனித்தீர்களா? அன்றொரு நாள், வேதாகமத்தை penknife- பண்ண முயற்சித்து, “பிசாசினால் சுகமளிக்கிற அற்புதங்களை நடப்பிக்க முடியும்” என்று கூறிக் கொண்டிருந்த அந்த ஆள் யார்? அது தவறு. “உன் சகல வியாதிகளையும் குணமாக்குகிற உன் தேவனாகிய கர்த்தர் நானே” என்று தேவன் கூறியிருக்கிறார். இயேசு, “ஒரு வீடு தனக்குத்தானே விரோதமாயப் பிரிந்திருக்குமானால், சாத்தானைச் சாத்தான் துரத்தினால், அவனுடைய இராஜ்யம் பிரிந்திருக்குமே” என்றார். நீங்கள் பிசாசை குறைத்து மதிப்பட்டு விடாதீர்கள். அது சரியே, அவன் அதற்காக மிகவும் புத்திசாலியாக இருக்கிறான். சாத்தான் தன்னைத்தானே துரத்தப் போவதில்லை. அவன் அப்படியே உங்களைக் குழப்பிவிடுகிறான், அவ்வளவு தான். இல்லை, ஐயா, சாத்தான் சாத்தானைத் துரத்த முடியாது. நான் என்னையே துரத்துவேனா? ஏன், எனக்கு அதைக் காட்டிலும் மேலானது தெரியும். 32கவனியுங்கள், அவ்வாறே, இயேசு கிறிஸ்துவையும் குறைத்து மதிப்பிட வேண்டாம், ஏனென்றால் அவர் சகல வல்லமைகளுக்கும் மேலான அதிகாரத்தை உடையவராயிருக்கிறார். நீங்கள் அவருக்குள் இருக்கும் வரையில், சாத்தானைப் பார்த்து பயப்பட வேண்டாம். ஆனால் நீங்கள் அவருக்குள் இல்லை என்றால், நீங்கள் அதிகம் நடுங்குவீர்கள். ஆனால் நீங்கள் அவருக்குள் இருப்பீர்களானால், மரணம் கூட உங்களுக்கு கெடுதி செய்ய முடியாது. அப்போது நீங்கள் எல்லா பயத்திலிருந்தும் விடுதலையாயிருக்கிறீர்கள். ஓ, நான் அதைக் குறித்து சிந்தித்துப் பார்க்கும் போது, நான், அல்லேலூயா!“ என்று சத்தமிட விரும்புகிறேன். ஆமென். அது சரி. 33இப்பொழுது நாம் கடைசி வாதைக்கு, கடைசி காரியத்திற்கு வந்து கொண்டிருக்கிறோம். தேவன், முட்டாளாக்கப்படுவது இப்பொழுது எனக்கு சலிப்பாக இருக்கிறது. நான் கடைசி வாதையைக் கொடுக்கப் போகிறேன்“ என்றார். இப்பொழுது, கடைசி வாதை மரணமாக இருந்தது என்பதை நீங்கள் கவனிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். இப்பொழுது, நாம் பூமியதிர்ச்சிகளைக் கொண்டிருக்கிறோம், யுத்தங்களின் செய்திகளையும் உடையவர்களாக இருக்கிறோம், ஆழிப்பேரலைகளையும் நாம் கொண்டிருக்கிறோம், சம்பவிக்கும் என்று இயேசு கூறினபடியே, சமுத்திரம் முழக்கமாயிருக்கிறது, மனிதரின் இருதயம் நின்று போகின்றன, அதிகமான இருதயக் கோளாறும் (அது முக்கிய வியாதியாக இருக்கிறது), பயமும், தேசங்களுக்கு இடையே குழப்பமும் இடுக்கணும் உள்ள நேரமும், அகலமான சாலைகளில் மோட்டார் வாகனங்களும், இந்தக் காரியங்கள் எல்லாமே நிறைவேறி விட்டன. ஆனால் கடைசி வாதையானது மரணமாக இருக்கிறது; சரீரபிரகாரமாக நான் பேசிக் கொண்டிருக்கவில்லை , ஆனால் ஆவிக்குரிய விதமாகத்தான் நான் பேசிக் கொண்டிருக்கிறேன். சபையில், ஆவிக்குரிய மரணம் குமாரர்கள் மத்தியில் ஆவிக்குரிய மரணம் இருந்தது என்பதை நீங்கள் கவனியுங்கள். சபையானது அதற்கு எப்பொழுதும் இருந்ததைக் காட்டிலும் அதிக அங்கத்தினர்களை உடையதாயிருக்கிறது. இருப்பினும் அது எப்பொழுதும் இருந்ததிலும் ஆவியில் மிகவும் பலவீனமாக இருக்கிறது. அது உண்மை . அது எகிப்தில் இருந்தது போன்றே இருக்கிறது. இப்பொழுது கடைசி காரியத்தைக் கவனியுங்கள். 34ஆனால் அதற்கு முன்பாக, (ஓ, ஆமென்) தேவன் ஆவிக்குரிய மரணத்தை ஊற்றும்படி அனுமதிப்பதற்கு முன்பாக, தப்பிக்க விரும்புகிறவர்கள் தப்பிக்கும்படியான ஒரு வழியையும் உண்டாக்கியிருக்கிறார். அல்லேலூயா! ஓ, நான் எவ்வளவாக அதை நேசிக்கிறேன், அந்த தப்பிக்கொள்ளும் வழியில் நடக்க வாஞ்சிக்கிறவர்கள் தப்பித்துக்கொள்ளும்படியாக தேவன் ஒரு வழியை உண்டாக்குகிறார். இப்பொழுது, அதில் நடக்க விருப்பமில்லாதவர்களோ, சரி, அவர்கள் - அவர்கள் மரணத்தைப் பெற்றுக்கொள்கிறார்கள். இப்பொழுது 12வது அதிகாரம், 1வது வசனத்தில் மோசேயைக் கவனியுங்கள். கர்த்தர் எகிப்து தேசத்தில் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: இந்த மாதம் உங்களுக்குப் பிரதான மாதம்; இது உங்களுக்கு வருஷத்தின் முதலாம் மாதமாயிருப்பதாக. நீங்கள் இஸ்ரவேல் சபையார் யாவரையும் நோக்கி: இந்த மாதம் பத்தாம் தேதியில் வீட்டுத்தலைவர்கள், வீட்டுக்கு ஒரு ஆட்டுக்குட்டியாக, ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆட்டுக்குட்டியைத் தெரிந்து கொள்ளக்கடவர்கள். ஒரு வீட்டில் இருக்கிறவர்கள் ஒரு ஆட்டுக்குட்டியைப் புசிக்கிறதற்குப் போதுமான பேர்களாயிராமற்போனால், அவனும் அவன் சமீபத்திலிருக்கிற அவனுடைய அயல்வீட்டுக்காரனும், தங்களிடத்திலுள்ள ஆத்துமாக்களின் இலக்கத்திற்குத்தக்கதாக ஒரு ஆட்டுக்குட்டியைத் தெரிந்துகொள்ள வேண்டும்; அவனவன் புசிப்புக்குத்தக்கதாக இலக்கம் பார்த்து, ஆட்டுக்குட்யைத் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த ஆட்டுக்குட்டி பழுதற்றதும்.... (எவ்வளவு அழகாயுள்ளது.)... ஆணும் ஒரு வயதுள்ளதுமாய் - ஒரு வயதுள்ளதுமாய் இருக்க வேண்டும்...(கவனியுங்கள்)... செம்மறியாடுகளிலாவது வெள்ளாடுகளிலாவது அதைத் தெரிந்து கொள்ளலாம். அதை இந்த மாதம் பதினாலாம் தேதி வரைக்கும் வைத்திருந்து ... (அது நான்கு நாட்கள்)... இஸ்ரவேல் சபையின் ஒவ்வொரு கூட்டத்தாரும் சாயங்காலத்தில் அதை அடித்து, 35முன்னடையாளத்தைக் கவனியுங்கள். அந்த ஆட்டுக்குட்டியானது, அழிவுக்கு சற்று முன்புள்ள பரிகாரமாகிய தேவனுடைய ஆட்டுக்குட்டியானவரைக் குறித்து உருவகமாகப் பேசிக் கொண்டிருக்கிறது. கவனியுங்கள், அது கட்டாயம் ஒரு இளம் ஆட்டுக்குட்டியாகவும், அது ஒரு ஆண் ஆடாகவும் இருந்தாக வேண்டும், தாய் பெண்ணாட்டிலிருந்து வந்த முதலாவது ஆட்டுக்குட்டியாக இருந்தாக வேண்டும். அது இயேசுவாக இருந்தது, கன்னி மரியாளிடமிருந்து முதலாவது வந்தவர். அது நிச்சயம் பழுதற்றதாக இருக்க வேண்டும், பார்ப்பதற்கு அது நல்ல நிலையில் வைக்கப்பட்டு (kept up), நன்கு சோதிக்கப்பட்டிருக்க வேண்டும். ஓ, அது எவ்வளவு பரிபூரணமாக அவரை சித்தரித்துக்காட்டுகிறது (figured), அவரே அந்த பரிபூரணமான ஒருவராக இருந்தார். அவர், அவர் பரிபூரணமாக இருந்தார் என்று ஒவ்வொரு சத்துருவும் சாட்சிபகர வேண்டியிருந்தது. பிலாத்துவும் கூட, “நான் அவரிடத்தில் எந்தத் தவறும் காணவில்லை. கொஞ்சம் தண்ணீரை என்னிடம் கொண்டு வாருங்கள் என்றான் 36கவனியுங்கள், நீங்கள் அவரைக் குறித்துப் பேசுகிறீர்கள்! நான் இன்றிரவு அழைக்க முடிந்து, “சகரியாவே, நீ அவரைக் குறித்து என்ன நினைக்கிறாய்?” என்று கேட்க முடியும். அப்பொழுது அவன் வாக்குமூலத்தைக் கொடுத்திருப்பான். ஏவாளையும் கூட என்னால் அழைக்க முடியும், அவள், அவள், “அது, அது ஸ்திரீயின் மூலமாக, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வித்தாக இருந்தது” என்று அவளால் கூற முடிந்திருக்கும். தானியேலையும் என்னால் அழைக்க முடிந்து, “தானியேலே, உன்னைக் குறித்து என்ன? உன்னோடு அவரை சோதனைக்கு உட்படுத்துகிறேன்” என்று கூறினால். அவன், “மலையிலிருந்து பெயர்ந்து, உருண்டு வந்த கல் அவரே” என்று கூறியிருப்பான் “உங்களுக்கு ஒரு பாலகன் பிறந்தான், உங்களுக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்” என்று நான் கூறின ஒருவர் அவர் தான்“ எசேக்கியேலை என்னால் அழைக்க முடிந்து, “நீ அவரைக் குறித்து என்ன நினைக்கிறாய்?” என்று கேட்க முடிந்தால். “அவருடைய பாதங்களுக்குக் கீழே மேகங்கள் போன்றவைகள் அசைந்து கொண்டிருப்பதாக நான் அவரைக் கண்டேன்” என்று கூறியிருப்பான். என்னால் யோவான் ஸ்நானகனை அழைக்க முடிந்து, “நீ அவரைக் குறித்து என்ன நினைக்கிறாய்?” என்று கேட்க முடிந்திருந்தால். அவன், “எனக்கு அவரைத் தெரியக்கூட செய்யாது, ஆனால் ஆவியானவர் இறங்கி யார் மேல் அமருவதை நீ காண்பாயோ, அவர் தான் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் ஞானஸ்நானம் கொடுப்பார்' என்று அவர் வனாந்தரத்தில் என்னிடம் கூறினார்” என்று சொல்லியிருப்பான். மரியாளை என்னால் அழைக்க முடிந்து, “மரியாளே, நீ அவரைக் குறித்து என்ன நினைக்கிறாய்?” என்று கேட்க முடிந்திருந்தால். மரியாள், “நான் ஒரு மனிதனையும் அறியக்கூட இல்லை; ஆனால் பரிசுத்த ஆவியானவர் என்மேல் நிழலிட்டு, 'உனக்குள்ளே பிறக்கிறவர் தான் தேவ குமாரன் என்று அழைக்கப்படுவார்' என்று கூறினார்” என்று கூறியிருப்பாள். 37அந்த வெவ்வேறு நபர்களை என்னால் கூற முடியும். நான் அந்த ரோமனிடம், “நீ என்ன நினைக்கிறாய்?” என்று கூறியிருந்தால். நீங்கள், “நல்லது, அவருடைய நண்பர்கள் சாட்சி பகருவார்கள். அவருடைய சத்துருக்களைக் குறித்து என்ன? என்று கேட்கலாம். நாம் பிலாத்துவை அழைப்போம். அவன் ஒரு உலோகத்தட்டை எடுத்து, தன்னுடைய கைகளைக் கழுவின பிற்பாடு, அவன், “நான் இவனிடத்தில் எந்த குற்றத்தையும் காணவில்லை, ஆனால் இவனை அகற்றி விடுகிறேன், உங்களுக்கு விருப்பமான எதையும் செய்யுங்கள் என்று கூறி, அவன் அரசியல் அநுகூலம் கிடைக்கும்படியாக முயற்சித்துக் கொண்டிருந்தான், பிறகோ அவன், அங்கே நார்வேயில், சுவீடனில் தன்னைத்தானே மூழ்கடித்து மாண்டு போனான். மீண்டுமாக நீர்க்குமிழிகள் மேலே கொப்பளித்து வரும் அந்த நீல நிற தண்ணீரைப் பார்க்கும்படியாக அவர்கள் ஒவ்வொரு வருடமும் அங்கே போகும் போது, அவன் கிறிஸ்துவிடமிருந்து தன்னுடைய கரங்களைக் கழுவின தண்ணீர் அதுதான் என்று அவர்கள் உரிமை கோருகிறார்கள். உங்களால் அவரை உங்கள் கரங்களிலிருந்து கழுவிப்போட முடியாது. இல்லை, ஐயா, உங்களால் முடியாது. நான் ரோம நூற்றுக்கதிபதியை நோக்கிப் பார்த்து, “நீ அவரைக் குறித்த என்ன நினைக்கிறாய்? நீ அவருடைய சத்துருக்களில் ஒருவனாயிற்றே” என்று (கேட்பேன்) என்றால். அவன் தன்னுடைய கரத்தை தனது இருதயத்தின் மேல் வைத்து, “மெய்யாகவே அவர் தேவனுடைய குமாரன்” என்று கூறினான். 38பிலாத்து, “இவனிடத்தில் நான் எந்த குற்றத்தையும் காணவில்லை என்று கூறினான். முதலாவது, அவன் அங்கே மிக மோசமானவனாக நின்று கொண்டிருந்தான், ஓ, அவன் ஆக்கினைக்குள்ளாக தீர்க்கவும் மற்றும் எல்லாவற்றையும் செய்ய ஆயத்தமாக இருந்தான். அப்போது ஒரு குதிரை தெருவில் வேகமாக ஓடிவரும் சத்தம் கேட்கிறது, இதோ ஆலயக் காவலர்களில் ஒருவன் வருகிறான். அவன் குதிரையை விட்டு கீழே குதித்தான். அவனிடம் மடித்து வைக்கப்பட்டிருந்த ஒரு சிறு துண்டு கடிதம் இருந்தது. அவன் மேலே ஓடி பிலாத்துவுக்கு முன்பாகப் போய், தலை வணங்கி, அந்த துண்டு கடிதத்தை அவனிடம் கொடுத்தான். பழங்கால பிலாத்து அதை வாங்கினான், அது உங்களுக்குத் தெரியும். அது ஒருவிதத்தில் அதிகாலையாக இருந்தது, அவன் இன்னும் தன்னுடைய காபியை அருந்தியிருக்கவில்லை. அவன் அங்கே எழுந்து நின்று, (அதை நோக்கின போது, அவன் வெளிறிப்போகத் துவங்கி, அவனுடைய முழங்கால்கள் ஒன்றோடு ஒன்று முட்டிக்கொண்டன. நாம் அவனுடைய தோள்பட்டையினூடாக உற்றுப் பார்த்து, என்ன விஷயம் என் பார்ப்போம். அந்தத் துண்டு கடிதத்தில் என்ன எழுதியிருந்தது, அவனுடைய அஞ்ஞான மனைவி, இந்த நீதிமானுக்கு எதையும் செய்து விடாதீர்கள், அவர் நிமித்தம் இன்றைக்குச் சொப்பனத்தில் வெகுபாடுபட்டேன்“ என்று கூறியிருந்தாள். “பழங்கால யூதாஸ்காரியோத்தே, நீ அவரைக் குறித்து என்ன நினைக்கிறாய்?” 39அவன், “குற்றமற்ற இரத்தத்தைக் காட்டிக்கொடுத்து விட்டேன்” என்று கூறிவிட்டு, ஒரு கயிற்றை எடுத்துக்கொண்டு போய் தனக்குத்தானே தூக்கிலிடும்படிக்கு (நான்றுகொள்ள) போதிய மனிதனாக அவன் இருந்தான். அவன் சோதனை செய்யப்பட்டான். “நீர் அவரைக் குறித்து என்ன நினைக்கிறீர்?” தேவனே. “இவர் என்னுடைய நேச குமாரன், இவருக்குச் செவிகொடுங்கள்!” அவர் நல்ல நிலையில் வைக்கப்பட்டிருந்தார், அவரிடத்தில் எந்தக் குற்றமும் இல்லை. நிச்சயமாக. அந்தத் தாயிடமிருந்து, அந்தத் தாய் பெண்ணாட்டிலிருந்து முதலாவது (பிறந்தது தான் அந்த ஆட்டுக்குட்டியாக இருந்தது. கன்னியிடமிருந்து பிறந்த முதலாவது பிள்ளை தான் இயேசுவாக இருந்தார், அவர் கன்னிப்பிறப்பின் மூலம் பிறந்தவர். நிச்சயமாக, அவர் பாவமில்லாதவராக இருக்க வேண்டியிருந்தது. 40இதைக் குறித்துக்கொள்ளுங்கள், இப்பொழுது, சபையார் எல்லாரும், சபையார், முழு கூட்டத்தாரும், அதைக் கொல்ல வேண்டியிருந்தது என்பதை நீங்கள் மீண்டும் கவனிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். இப்பொழுது, நீங்கள் கவனிப்பீர்களானால், அது எவ்வாறு வாசிக்கப்படுகிறது என்பதை கவனியுங்கள், அது ஒரு முன்னிழலாக இருக்கிறது என்பதை உங்களால் காண முடியும். ... இந்த மாதம் பதினாலு நாள் ... (வேதாகமத்தில் “பதினாலாம் தேதி” 'fourteenth day' என்றுள்ளது, சகோ . பிரன்ஹாம் “பதினான்கு நாள்” “fourteen day என்று கூறுகிறார் - மொழிபெயர்ப்பாளர்.) இஸ்ரவேல் சபையின் ஒவ்வொரு கூட்டத்தாரும் சாயங்காலத்தில் அதை அடித்து, மேலும், நீங்கள் கவனிப்பீர்களானால், இஸ்ரவேலர் எல்லாரும் அங்கே நின்றுகொண்டு, “இவனை அகற்றும்! இவனுடைய இரத்தப்பழி எங்கள் மேலும் எங்கள் பிள்ளைகள் மேலும் இருப்பதாக” என்று சொன்னார்கள். அவர்கள், காய்பா முதற்கொண்டு, அங்கிருந்த ஜனங்கள் எல்லாருமே அவருடைய மரணத்திற்கு சாட்சிக்காரர்களாக இருந்தார்கள். இவனை அகற்றும்! பரபாசை எங்களுக்குத் தாரும். நீங்கள் அதைக் கவனித்தீர்களா? அவர் சாயங்காலம் 3 மணிக்கு மரித்தார், “சாயங்காலத்தில் அதை அடிக்கக்கடவர்கள்.” எவ்வளவு அழகாயுள்ளது! அதின் இரத்தத்தை... எடுத்து, தாங்கள் அதைப் புசிக்கும் வீட்டுவாசல் நிலைக்கால்களிலும்..... நிலையின் (மேற்) சட்டத்திலும் தெளித்து, அன்று ராத்திரியிலே அதின் மாம்சத்தை நெருப்பினால் சுட்டு, புளிப்பில்லா அப்பத்தோடும் கசப்பான கீரையோடும் அதைப் புசிக்கக்கடவர்கள். இப்பொழுது நீங்கள் இதைக் கவனிக்க விரும்புகிறேன். என்னைப் பொறுத்துக்கொள்ளுங்கள். பச்சையாயும் தண்ணீரில் அவிக்கப்பட்டதாயும் அல்ல; அதின் தலையையும் அதின் தொடைகளையும் அதற்குள்ள யாவையும் ஏகமாய் நெருப்பினால் சுட்டதாய் அதைப் புசிப்பீர்களாக. அதிலே ஒன்றையும் விடியற்காலம் மட்டும் மீதியாக வைக்காமல்... அதிலே மீதியாய் இருக்கிறதை அக்கினியால் சுட்டெரிப்பீர்களாக. 41கவனியுங்கள், அழகாயுள்ளது! “இப்பொழுது, நீங்கள் ஆட்டுக்குட்டியைக் கொன்ற பிறகு, அதனுடைய இரத்தத்தை எடுத்து, அதை வாசலின் மேற்சட்டத்தில் (lintil) பூசுவது (put on), அதாவது இங்கேயுள்ள மேற்சட்டத்திலும், வாசல் நிலைக்கால்களிலும் பூசுவது. வாசல்படியிலோ, தரையிலோ ஒருபோதும் பூசக்கூடாது; ஆனால் நிலைக்கால்களிலும், மேற்சட்டத்திலும் பூச வேண்டும்.'' நீங்கள் அதைக் கவனிப்பீர்களானால், அது பரிபூரணமாக சிலுவையாகவே உள்ளது. ஓ, என்னே! அவர், அந்த இரத்தத்தைக் காணும்போது, உங்களை விலகிக் கடந்து போவேன் என்று கூறினார். கவனியுங்கள், என்னவொரு நாள்! ஓ, பாவியான மனிதனே, பெண்ணே , பையனே அல்லது சிறு பெண்ணே, உன்னுடைய பாவமுள்ள இருதயத்திற்குள் இது ஊடுருவிச் செல்லட்டும். நாம் சிந்தித்துக் கொண்டிருக்கிறோமே, அது கிறிஸ்து வருவதற்கு சற்று முன்பாக உள்ள நேரம் தான், நம்மை நாமே ஆராய்ந்து பார்ப்போம், கவனியுங்கள். 42இப்பொழுது அவர், “சாயங்காலத்தில், அது கொல்லப்பட்டது” என்றார். ஆட்டுக்குட்டியானது... வீட்டிற்குள்ளே கொண்டு வரப்பட்டு, சுடப்பட்டது; நிச்சயமாகவே, அது இராப்போஜனத்திற்கு முன்னடையாளம். இப்பொழுது அவர், அந்த வீட்டிற்குள் வந்துவிடுங்கள், காலை மட்டுமாக, இனி வெளியே போகாதிருங்கள்“ என்றான். ஆமென்! ஒருமுறை இரத்தத்தின் கீழே, அல்லேலூயா, அங்கேயே தரித்திருங்கள்! உங்களுக்கு அது புரிந்து விட்டது என்று நம்புகிறேன். கீழே வாருங்கள்! ஊளையிடும் ஓநாய்கள் ஜன்னல்கள் பக்கம் வரலாம். அவர்களில் சிலர் காணும்படிக்கு வந்து, அந்த வாலிப பெண்கள் உள்ளே வருவதைப் பார்த்து, எகிப்திய இளம்பெண்களில் சிலர், “மார்த்தாளே, நீ இன்றிரவு நடனத்திற்குப் போகவில்லையா?” என்று கேட்கிறார்கள். “எனக்கு எந்த வாஞ்சையுமே இல்லை.” இரத்தத்தின் கீழே, ஏதோவொன்று சம்பவித்து விட்டது! 43பழங்காலங்களில், அந்தப் பழைய பரிசுத்த ஸ்தலத்தில் (sanctuary), தகப்பன் தான் வீட்டின் ஆசாரியனாயிருந்தான். தகப்பன் எப்போதுமே ஆசாரியனாகவே இருந்தான், அவன் தன்னுடைய வீட்டாருக்கு பாதுகாப்பு கொடுத்து, அவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ள (watch over) வேண்டியவனாயிருந்தான். இன்றைக்கு என்னவொரு மாற்றம், இந்த நவீன உலகத்தில், பிள்ளைகள்தான் தகப்பனை பாதுகாக்கிறார்கள். ஆனால் தகப்பன்தான் தன்னுடைய வீட்டாரை பாதுகாக்க வேண்டியிருந்தது. அவன் ஆட்டுக்குட்டியைக் கொன்று, ஈசோப்பை எடுத்து, அதை வாசல்கள் மேல், மேற்சட்டத்தில் (lintil) பூசினான் (put on), அதுதான் அவர்களுடைய பாதுகாப்பாக இருந்தது. சரி, அவர்கள் உங்ளேயே தங்கியிருந்தார்கள். அவர்களில் மற்றவர்கள் போய், கும்மாளமடித்துக் கொண்டும், அவ்வாறு தொடர்ந்து செய்து கொண்டும் இருந்து, அந்த ஒருகூட்ட மதவெறிப்பிடித்தவர்களைப் பாருங்கள்! ஓ, ஒரு ஆட்டின் இரத்தத்தை வாசலில் உடையவர்களாய், ஏதோ நடக்கப்போகிறது' என்ற இந்த முட்டாள்தனமான வார்த்தைகளைக் கூற முயற்சிக்கிறார்கள்“ என்று கூறிக் கொண்டிருப்பதை என்னால் காண முடிகிறது. ஆனால் ஏதோவொன்று நடந்ததே! ஏன்? தேவன் அவ்வாறு கூறினார்! தேவன் அவ்வாறு கூறும்போது, அது எப்போதுமே சத்தியமாக இருக்கிறது. 44அங்கே அவர்கள், இரத்தத்தின் கீழே இருக்கிறார்கள். அவர்களுக்கு வெளியே போக எந்த வாஞ்சையும் இல்லாதிருந்தது. ஆமென்! நீங்கள், “சகோதரன் பிரன்ஹாமே, வாஞ்சையா?” என்று கேட்கலாம். அது சரியே. ஆனபடியால்,“ ரோமர் 8:1, ”வாசலுக்குள் பிரவேசித்தவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை.“ ஆமென்! நான் எனக்கு நானே ”ஆமென்“ என்று கூறிக் கொண்டிருக்கவில்லை, ஆனால் ஆமென் என்றால், அப்படியே ஆகக்கடவது” என்று அர்த்தம்; நான் மிக நன்றாக, “ஆமென்!” என்று உரக்க கத்த வேண்டும் என்று உணருகிறேன். ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை.“ அங்கே தான் கிறிஸ்து இயேசுவுக்குள் நீங்கள் இருக்கிறீர்கள், என்ன செய்ய வேண்டுமென்று பரிசுத்த ஆவியானவர் சொல்லுகிறாரோ அதை செய்வதே வாஞ்சையாக இருக்கிறது. உலகம் என்ன கூற வேண்டியிருந்ததோ அதற்குக் கவலைப்பட வேண்டாம். அவருக்குள்ளிருந்து, ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை. அந்த இஸ்ரவேலர்கள் எல்லாரும் திருப்தியடைந்தவர்களாய், அங்கே உள்ளே இருந்தார்கள். ஆமென். இங்கே தான் நாம் இருக்கிறோம், அதைப் பாருங்கள், இப்பொழுது நீங்கள் இதைக் காண விரும்புகிறேன். 45சற்று கழிந்து, அங்கே மேகங்கள் வந்து, எழும்பத் துவங்குகின்றன, கோபமுள்ள இரவு. ஜனங்கள், “இங்கே சுற்றிலும் என்னதான் நடந்து கொண்டிருக்கிறது? ஒருவித வினோதமான உணர்ச்சி உள்ளதே” என்று வியப்படையத் தொடங்குகிறார்கள். சகோதரனே, அங்கே எப்பொழுதாவது தேசங்களின் மத்தியில் வினோதமான உணர்ச்சி இருந்திருக்குமானால், அது இன்றிரவில் தான்! ஏதோவொன்று சம்பவிக்கப் போகிறது. அல்லேலூயா! இன்னுமாக அந்தப் பாடல், நான் இரத்தத்தைக் காணும்போது, உங்களைக் கடந்து போவேன்.“ பிதாவே, இன்றிரவு வாசலின் மேல் நோக்கிப் பார்த்து, ஆராய்ந்து பார்ப்பது நல்லது. அந்த பீர் குவளைகளை குளிர்சாதனப்பெட்டியை விட்டு தூக்கி எறிந்து விட்டு, அந்த சீட்டுக்கட்டுகளையும் (deck of cards) தூக்கி எறிந்து விட்டு, உங்கள் வீட்டில் ஒரு ஜெபக் கூட்டத்திற்கு அழைப்பு விடுங்கள். நீங்கள் டீக்கனாகவோ, தர்மகர்த்தாவாகவோ, இதுவாகவோ, அதுவாகவோ, அல்லது மற்றதாகவோ இருக்கலாம், ஆனால் கவனியுங்கள், நமக்கு இன்று தேவையாயிருப்பது ஒரு பழைமை நாகரீகமும், தேவனால் அனுப்பப்பட்ட பரிசுத்த ஆவியினால் பிறந்த எழுப்புதலும், தேசத்தை சீர்ப்படுத்துவது தான். அது உண்மை . 46நமக்கு வேதசாஸ்திரங்களும் மற்றவைகளும் அவசியமில்லை. ஜனங்கள் தங்கள் சபைகளில், அவர்கள் அருமையான பெரிய இருக்கைகளையும், பெரிய குழல் ஆர்கன் இசைக்கருவிகளையும் (pipe organs), மற்றும் காரியங்களையும் ஏற்படுத்த முயற்சித்து, “நான் இந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவன், நான் அந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவன்” என்று கூறுகிறார்கள். இராஜாவுக்கு முன்னின்று, “இவர்கள் மதபேதம் என்று சொல்லுகிற மார்க்கத்தின்படியே எங்கள் முன்னோர்களின் தேவனுக்கு நான் ஆராதனை செய்கிறேன்” என்று (கூறின) பவுலைப் போல், இன்றிரவு கூறும்படிக்கு நான் சந்தோஷமாயிருக்கிறேன். அல்லேலூயா! உலகத்திற்கு, (இது) மதபேதம், பைத்தியம், முட்டாள்தனம். ஆனால் கிறிஸ்துவுக்குள் இருப்பவர்களுக்கோ, இது மகிமையாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறது. “மரித்து, அல்லேலூயா, ஆம், ஐயா, ”கிறிஸ்துவுக்குள் மறைக்கப்படுதல்!“ 47“நல்லது, பிசாசு வந்து என்னைப் பிடித்துக்கொண்டான்” என்று கூறலாம். இல்லை, அவன் ஒருபோதும் பிடிக்க மாட்டான்! அப்படியானால் நீங்கள் வெளியே அவனிடம் போய் விட்டீர்கள். வேதாகமம், “நீங்கள் மரித்து, உங்கள் ஜீவன் கிறிஸ்து மூலமாக, தேவனுக்குள் மறைக்கப்பட்டிருக்கிறது, பரிசுத்த ஆவியின் மூலமாக முத்திரையிடப்பட்டிருக்கிறது'' என்று கூறுகிறது. எப்படி பிசாசினால் உங்களைப் பிடிக்க முடிந்தது? நீங்கள் வெளியே போய் விட்டீர்கள். அது சரியே, பிசாசு ஒருபோதும் உங்களைப் பிடிக்கவில்லை. கவனியுங்கள், அழகாயுள்ளது! 48நாம் பிள்ளைகளுக்காக ஒரு சிறு நாடகத்தை காண்பிப்போம். அவர்களும் கூட அதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பது தான் நமது விருப்பம். இப்பொழுது, கவனியுங்கள். இதோ அவர்கள் அந்த வீட்டில் இருக்கிறார்கள். அது ஏறக்குறைய அந்தக் கடுமையான வாதை தொடங்கும் நேரமாக இருக்கிறது. காரியங்கள் சம்பவிக்கத் தொடங்குகிறது. அவர்கள் நடன விருந்து நிகழ்ச்சிகளிலிருந்து வீட்டிற்கு ஓடி வந்து கொண்டிருப்பதை நான் காண்கிறேன். அவர்கள் உள்ளே வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அழைத்து வரப்பட்டு, வீட்டிற்கு வந்து கொண்டிருக்கிறார்கள், அந்தக் குதிரை வண்டிகளை வேகமாக ஓட்டிக் கொண்டு வந்து கொண்டிருக்கிறார்கள். பலத்த காற்று வீசிக் கொண்டிருக்கிறது; அது எங்கிருந்து வருகிறது என்று அவர்களால் கூற முடியவில்லை ; அது இந்தவிதமாகவும் அந்தவிதமாகவும் சுழற்றி (twisting) அடித்துக் கொண்டிருந்தது. அவ்விதமாக ஒரு நேரம் இப்பொழுது இல்லை என்றால், அது எங்கே இருக்கிறது என்று எனக்குத் தெரியாது. அவர்களுக்கு என்ன செய்வதென்றே தெரிவதில்லை: இந்த விதமாகவும் அந்த விதமாகவும் இருக்கிறது. 49பிறகு, நீங்கள் அறியும் முதலாவது காரியம் என்னவென்றால், அந்த தேசம் முழுவதும் ஒரு பெரிய ரீங்கார ஒலியும் உரத்த முழக்க சத்தமும் வந்து கொண்டிருப்பதை நான் கேட்கிறேன். அப்போது ஒரு வயதான ஆசாரிய தகப்பனார் தரையில் மேலும் கீழும் நடந்து கொண்டிருப்பதை நான் காண்கிறேன், அவன் எவ்வளவு துணிவாக இருக்க முடியுமோ அவ்வளவு துணிவாக இருந்தான். அல்லேலூயா. அப்போது ஒரு சிறு பையன், அப்பா, நான் தான் இந்த வீட்டிற்கு மூத்தவன். எனக்கு ஒருவித பயம் உள்ளது“ என்று கூறுவதை நான் கேட்கிறேன். “மகனே, கவலைப்படாதே, வாசல் மேல் இரத்தம் உள்ளது.” “நல்லது, அவை எல்லாம் என்ன.... அப்பா, காற்று அப்படி வீசிக் கொண்டிருக்கும் சத்தத்தை நான் ஒருபோதும் கேட்டதே கிடையாது.” “அது தேவனுடைய நியாயத்தீர்ப்பு.” 50இப்பொழுது நாம் அதை நோக்கித் தான் போய்க் கொண்டிருக்கிறோம். நாம் இரக்கத்தைப் புறக்கணித்து விட்டதால், நியாயத்தீர்ப்பைத் தவிர வேறொன்றும் விடப்படவில்லை. நீங்கள் தேவனுடைய அன்பை வெறுத்து ஒதுக்கி உதறித் தள்ளி விட்டு விடும் போது, அங்கே உங்களுக்கு நியாயத்தீர்ப்பைத் தவிர வேறு ஒன்றும் விடப்படுவதில்லை (அது உண்மை.), எல்லாவிடங்களிலும் காற்று ஊளையிடும் சத்தமெழுப்பிக் கொண்டிருக்கிறது. தத்தளிப்பான நேரம், தேசங்களுக்கிடையே இடுக்கண், இவை எல்லாவற்றையும் குறித்து என்ன? நியாயத்தீர்ப்பு. ஆமாம், நீங்கள் ஒவ்வொரு மாகாணத்திலும் ஒரு ஒரு நல்ல மனிதனை நியமிக்கலாம், அப்பொழுதும் உங்களால் அதை நிறுத்த முடியவில்லை . மனிதர்கள், அவர்கள் குடிக்கத்தான் போகிறார்கள்; பெண்கள் சிகரெட்டுகளைப் புகைக்கத்தான் போகிறார்கள், நீங்கள் தொடர்ந்து உங்கள் படக்காட்சிகளுக்குப் போகத்தான் போகிறீர்கள், நீங்கள் எப்போதும் செய்தது போன்றே தொடர்ந்து போகலாம், இது பன்றி தன்னுடைய சேற்றில் புரளப் போவது போலவும், நாய் தான் கக்கினதிற்குப் போவது போலவும் இருக்கிறது, இதற்கு மேலும் உலகத்திலுள்ள எதையும் காட்டிலும் தேவனுக்கு மரியாதை கொடுப்பது இல்லை. சரியான விதமாக ஜீவிக்க முயற்சிக்கும் ஜனங்களைப் பார்த்து, நீங்கள் அவர்களை பரிசுத்த உருளையர்கள் என்றும், மதவெறியர்கள் என்றும், மற்ற எல்லாமாகவும் அழைக்கிறீர்கள், உங்களுடைய சொந்த ஆத்துமாவோ தராசிலே வைத்து நிறுக்கப்பட்டு விட்டது என்றும், அது நியாயத்தீர்ப்பைத் தவிர வேறு எதற்காகவும் காத்திருக்கவில்லை என்று உங்களுக்குத் தெரியவில்லை. ஆம், ஐயா. 51அந்தச் சிறு பையன், “அப்பா, வெளியே போய், ஒருமுறை பாருங்கள், அங்கே இரத்தம் இருக்கிறதா என்று நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள்” என்று கூறுவதை என்னால் காண முடிகிறது. அந்தச் சிறு பையனும் பெண் பிள்ளையும் கரங்களைப் பற்றிப்பிடித்தவர்களாய், ஜன்னல் பக்கம் சென்று, “அப்பா, இங்கே வாருங்கள். இதோ பாருங்கள் என்று கூறுவதை என்னால் காண முடிகிறது. இரண்டு பெரிய கறுத்த செட்டைகள் முன்னும் பின்னும் அடித்தபடி எகிப்து முழுவதும் வந்து கொண்டிருப்பதை நான் காண்கிறேன். அது என்ன? மரணம், அது இவ்விதமாக சிறகை அடித்துக் கொண்டு வேக வேகமாய் போய்க் கொண்டிருக்க, அந்த வீட்டிலிருந்து அலறல் சத்தம் எழும்புவதை நான் கேட்கிறேன். அங்கே இரத்தம் இல்லாதிருந்ததால், மரணம் அந்த வீட்டைத் தாக்கினது. வேறுபிரித்தல். சகோதரனே, இன்றிரவும் கூட அது கடந்து சென்று கொண்டிருக்கிறது, அது சரீர பிரகாரமான மரணம் அல்ல ஆவிக்குரிய மரணம். அவர்கள் இயற்கையான பிரகாரமாய் வழிநடத்தப்பட்டது போல, அவர் இன்று ஆவிக்குரிய பிரகாரமாய் வழிநடத்திக் கொண்டிருக்கிறார். அது ஒரு திருஷ்டாந்தமாயும், ஒரு நிழலாட்டமாயும் இருந்தது. 52அது சம்பவிப்பதை நான் காண்கிறேன், அந்தப் பெண் வெளியே ஓடி வந்து, அலறிக் கூச்சலிடுவதையும், எல்லா குடும்பத்தாரும் அவ்விதமே அலறி சத்தமிடுவதையும் நான் கேட்கிறேன். அந்த மூத்த மகன் மரித்து விட்டான். இந்தச் சிறு தகப்பனார் போவதையும், இந்தச் சிறு பையன் சென்று, தன்னுடைய அப்பாவை உலுக்கி, அப்பா, அப்பா, மறுபடியும் போய்ப் பாருங்கள். நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள்“ என்று கூறிக் கொண்டிருப்பதை என்னால் கேட்க முடிகிறது. அந்த ஞானமுள்ள தகப்பன் கதவண்டை திரும்பிச் சென்று, “ஆமாம், மகனே, அது அங்கேயிருக்கிறது” என்று கூறுவதை என்னால் காண முடிகிறது. அப்பா, நாம் பாதுகாப்பாக இருக்கிறோம் என்ற நிச்சயம் உமக்கு உள்ளதா?“ “ஆம், ஐயா.” “உமக்கு எப்படி தெரியும்?” “நான் இரத்தத்தைக் காணும் போது, உங்களைக் கடந்து போவேன்' என்று தேவன் சொல்லியிருக்கிறார்.” அது சரியே, இரத்தத்தைக் குறித்து விழிப்புடன் இருத்தல். இதோ அந்த தூதர்கள் வருகிறார்கள், மறுபடியுமாக வருகிறார்கள். அது மேலே சென்று, ஒரு இடத்திலிருந்து மற்ற இடத்திற்கு வெவ்வேறு இடங்களுக்கு திசை மாறி விலகி விலகிச் சென்று கொண்டிருப்பதைக் காண்கிறேன். அது சட்டென குதித்து கீழேயுள்ள ஒரு வீட்டின் மேல் இறங்கிச் சென்றவுடன், “இரத்தத்தை நான் கண்டேன்” என்று மறுபடியும் மேலே திரும்பி சென்று விடுவதை நான் காண்கிறேன். இதோ அது இந்த வீட்டிற்கு வருகிறது; அது வருகிறதை நான் காண்கிறேன், அந்தச் சிறு பையன், ஓ, அப்பா, உமக்கு நிச்சயம் தானா?“ என்று கேட்கிறான். “மகனே, நாம் பரிபூரண நிச்சயத்தோடு இருக்கிறோம்.” அந்தத் தூதன் கீழே அந்தக் கதவண்டை நழுவி வந்து, உள்ளே போகும்படியாக அதனுடைய பெரிய செட்டைகளை விரித்த போது, அது இந்த இரத்தத்தைக் கண்டு, அது தூரமாகப் பறந்து போகத் தொடங்குகிறது. அல்லேலூயா. காரியம் என்ன? அவன் இரத்தத்தைக் கண்டான். 53அதற்குப் பிறகு, இங்கே கவனியுங்கள், “நீங்கள் புசிக்கக்கடவீர்கள். நான் நேராக இதற்கு, நான் வாசிக்க விரும்பும் இடத்திற்கு வரும் மட்டுமாக, சற்று பொறுங்கள். சரியாக இதோ நாம் இருக்கிறோம், ”அதிலே ஒன்றையும் விடியற்காலம் மட்டும் மீதியாக வைக்காமல்.“ இப்பொழுது, 11வது வசனத்தைக் கவனியுங்கள். அதைப் புசிக்க வேண்டிய விதமாவது, நீங்கள் உங்கள் அரைகளில் கச்சை கட்டிக்கொண்டும், உங்கள் கால்களில் பாதரட்சை தொடுத்துக்கொண்டும், உங்கள் கையில் தடி பிடித்துக்கொண்டும்.... (சகோதரனே, நீங்கள் ஆயத்தமாக இருக்கிறீர்கள்!) 54நாம் இப்பொழுது, சற்று நேரம், எபேசியர் 6ம் அதிகாரத்திற்குத் திருப்பி, ஏறக்குறைய அந்த நேரத்தில், நாமும் கூட எந்த விதமாக வஸ்திரம் தரிக்க வேண்டும் என்பதைக் குறித்து சற்று வாசிப்போம். சரி, எபேசியர் 612, அதைக் குறித்துக் கொண்டிருக்கும் உங்களிடம் தான். ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு. இன்று நமக்கு எங்கே போராட்டம் இருக்கிறது என்பதைப் பாருங்கள்? மரண தூதன் யார் என்பது புரிகிறதா? அது ஆவிக்குரிய வல்லமையாகவும், வானமண்டலங்களிலுள்ள, மகத்தான ஸ்தலங்களிலுள்ள, பெரிய ஸ்தலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளாகவும் இருக்கின்றன. ஆகையால், தீங்குநாளிலே அவைகளை நீங்கள் எதிர்க்கவும், சகலத்தையும் செய்துமுடித்தவர்களாய் நிற்கவும் திராணியுள்ளவர்களாகும்படிக்கு, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள். நில்லுங்கள்! சத்தியம் என்னும் கச்சையை உங்கள் அரையில் கட்டினவர்களாயும்... நில்லுங்கள். நான் அப்படியே அந்த ஒன்றிற்கு வந்து விடுகிறேன், ஏனென்றால் நான் என்னுடைய பொருளிற்குத் திரும்பிப் போக விரும்புகிறேன். அவனைக் கவனியுங்கள், அவன் மேலும் சென்று, “மார்க்கவசத்தையும், தலைச்சீராவையும்” என்று கூறுகிறான், மேலும் மற்ற எல்லாவற்றையும் கூறுகிறான். இங்கே உங்களுக்காக அந்த போர் சேவனுக்கு நம்மால் வஸ்திரம் தரிப்பிக்க கூடும்படிக்கு விருப்பம் தான், ஆனால் நமக்கு நேரம் இல்லை. 55நாம் சற்று அரைகள் என்பதை எடுத்துக்கொள்வோம், கச்சையை அரையைச் சுற்றி கட்டுதல்,“ அதாவது - அதாவது அதில் மீதமுள்ளவற்றை ஒன்றாகப் பற்றிப்பிடித்துக்கொள்ளும் அரைக்கச்சை. ”சத்தியம் என்னும் கச்சையை உங்கள் அரைகளில் கட்டிக்கொள்ளுங்கள்.“ சகோதரனே, இந்த நாளில், எல்லாவித இஸம்களும் மதவெறித்தனங்களும் இருக்கும் போது, சத்தியத்தைக் கொண்டு அரையில் உங்களுக்கு நீங்களே கட்டிக்கொள்ள (gird) வேண்டிய நேரம் இதுவே. அல்லேலூயா! இயேசு, ”நானே சத்தியமாக இருக்கிறேன்“ என்று கூறினார். சத்தியபரர்! ஜனங்கள், “இதைக் குறித்து என்ன? அதைக் குறித்து என்ன?” என்று கூறும்போது, அந்தப் பழைய சத்தியத்தை உங்களைச் சுற்றிலும் கட்டிக்கொள்வதைக் காணவும், நீங்கள் எங்கே நின்று கொண்டிருக்கிறீர்கள் என்பதை அறிந்து கொள்வதும் தான் நல்லது என்று நான் உங்களுக்குக் கூறுகிறேன், (இல்லையா?). பிறகு அங்கேயே நில்லுங்கள்! அவர்கள், “நல்லது, நீங்கள் இதையோ, அதையோ, மற்றதையோ கொண்டிருக்கிறீர்களே” என்று கூறட்டும், நீங்கள் எங்கே நின்று கொண்டிருக்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். சர்வாயுதவர்க்கத்தைத் தரித்து (buckled on), இங்கே கச்சையினால் இறுக்கிக் கட்டி, நன்கு இறுக்கமாக கட்டிக்கொண்டு, தேவ வசனமாகிய சத்தியமானது உங்கள் இருதயத்தில் நங்கூரமிடப்பட்டவர்களாய், முழுவதும் அழித்துப்போடுங்கள். நரகத்திலுள்ள எல்லா பிசாசுகளாலும் உங்களைத் தோற்கடிக்கவே முடியாது. அது சரியே. உங்களால் சாத்தானைச் சந்தித்து, “எழுதியிருக்கிறதே” என்று சொல்ல முடியும். அல்லேலூயா! “ஓ, சகோதரனே, நான் உன்னிடம் கேட்கிறேன், நீ சர்ப்பங்களை எடுத்தாயா?” “இல்லை, ஐயா. நான் இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிறேன்.” “நீ இதை, அதை, அல்லது மற்றதைச் செய்தாயா?” “இல்லை, ஐயா. நான் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தைப் பெற்றுக்கொண்டேன்.” சுற்றிக் கட்டினவர்களாய், ஆயுதவர்க்கத்தைத் தரித்தவர்களாய், சத்தியம் என்றும் அரைக்கச்சையைக் கட்டிக்கொள்ளுங்கள்! இப்பொழுது, அவர்கள் புசித்துக்கொண்டிருக்கும் போதே, ஆயத்தப்பட்டிருந்தனர். நீங்கள் இந்த இராப்போஜனத்தைப் புசிப்பதற்கு முன்பே, நீங்கள் வஸ்திரம் தரித்திருக்க வேண்டுமென்று தேவன் விரும்புகிறார். மேலும், சகோதரனே, நீங்கள் அதைச் சரியாக புசிக்கக் கூடும் முன்பு, நீங்கள் வஸ்திரம் தரித்திருக்க வேண்டியிருக்கிறது. உங்கள் இருதயத்திற்குள் இருக்கிற பரிசுத்த ஆவியானவர், பரிசுத்த ஆவியைக் கொண்டுவந்து, தேவனுடைய வார்த்தையின் பேரில் பிழைக்கிறீர்கள். 56சகோதரர்களே, இன்று சபையோடுள்ள காரியம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? சபையானது இரத்த சோகை பிடித்த ஒரு நிலைக்குள்ளாகி விட்டது என்று நான் நம்புகிறேன், இரத்தமானது அதை விட்டு போய் விட்டிருக்கிறது. உதாரணமாக, நான் ஒரு மருத்துவராக இருந்து, மகத்தான பெரிய, ஆறு அடி உயரமுடைய ஒரு மனிதன், வந்து, “சொல்லுங்கள், மருத்துவரே, நான் - நான் - நான் மிகவும் பலவீனமாக இருக்கிறேன், என்னால் எழும்பவே முடியவில்லை. நான் -நான் அப்படியே சுற்றிலும் தள்ளாடிக் கொண்டிருக்கிறேன்” என்று கூறுவான் என்றால் என்னவாகும்? நான், “என்ன விஷயம்?” என்று கேட்பேன். நல்லது, எனக்குத் தெரியவில்லை, நான் அப்படியே மிகவும் பலவீனமாக இருக்கிறேன்.“ நான், “நல்லது, இப்பொழுது, குறிப்பிட்ட சரீர சம்பந்தமான காரியங்களைச் செய்தீர்களா...?” என்று கேட்பேன். “ஆமாம், அது சரிதான்.” அதற்கு நான், “நல்லது, கடைசியாக நீங்கள் எப்போது சாப்பிட்டீர்கள்?” என்று கேட்பேன். “நல்லது...” “நீர் ஏறக்குறைய 180 பவுண்டு எடையுள்ள மனிதராக இருக்கிறீர்.” “நேற்றுக்கு முந்தைய நாள், நான் மிருதுவான மெல்லிய பிஸ்கட்டில் பாதியை சாப்பிட்டேன்.” நான், “மனிதா, நீர் மரணத்திற்கு ஏதுவாக பட்டினி கிடந்திருக்கிறீர்! நீர் போய் முறையான ஒரு நல்ல சாப்பாட்டை புசியும், அப்பொழுது நீர் மிக பலவீனமாக இருக்க மாட்டீர்” என்று கூறியிருப்பேன். இன்று சபைளோடுள்ள காரியம் அதுதான். நாம் எண்ணிக்கையில் பெரிதாக இருக்கிறோம், ஆனால், சகோதரனே, நாம் பட்டினி கிடந்து மரித்துக் கொண்டிருக்கிறோம்! அல்லேலுயா! அண்டை வீட்டார் ஏதாகிலும் சொல்லப் போகிறார்களோ என்று பயப்படுகிறீர்கள். நமக்கு என்ன தேவையாயிருக்கிறது என்றால், ஒரு நல்ல பழைமை நாகரீகமான, பரிசுத்த ஆவியின் குலுக்கப்படுதல் தான். அல்லேலூயா! இரண்டு கரங்களையும் மேலே உயர்த்தி, “கர்த்தாவே, என்னைப் போஷியும்” என்று கூறுங்கள். வார்ப்பூட்டையும் (buckle), ஆயுதவர்க்கத்தையும் தரித்துக்கொண்டு, தொடர்ந்து அணிவகுத்துச் செல்லுங்கள். 57அந்த சம்பவமானது நடந்திருந்தது. 38வது வசனத்தில், நாம் இதை வாசிக்கிறோம். அவர்களோடே கூடப் பல ஜாதியான ஜனங்கள் அநேகர் போனதும் அன்றி, ..... ஆடுமாடுகள் முதலான மிருக ஜீவன்களும் போயிற்று. சகோதரனே, பல ஜாதியான ஜனங்கள்! அந்த நிகழ்வுகள் நடந்திருந்தன, ஒரு பெரும் எழுப்புதல் நடந்து கொண்டிருந்தது. ஜனங்கள் இரட்சிக்கப்பட்டு, உள்ளே வந்து கொண்டிருந்தார்கள். ஒரு கூட்டமோ, மேலே சென்று, அதை ஆள்மாறாட்டம் செய்து கொண்டிருந்தனர், அவர்கள் மேலே சென்று, தாங்கள் விசுவாசிகளாக இருக்கிறார்கள் என்பது போன்று நடந்து கொண்டார்கள். நிச்சயமாக, அவர்கள் செருப்புகளையும் மற்றும் எல்லாவற்றையும் அணிந்து கொண்டு, ஆயத்தப்பட்டு விட்டார்கள். ஆனால் இராப்போஜனம் எடுத்து, தொடர்ந்து அணிவகுத்து சென்று கொண்டிருந்த, அந்த அதே பலஜாதியான ஜனங்கள் தான், அந்த அதே ஜனங்கள் தான் முறுமுறுக்கத் தொடங்கி, இஸ்ரவேல் புத்திரர்களுடைய இருதயங்கள், (இருதயங்கள்) எகிப்திற்கு மறுபடியும் திரும்பிப் போகும்படிக்கு காரணமானார்கள். சகோதரனே, இன்றிரவும் அது அவ்வாறு தான் உள்ளது. ஒரு எழுப்புதலைக் கொண்டிருப்போம் என்றால், எதையும் போன்று நிச்சயமாகவே, அங்கே பலஜாதியான ஜனங்கள் இருக்கத்தான் செய்வார்கள். அவர்களில் சிலர் உள்ளே வர முயற்சிப்பார்கள், அவர்கள் பாவனை செய்பவர்கள். நீங்கள் முன்குறித்தல் என்பதைக் குறித்துப் பேசும்போது..... 58அன்றொரு நாள் யாரோ ஒருவர் என்னை அழைத்து, “தேவன் முன்குறித்திருக்கிறார் என்றால், இதைக் குறித்து என்ன?” என்று கேட்கலாம். நானோ, சற்று ரோமர் நிருபத்தை வாசித்துப் பாருங்கள், 8வது அதிகாரம், மற்றும் 9வது அதிகாரத்தில், நீங்கள் புரிந்து கொள்வீர்கள். தேவன் எவன் மேல் இரக்கமாயிருக்க சித்தமாயிருக்கிறாரோ, அவன் மேல் இரக்கமாயிருப்பார்“ என்றேன். “அப்படியானால், பிரசங்கம் பண்ணுவதால் என்ன பயன்?” நான், “அது ஊழியக்காரர்களாக இருக்கும் உம்முடையதும் என்னுடையதுமான கடமையாக உள்ளது” என்றேன். இயேசு, “தேவனுடைய இராஜ்யம், ஒரு வலையைத் தன்னுடைய கரத்தில் வைத்திருந்து, கடலுக்குச் செல்லும் ஒரு மனிதனுக்கு ஒப்பாக இருக்கிறது. அவன் வலையை வீசி விட்டு, அதை இழுக்கிறான். அதுதான் சுவிசேஷம். அப்போது அங்கே உள்ளே ஆமைகளையும், தண்ணீர் பூச்சிகளையும், சர்ப்பங்களையும், பச்சை நிற தவளைகளையும், பாம்புகளையும், மற்ற எல்லாவற்றையும் கொண்டிருந்தார்கள். அவன் அங்கு உள்ளே சில மீனையும் கொண்டிருந்தான்! அல்லேலூயா!” என்றார். 59முதலாவது காரியம் என்னவென்று தெரியுமா, அந்த எழுப்புதல் முடியும் போது, அந்த சுவிசேஷ வலையானது வெளியே இழுக்கப்படுகிறது, அப்போது அந்தப் பழைய ஆமையானது, அங்கே அதில் எதுவுமேயில்லை என்று எனக்குத் தெரியும்“ என்று கூறிவிட்டது. அந்தப் பழைய தண்ணீர் பூச்சியும், ”நானும் கூட அதைத் தான் நம்புகிறேன்“ என்று கூறிவிட்டு, சரியாக..... (இடத்திற்கே திரும்பிப் போய் விட்டன... பன்றி, சரியாக அதனுடைய சேற்றில் புரளப் போவது. அந்தப் பாம்பும், முதற்கண் எனக்கு அதில் நம்பிக்கையில்லை” என்று கூறிவிடுகிறது. ஆனால் அங்கே சில மீன்களும் கூட இருக்கின்றன! அல்லேலூயா! அல்லேலூயா! ஊழியக்காரர்கள் சுவிசேஷ வலையை வீசி, அதை இழுப்பதற்கான நேரம் இதுவே. எது மீன் என்று தேவனுக்குத் தான் தெரியும். அவன் துவக்க முதலே ஆமையாகத்தான் இருந்தான்; இவனோ துவக்க முதலே மீனாக இருந்தான்; எது எதுவாக இருக்கிறது என்று தேவனுக்குத் தெரியும், எனக்கோ தெரியாது. ஓடையில் வலையை வீசி, மேலே இழுத்து, “கர்த்தாவே, இதோ அவர்கள் இருக்கிறார்கள்” என்று கூறுவதே என்னுடைய வேலையாக உள்ளது. அல்லேலூயா! அமென். நிச்சயமாக, அதுதான், அதுதான் சுவிசேஷ வலையாக இருக்கிறது. 60இன்றைய நாளை நீங்கள் அறிவீர்கள். நான் சமீபத்தில் ஒரு இடத்திற்குச் சென்றேன், அவர்கள், 'நாம் இராப்போஜனத்தைக் கொண்டிருக்கப் போகிறோம்“ என்றார்கள் அவர்கள் ஒரு பழைய ரொட்டித்துண்டை எடுத்து, அதை இந்த விதமாக சிறு துண்டுகளாக துண்டித்து, அங்கேயிருந்த ஒரு கூட்டம் ஜனங்கள் மத்தியில் அதைக் கொடுத்தார்கள், அந்தச் சபையில் இருந்த எல்லாருமே இராப்போஜனம் எடுத்துக் கொண்டிருந்தார்கள். சகோதரனே, அது சரியல்ல. நீங்கள் இராப்போஜனம் எடுப்பதற்கு முன்பு, உங்கள் இருதயம் தேவனோடு சரியாக இருந்தாக வேண்டும். ஏசாயா அதைத் தீர்க்கதரிசனமாக கூறியிருக்கிறான், நீங்கள் அதைத் தேடிப்பார்க்க விரும்பினால், அது 28ம் அதிகாரம், 8வது வசனம். அவர், “போஜன பீடங்கள் வாந்தியினாலும் எல்லாம் அசுத்தத்தினாலும் நிறைந்திருக்கிறது, எல்லா இடங்களுமே அசுத்தமாக உள்ளன. நான் யாருக்கு உபதேசத்தைப் போதிக்க முடியும்? யாருக்கு அறிவைக் கொடுப்பேன்? முலை மறக்கப்பண்ணப்பட்டவர்களுக்குத் தான்!” என்றான். இங்கே பின்னாலிருக்கும் எங்கள் சிறு குழந்தை பக்கத்தில் விளையாடிக் கொண்டிருக்கிறது! நாம் வேறு யாரோ ஒருவருக்கு தேவனுடைய வல்லமைகளைக் குறித்து போதிக்க வேண்டியிருக்கும் போது, நாமோ இதைச் செய்வது சரியா என்றோ, அதைச் செய்வது சரியா என்றோ, அதைக் குறித்து இன்னும் அமளிச் செய்து கொண்டிருக்கிறோம். “போஜனபீடங்கள் வாந்தியினால் நிறைந்திருக்கிறது! 61என்னால் அங்கே நிறுத்த முடியவில்லை. நாம் தொடர்ந்து போவோம், நான் அந்த இடத்திற்கு வந்தாக வேண்டும். சரி. அவர்கள் தங்கள் ஆயுதவர்க்கத்தையும், தங்களுடைய அரைக்கச்சைகளையும் கட்டிக்கொண்டு, தொடர்ந்து அணிவகுத்துச் சென்றார்கள் (marched out). அவர்கள் நேராக சிவந்த சமுத்திரத்திற்கு வந்தார்கள். அவர்களைப் போக விடுவதில் பார்வோன் சந்தோஷமாயிருந்தான். அவர்கள் சிவந்த சமுத்திரத்தை அடைந்த போது, அங்கே அவனுடைய இராணுவம் அவர்களைப் பின்தொடர்ந்து வந்து கொண்டிருப்பதை அவர்கள் கண்டார்கள். அதோ அவர்கள் சரியாக அங்கே பாளயமிறங்கியிருந்தார்கள், இந்தப் பக்கத்தில் மலைகளும் வனாந்தரங்களும் இருக்க, இந்தப் பக்கத்திலோ பார்வோனின் சேனை வந்து கொண்டிருந்தது, அவர்களுக்கு முன்னால் சிவந்த சமுத்திரம் இருந்தது. ஆனால் தேவனுடைய பாதையானது சிவந்த சமுத்திரத்தினூடாக வழிநடத்தியிருந்தது. அவருடைய பாதையானது வழிநடத்திக் கொண்டிருக்கிறது என்பதை நான் அறியும் வரையில், அதைக் குறித்து அக்கறை கொள்வது எல்லாம் அவ்வளவு தான், அப்படியே தொடர்ந்து நடந்து கொண்டேயிருங்கள். அல்லேலூயா, “மோசே, அந்தக்கோலை எடுத்துக்கொண்டு, அந்தத் தண்ணீரை நோக்கி நடந்து செல்.” ஆமென்! “கர்த்தாவே, என்ன நடந்து கொண்டிருக்கிறது?” “அது உன்னுடைய வேலை அல்ல. அப்படியே தொடர்ந்து நடந்து கொண்டேயிரு!” ஆமென். டாம் மெரிடெத்தும், மற்றவர்களுமான தோழர்களே, சுவிசேஷத்தைப் பிரசங்கம் பண்ணுங்கள். “என்ன சம்பவிக்கப் போகிறது?” அது உன்னுடைய வேலை அல்ல; அப்படியே தொடர்ந்து பிரசங்கம் பண்ணுங்கள்! தேவனுக்கு துதியைச் செலுத்துங்கள். 62இதோ அவர்கள் போகிறார்கள், அவர்கள் அங்கே இறங்கிக் கொண்டிருக்கிறார்கள். தேவன் அந்த அக்கினிஸ்தம்பத்தில் இருந்து, “அவர் கோப கண்களோடு அதனூடாக கீழே நோக்கிப் பார்த்தார் என்றும், அவர் அவ்வாறு பார்த்த போது, சிவந்த சமுத்திரம் பயந்து, பின்னிட்டுத் போகத் துவங்கி, இஸ்ரவேலர்கள் வெட்டாந்தரையின் வழியாக கடந்து சென்றார்கள்” என்று எழுத்தாளர்களில் ஒருவன் எழுதினான். அவர்களுடைய கால்களில் ஒருபோதும் சேறு படக்கூட இல்லை. நல்லது, இந்த மனிதர்களோ நெடுக வந்து, அவர்களைப் போல நாமும் மனிதர்கள் தான், அவர்கள் தொழுது கொள்வதைப் போன்று, நாமும் தொழுது கொள்கிறோம், எனவே நாம் அதைச் செய்வோம்“ என்று கூறிக் கொண்டனர். அவர்கள் அங்கே வெளியில் வந்த போது, அவர்களால் அதைச் செய்ய முடியாது என்பதைக் கண்டுகொண்டனர். சகோதரனே, இந்நாட்களில் ஒன்றில் வேறுபிரிக்கும் நேரம் வரும்போது, அதுதான் சம்பவிக்கப் போகிறது. கிறிஸ்தவத்தைப் பாவனை செய்து கொள்ள முயற்சிக்கும், வெதுவெதுப்பான சபை அங்கத்தினர்களாகிய உங்களிடம் தான், இந்நாட்களில் ஒன்றில், நீங்கள் அந்தப் பரிசுத்த ஆவி கூட்டத்தைப் பின்பற்ற முயற்சிக்கப் போகிறீர்கள், அப்போது உங்களுடைய சக்கரங்கள் அதோ அங்கே வெளியே எங்கோவுள்ள சேற்றில் கழன்று போவதைக் காண்பீர்கள். அது சரியே. கர்த்தரைச் சந்திக்க பத்து கன்னிகைகள் போனார்கள், அதில் ஐந்து பேர் புத்தியுள்ளவர்களாகவும், ஐந்து பேர் புத்தியில்லாதவர்ளாகவும் இருந்தார்கள். அவர்கள் தீவட்டிகளில் எண்ணையை வைத்திருந்து, அது பிரகாசமாக (எரிய, திரியை கத்தரித்து விடுகிறார்கள், இந்நாட்களில் ஒன்றில், அவர்கள் மேலே (போகப் போகிறார்கள். அப்போது அங்கே அழுகையும் புலம்பலும் பற்கடிப்பும் இருந்தது. 63அந்த விருத்தசேதனமில்லாத எகிப்தியர்கள், அவர்களால் ஏன் அதைச் செய்ய முடியாதிருந்தது? அவர்கள் விருத்தசேதனம்ப ண்ணப்பட்டிருக்கவில்லை. அவர்கள் உடன்படிக்கையில் இல்லை. அவர்கள் விருத்தசேதனம் பண்ணப்பட்ட விசுவாசிகளாக இருந்திருப்பார்களானால், தேவன் இஸ்ரவேலர்களை அடையாளம் கண்டது போன்று அதேவிதமாக அவர்களையும் (எகிப்தியர்களையும் அடையாளம் கண்டுகொண்டிருக்க வேண்டியிருந்திருக்கும். மகிமை! ஓ , நான் சரியாக இப்பொழுதே என்னுடைய அளவை போன்று இருமடங்காக விரும்புகிறேன். நான் பக்தி பரவசப்படுகிறேன். நான் உண்மையாகவே பக்தி பரவசப்படுகிறேன். கவனியுங்கள் அவர்கள் விருத்தசேதனம் அற்றவர்களாக இருந்தார்கள். அவர்கள் மனிதர்களாக இருந்த போதிலும், அவர்கள் உடன்படிக்கையில் இல்லை . அவர்கள் அருமையாகவும், சிறப்பாகவும் உடையுடுத்தியிருந்தார்கள். அவர்கள் அவ்வளவு நல்லவர்களாக ஜீவித்தார்கள். அவர்களுக்கு சிறந்த வீடுகள் இருந்தன. அவர்கள் உலகப்பிரகாரமாக சிந்திக்கிற சிறந்த வர்க்கமாயிருந்த ஜனங்களுக்குள் இருந்தனர். மற்றவர்களைப் போலவே அவர்களும் சபைக்குச் சென்றார்கள். அவர்கள் எல்லா நேரமும் பின்தொடர்ந்து போய்க் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு தேவனைக் குறித்து எதுவும் தெரியாது என்று என்னிடம் சொல்ல வேண்டாம். யோசேப்பு ஏற்கனவே அவர்களிடம் சொல்லியிருந்தான், அந்தச் செய்திகள் (news) நானூறு வருடங்களுக்கு முன்பே அங்கே பரவியிருந்தது. நிச்சயமாக, அவர்கள் அதை அறிந்திருந்தார்கள். ஆனால் அவர்களோ, “மதவெறிப்பிடித்த கூட்டம், அவர்கள் செய்யக் கூடிய எதையும் நம்மாலும் செய்ய முடியும்” என்று எண்ணினார்கள். ஆனால் அவர்களோ தோல்வியடைந்தார்கள். தேவன் விருத்தசேனத்தை மாத்திரமே அடையாளம் கண்டுகொண்டார். அங்கே அவர்கள் போனார்கள். 64சிறு வயதான தாவீது நின்று கொண்டு, “ஜீவனுள்ள தேவனுடைய சேனைகள் இங்கே நின்று கொண்டு, அந்த விருத்த சேனம் இல்லாத பெலிஸ்தியர்கள் ஜீவனுள்ள தேவனுடைய சேனைக்கு சவால் விட அனுமதிக்கலாம் என்றா என்னிடம் சொல்ல வருகிறீர்கள். ஏதோவொன்றை என்மேல் வையுங்கள், நான் போகட்டும்” என்று கூறினதில் வியப்பொன்றுமில்லை. ஆம், ஐயா. இன்னும் அதிகமான தாவீதுகளை எங்களுக்குத் தாரும். 65அவர்கள் அந்த பிரவாகத்தைக் கடந்தபோது, அவர்கள் மறுகரையை அடைந்தார்கள். அப்போது தேவன் அதை மூடிப்போட்டார். அங்கே அந்த ஆளோட்டிகள் இருந்தார்கள். அந்த யூதர்கள் எவ்வாறு உணர்ந்தார்கள் என்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? அங்கே பின்னால் திரும்பிப் பார்த்த போது, அவர்கள் மேல் ஏற்படுத்தப்பட்டு, அவர்களை சவுக்கால் அடித்து, அவர்களுடைய முதுகை நீள்வரிகள் உண்டாக அடித்து தாக்கி, அவர்களை இந்த விதமாக மூர்க்கத்தனமாக வேலை வாங்கிய (pulled over), அந்த அதே மனிதர்கள் செத்து, கடலில் மிதந்து கொண்டிருந்தார்கள். சகோதரனே, நீங்கள் இயேசு கிறிஸ்துவின் இரத்தமாகிய சிவந்த சமுத்திரத்தினூடாக வரும்போது, உங்களுக்குச் செய்ய விருப்பமில்லாதிருந்த காரிங்களுக்கு உங்களை வலுக்கட்டாயமாக தள்ளின ஒவ்வொரு பழைய அசுத்தமான பழக்கவழக்கங்களும், அது இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தில் மரித்து, (அல்லேலூயா, அது சரியே), அந்த ஓடையில் மிதந்து செல்வதை நீங்கள் கண்டுகொள்வீர்கள். 66மோசே ஆவிக்குள்ளானான் என்பதில் வியப்பொன்றுமில்லை! இப்பொழுது, நாம் ஏதோவொரு விதமான புதிய மார்க்கத்தைக் கொண்டிருக்கிறோம் என்பதைக் குறித்து நீங்கள் பேசி, இதைப் பார்க்கிறீர்கள். தீர்க்கதரிசினியாயிருந்த மிரியாம், அவள் அங்கே நோக்கிப் பார்த்து, ஒரு தம்புருவை (tambourine) எடுத்து, அடித்து, நடனமாடத் தொடங்கினாள், அவள் அந்தக் கடற்கரையில் இறங்கிச் சென்று, நடனமாடி, இந்தத் தம்புருவை அடிக்கத் தொடங்கினாள். இஸ்ரவேல் குமாரத்திகளும் அவளைப் பின்தொடர்ந்து,நடனமாடிக் கொண்டும், பாடிக்கொண்டும், இந்த தம்புருவை அடித்துக் கொண்டும் இருந்தார்கள். மேலும் மோசே தன்னுடைய கரங்களை மேலே உயர்த்தி, அவன் ஆவிக்குள் பாடும் அளவுக்கு, மிகவுமாக caught away பரிசுத்த ஆவிக்குள்ளானான். அல்லேலூயா! அது சரியே. அது சரியே. மோசேயின் மேலிருந்த அந்த அதே பரிசுத்த ஆவி தான் இன்றிரவு இக்கட்டிடத்திற்குள்ளும் இருக்கிறது. அல்லேலூயா! மிரியாமை நடனமாடச் செய்த அதே ஒருவர் இன்றிரவும் இங்கேயிருக்கிறார். தேவன் தேவனாகவே இருக்கிறார், அவர் மாறுவதில்லை . ஆம், ஐயா. 67அப்படியானால், நீங்கள், அந்த மதவெறிப்பிடித்த கூட்டத்தைப் பாருங்கள்“ என்று கூறலாம். ஆனால் பரிகசித்து ஏளனம் செய்ய அப்போது அங்கே யாரும் இல்லாதிருந்தது, அவர்கள் எல்லாரும் மாண்டு போயிருந்தனர். அவர்கள் தங்களுக்கு அவை எல்லாவற்றையும் உடையவர்களாக இருந்தனர். ஓ, கொஞ்ச நேரம் கழித்து, அது மகிமையாக இருக்கும்! அவர்கள் ஒரு அற்புதமான நேரத்தை உடையவர்களாக இருந்தார்கள். அவர்களை நோக்கிப் பாருங்கள். இப்பொழுது ஒரு சில நிமிடங்களுக்கு அவர்களை கவனிப்போம், நம்மால் அடுத்த சில நிமிடங்களில், கன்மலை -யிடம் அவர்களைக் கொண்டுவரக் கூடுமானால், நம்மால் அது கூடுமானால் இப்பொழுது நான் உரிய நேரத்தைக் கடந்து விட்டேன், என்னை மன்னித்துக்கொள்ளுங்கள். ஆனால் நான் அப்படியே மிகவும் நன்றாக உணருகிறேன், என்னால் இப்பொழுது நிறுத்தி விட்டுச் செல்ல முடியாது, எனவே, உங்களுக்கு விருப்பமானால், சற்று நேரம் பொறுத்துக்கொள்ளுங்கள். நாம் அவர்களைக் கொஞ்சம் பார்க்கலாம். ஓ, நான் அவர்களைக் கவனிக்க விரும்புகிறேன். 68அந்தப் பெரிய பாடலும், பெரிய ஆர்ப்பரிப்பும், ஒரு அல்லேலூயா என்பதைக் கொண்டிருக்கும் பெரிய நேரமும் முடிந்த பிறகு, அவர்கள் அந்த வனாந்தரத்தின் வழியாகப் போகத் துவங்கினார்கள், பிறகு அவர்களை நேராக கசப்பான தண்ணீர்களிடம் வழிநடத்தினார். அது வினோதமாயில்லையா? ஓ, என்னே! சரியாக சோதனைக்குள்ளாக, சரியாக தண்ணீர்கள் கசப்பாக இருந்த இடத்திற்குள் அவர்களை வழிநடத்தினார், அவர்களுக்கோ அதைக் குடிக்க முடியாதிருந்தது. அவர்களுக்குப் புசிக்க ஒன்றுமே இல்லாதிருந்தது. புசிக்க எதுவுமேயில்லை, தண்ணீரும் கசப்பு. கவனியுங்கள், அந்த மாராவின் நீரோடை, “கசப்பான தண்ணீர்,” அது சரியாக தேவனுடைய பாதையில் வைக்கப்பட்டிருந்தது, அவர் தம்முடைய பிள்ளைகளை வழிநடத்திக் கொண்டிருந்தார். அது வினோதமாயில்லையா? தேவன் மாற்று வழியில் கொண்டு சென்றிருக்கலாமே என்பது போன்று தோன்றுகிறது, ஆனால் அவரோ நேராக அந்த தண்ணீருக்கே அவர்களை வழிநடத்தினார். “சிலரைத் தண்ணீ ரினூடாகவும், சிலரை வெள்ளத்தினூடாகவும், சிலரை ஆழமான சோதனையினூடாகவும், ஆனால் எல்லாரையும் இரத்தத்தினூடாகவும். அதுதான் தேவன் தம்முடைய ஜனங்களை வழிநடத்தும் அவருடைய பாதையாகும். 69ஆமாம், அங்கேயே நின்று கொண்டு, “நம்மால் என்ன செய்ய முடியும்?” அல்லேலூயா! “நாம் கர்த்தரைப் பின்பற்றி வந்திருக்கிறோம். நாம் இரத்தத்தினூடாக வந்திருக்கிறோம். நாம் நம்மையே வேறு பிரித்திருக்கிறோம்.” மோசே, தரித்து நில்லுங்கள்!“ என்றான். அது சரியே. ஒவ்வொரு சோதனையிலும், அவர் தப்பிக்கொள்ளும்படியான ஒரு போக்கை உண்டுபண்ணுவார். அங்கே அந்தப் பக்கத்தில் ஒரு சிறு செடி நின்று கொண்டிருந்தது. அல்லேலூயா! அவன் அந்தச் செடியை வெட்டி, அதைத் தண்ணீரில் போட, அந்தத் தண்ணீர் மதுரமாக ஆனது. குதூகலம் பொங்கி விட்டது (bubbling up), களிகூருதல். எப்படிப்பட்ட வேறொரு ஆர்ப்பரிப்பின் நேரம் அவர்களுக்கு உண்டாயிருந்தது! ஆமென். 70பிசாசு உங்களை சரியாக பின்னாலுள்ள ஒரு மூலையில் வைத்து, “நான் சரியாக இப்பொழுதே அவனைப் பிடித்து விட்டேன். பையனே, அவனால் இப்பொழுது நகரவே முடியாது. சரியாக இப்பொழுதே அவனைப் பிடித்து விட்டேன்” என்று கூறும்போது. அப்போது கர்த்தர் கூடவே வருவார், சிலுவையானது நமக்கு முன்பாக வைக்கப்படும், (அல்லேலூயா ) நாமோ தூரமாகச் சென்று விடுவோம். மருத்துவர், “உங்களுக்காக எதையுமே செய்ய முடியாது” என்று கூறலாம். ஓ, என்னே! ஓ, யாரோ ஒருவர், உனக்குத் தெரியுமா, உனக்குப் பைத்தியம் பிடிக்கப் போகிறது, நீ பித்து பிடித்தவனாக ஆகிவிடுவாய்“ என்று, அல்லது அதைப் போன்று ஏதோவொன்றைக் கூறினார், அப்போது தேவன் கூடவே வந்து, உங்கள் மேல் ஒரு ஆசீர்வாதத்தை பொழிந்தருளுவார். அதைக் குறித்து அப்படியே மறந்து விடுங்கள். தேவன் தாம் எங்கே வழிநடத்திக் கொண்டிருக்கிறார் என்பதை அறிந்திருக்கிறார். ஆமென். வியூ! நான் இங்கே மிகவும் மகத்தான ஒரு நேரத்தை உடையவனாயிருக்கிறேன் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். 71கவனியுங்கள், அவர்களுக்குப் புசிக்க எதுவும் இல்லாதிருந்தது. பொதிந்து வைத்திருந்த அவர்களிடம் இருந்த அந்தக் கொஞ்ச ரொட்டியையும், அவர்கள் முழுவதுமாக தின்று தீர்த்து விட்டனர். இப்பொழுது, “நாம் என்ன செய்யப் போகிறோம்?” “நீங்கள் எல்லாரும் படுக்கைக்குச் சென்று, இன்றிரவு உபவாசம் இருங்கள்” என்றான். நீங்கள் எப்பொழுதாவது அதை முயற்சித்துப் பார்த்திருக்கிறீர்களா? சிலசமயம் அது நலமாக இருக்கும். அடுத்த நாள் காலையில், அவர்கள் வெளியே போனபோது, தரை முழுவதும் சிறிய அடைகள் (wafers) கிடந்தன. தேவன் பரலோகத்திலிருந்து கொஞ்சம் அப்பத்தை பொழிந்திருந்தார். நல்லது, அவர்கள் அதைப் பொறுக்கி எடுத்து, அதை ருசிக்கத் தொடங்கினார்கள். ஏன், அது, அதின் ருசி தேனைப் போன்றும், அடையைப் போன்றும் இருந்தது“ என்று கூறுகிறது. ஓ, என்னே! அது எப்படியிருக்கிறது? ”தேனைப் போன்ற ருசியாயிருந்தது.“ அவர்கள் அதைப் புசிக்கத் தொடங்கி, ”ஏன், இது நன்றாக உள்ளதே“ என்றார்கள். அது இல்லாதவர்கள், அவர்கள் அதைச் சேகரித்து சாப்பிடத் தொடங்கினார்கள். அது கன்மலையிலுள்ள தேனைப் போன்ற ருசியாயிருந்தது! 72அந்தச் சிறு ஆட்டை உடைய, தாவீதைக் குறித்து நான் எப்போதும் கூறினேன் என்று உங்களுக்குத் தெரியும். மேய்ப்பனின் கவண் அல்லது ஒரு பை, மேய்ப்பருக்குரிய பை (scrip bag) அவனிடம் இருந்தது, அவன் எப்போதுமே அதற்குள்ளே தேனை எடுத்துக்கொண்டு போவான், உங்களுக்குத் தெரியும். எப்போதாவது அவனுடைய ஆடுகளில் ஏதோவொன்று வியாதிப்படுமானால், அவன் அந்தத் தேனை அதிலிருந்து வெளியே எடுத்து, அதை சுண்ணாம்புக் கல் பாறையின் மேல் தடவுவான் - அதைத் தடவுவான், அது ஒரு பழங்கால சிகிச்சை முறையாக இருந்தது. நீங்கள் அறியும் முதலாவது காரியம் என்னவென்றால், அந்த ஆடு அங்கே மேலே, அந்தப் பாறையை நக்கும்படியாகப் போகும். அவைகள் அந்தப் பாறையின் மேல் நக்கும் போது, அந்த தேனை அதிலிருந்து நக்கியெடுத்து, அந்தச் சுண்ணாம்புக் கல்லையும் நக்கும், அப்போது அது சுகமடைந்து விடும். அது அற்புதமாக இல்லையா? ஏன், இன்றிரவு இங்கே மேய்ப்பருக்குரிய அடைப்பப்பை (scrip bag) முழுவதும் தேனை நான் பெற்றிருக்கிறேன், நான் அதை இயேசு கிறிஸ்துவாகிய பாறையின் மேல் வைக்கப் போகிறேன், சிறு ஆடுகளாகிய நீங்கள் எல்லாரும் அந்தப் பாறையை நக்கும்படி செல்லுங்கள், “நக்கு, நக்கு, நக்கு என்று (நக்குங்கள்), அப்பொழுது நீங்கள் அதைவிட்டு வெளியே வருவது நிச்சயம். அல்லேலூயா! ஆம், ஐயா. ஓ, ஆம், ஐயா. (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசிரியர்.) 73அவர்கள் பிரயாணம் பண்ணுவது வரையில், நீடித்திருக்கும்படி! அது நீடித்திருந்தது, அது ஒருபோதும் நின்றுபோவதில்லை! இப்பொழுது, நீடித்திருக்கும்படியாக, அவர்கள் அடுத்த இரவு மட்டுமாக, அவர்கள் ஒவ்வொரு இரவும் போதுமானதை சேகரிக்க வேண்டியிருந்தது. அவர்கள் ஏதாவது மீதியாக வைத்திருந்து, “இப்பொழுது, நாம் இன்றிரவு நிறைய சேகரித்து, நாளை இரவு எழுப்புதலுக்குத் திரும்பிச் செல்வோம். நாம் இன்றிரவுக்கு ஏராளம் சேகரித்து வைப்போம், அப்போது நாளை இரவு, நமக்கு வீட்டிலே நிறைய மீதியாயிருக்கும் என்று கூறுவார்களானால். இல்லை, இல்லை, அப்படியானால், அதில் புழுக்கள் (wiggle-tail) பிடித்து விடும். நிறைய ஜனங்களுடைய அனுபவங்களோடு அதுதான் காரியமாக இருக்கிறது. நீங்கள், நல்லது, சகோதரனே, நான் வழக்கமாக சந்தோஷத்தைக் கொண்டிருப்பதுண்டு“ என்று கூறலாம். எதிர்கால உபயோகத்துக்கு சேமித்து வைக்க முயற்சித்து விட்டீர்கள். சகோதரனே, சென்ற இரவில் என்னிடம் இருந்தது போய் விட்டது. நான் இப்பொழுது எதைப் பெற்றிருக்கிறேன்! அல்லேலூயா! ஆமென். சில ஜனங்களுடைய அனுபவமானது வெடிப்புள்ள தோட்டியைப் போன்றது என்று உங்களுக்குத் தெரியும். அது சரியே. நாம் ஒவ்வொரு இரவும் ஒரு புதிய இறைச்சித்துண்டைப் பெற்றுக்கொண்டு, ஒவ்வொரு இரவும் ஒரு புதிய அடியெடுத்து வைப்போமாக. அது பிரதிநிதித்துவம் செய்யப்பட்டன. சகோதரனே, அது முற்றிலும் சத்தியமாக இருக்கிறது. அது சரியே. நமக்குத் அவசியமாயிருப்பது என்னவென்றால், ஒரு பழைமை நாகரீகமான… 74ஓ, நமக்கு நிறைய சபைகள் உண்டு, ஓ, என்னே, அருமையான அங்கத்தினர்கள் நமக்கு இருக்கிறார்கள். ஓ, இப்போதெல்லாம் சபைகளில் ஏராளமான பணம் இருக்கிறது, நிச்சயமாக, தொடர்ந்து நடத்திச் செல்ல, உங்களுக்கு வேண்டிய மட்டும் அதிகமாக உள்ளது. நமக்கு அவை எல்லாமே இருக்கிறது, ஆனால் நம்மிடம் எந்த அக்கினியும் இல்லை. நீங்கள் இங்கே கீழே புகை வண்டிப்பெட்டி தொழிற்சாலைக்குச் சென்று, ஒரு பெரிய அருமையான இணைக்கப்பட்ட என்ஜின்களை உருவாக்கி விட்டு, அதை எப்படி ஓட்டுவது என்று அறிந்துள்ள கல்வி கற்ற ஒரு அருமையான மனிதனைப் பெற்று, எல்லா ஜனங்களும் உள்ளேயிருக்க, நல்லது, நாம் போகலாம்“ என்று கூறுவதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? உந்தி தள்ளும்போதோ, போவதற்கு அங்கே எதுவுமில்லை . அவர் கரத்தை நீட்டி, ”விசிலை இழுப்பது (pull) நல்லது“ என்று கூறலாம். விசிலுக்குக் கூட போதுமான நீராவி அவரிடம் இல்லை . அது சரியே. 75நிறைய ஜனங்கள், “ஆமென்” என்று கூறுவதற்கும் கூட நீராவியைப் பெற்றிராதவர்களாக இருக்கிறார்கள். உங்களால் அதை இலவசமாகக் கொண்டிருக்க முடியும். ஓ. அல்லேலூயா! இன்றிரவு நமக்கு என்ன தேவையாயிருக்கிறது! கவனியுங்கள், நாகரிகம் நெருப்பின் மூலமாக வருகிறது, திரும்பிச் சென்று, நெருப்பை உபயோகப்படுத்தின பழங்குடியினரைக் கண்டுபிடியுங்கள்; நெருப்பு தான் என்னுடைய ஆடைகளை உருவாக்குகிறது, நெருப்பு தான் வெளிச்சத்தை உருவாக்குகிறது, நெருப்பு தான் என்னுடைய போஜனத்தை சூடாக்குகிறது, எல்லாமே நெருப்பின் மூலமாக வருகிறது. நீங்கள் நவீன நாகரிகத்தில் ஜீவிப்பீர்களானால், நீங்கள் நெருப்பின் மூலமாகத்தான் ஜீவிக்கிறீர்கள். நீங்கள் தேவனுடைய தெய்வீக பிரசன்னத்தில் ஜீவிப்பீர்களானால், நீங்கள் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் ஞானஸ்நானம் பண்ணப்பட்டுள்ளீர்கள். அல்லேலூயா! சரி. சகோதரனே, அவர்கள் கொஞ்சம் நீராவியை அங்கே உள்ளே பிரயோகிப்பார்களானால், வெறுமனே ஒரு சிறு பழைய கொதிகலனையும், சூடாக்குதல் மூலமாக கையாளுதலையும், மற்றும் செலுத்துதலையும், மற்றும் வேகமாக செயல்படுவதையும், குமிழிகள் உண்டாகுவதையும் பிரயோகிப்பார்களானால். அப்பொழுது, நீங்கள் அறியும் முதலாவது காரியம் என்னவென்றால், நீங்கள் விசிலை இழுக்கிறீர்கள், உடனே அது தூரமாக தண்டவாளத்தில் போகிறது. அது சரியே. அதுதான் நமக்குத் தேவையாயிருக்கிறது. 76சகோதரனே, ஒருமுறை (நடந்த காரியத்தை) அது எனக்கு நினைவூட்டுகிறது, நான் இங்கே மேலே லங்காசங்கே கிரீக்கில் இருந்தேன், நான் நெடுக நடந்து கொண்டிருந்தேன், எங்களுக்கு ஒரு வயதான ஆமை இருந்தது. அது மிகவும் வேடிக்கையாக தோற்றமளிக்கிற காரியமாக இருந்தது, அது நடந்து போகும் போது, அது அந்தக் கால்களைக் கொண்டிருந்தது. அன்றொரு நாள், என்னுடைய சிறு மகளைப் பெற்றிருந்தேன், அவைகளில் இரண்டு, ஏறக்குறைய அந்த அளவு பெரியதாக இருந்தது. நான் இன்று அங்கே நின்று கொண்டு, அந்தச் சிறு ஜீவன்களைக் கவனித்துக் கொண்டிருந்த போது, சிரித்தேன். அப்போது அது தன்னுடைய தலையை தன்னுடைய காலைக் கொண்டு, இந்தவிதமாக தேய்க்க முயன்றது. நான் அதை உற்றுப் பார்த்தேன். நீங்கள் அதை, அல்லது ஏதோவொன்றைத் தொட்டவுடனே, அது, ச்சூ' என்று ஓட்டுக்குள் திரும்ப இழுத்துக்கொண்டது. இன்று நீங்கள் பெற்றிருக்கிற இந்தப் பழைய குளிர்ந்து போன பாரம்பரிய மார்க்கத்தில் சிலவற்றோடும் அந்தவிதமாகத்தான் இருக்கிறது. “நான் மீண்டும் ஒருக்காலும் அந்த எழுப்புதலுக்குத் திரும்பிப் போக மாட்டேன்,” ச்சூ! “நான் பிரஸ்பிடேரியனை, மெதோடிஸ்டை, லூத்தரனை, இதைச் சேர்ந்தவன். அல்லேலூயா. அவர் என்னுடன் இணங்கவில்லை, நான் - நான் இந்த மேல் ஓட்டுக்குள்ளே இழுத்துக்கொள்கிறேன்.” தொடர்ந்து போங்கள். ஓ, உள்ளாக மூடிக்கொள்ளும், அந்தப் பழைய ஆமை மார்க்கம். 77நான், “நான் இதைத் திரும்ப நகரும்படி செய்கிறேன்” என்று கூறி, நான் அதை கீழே அந்த சிற்றோடைக்குக் எடுத்துச் சென்றேன். முதலில், நான் ஒரு குச்சியை எடுத்து, அதை தட்ட முயன்றேன், அது எந்த நன்மையும் செய்யவில்லை. அது ஒரு துளி நன்மையும் செய்யவில்லை, அது அப்படியே அங்கேயே கிடந்தது. உடனே நான் என்னால் கூடிய மட்டும் கடினமான ஒரு அடி கொடுத்தேன், அதுவோ அங்கேயே கிடந்தது. (நீங்கள் அதை அவைகளுக்குள் ஒரு சிறிதும் அடிக்க முடியாது. இல்லை, அதை முயற்சிக்க வேண்டிய அவசிமேயில்லை, அவைகளை பயமுறுத்தவோ, மற்றும் எல்லாவற்றையும் செய்ய வேண்டிய அவசியமேயில்லை) நான் அதை வெளியே எடுத்து, நான், நான் இதை மறுபடியும் போகச் செய்கிறேன்“ என்று கூறி, அதைக் கீழே தண்ணீரில் தள்ளினேன். வெறுமனே ஒருசில நீர்க்குமிழிகள் வெளியே வந்தது, அதுவோ அப்படியே தொடர்ந்து அதேவிதமாகவே இருந்தது. நல்லது, உங்களால் அவர்கள் (மேல்) தெளிக்கவோ, அவர்கள் (மேல்) ஊற்றவோ, பின்னோக்கியோ, முன்னோக்கியோ, நீங்கள் விரும்பும் எதையும் (செய்ய முடியும். அவர்களோ ஒரு உலர்ந்த பாவியாக கீழே சென்று, ஒரு ஈரமான பாவியாக மேலே வருவார்கள். அவ்வளவு தான், அவன் இன்னும் ஒரு பாவி தான்! நான் அதை எப்படி நகரச் செய்தேன் தெரியுமா? நான் சென்று, கைநிறைய குச்சிகளை எடுத்து, கொஞ்ச நெருப்பை பற்றவைத்து, அந்தப் பழைய பையனை அதன் மேல் வைத்தேன். சகோதரனே, அப்போது அவன் நகர்ந்து போய் விட்டான். இன்று சபைக்கு என்ன தேவையாயிருக்கிறது என்றால், ஒரு பழங்கால, பரிசுத்த ஆவி அக்கினி அவளுக்குக் கீழே பற்றி எரியச் செய்வது தான் என்று நான் உங்களுக்குக் கூறுகிறேன். தேவனுக்கு மகிமை! அதுதான் நமக்கு அவசியமாயிருக்கிறது. அக்கினி தான் சபையை அசைக்கும், வேறு எதுவும் அல்ல. அது சரியே. ஆம், ஐயா. 78நல்லது. அது ஒரு முன்னடையாளமாக இருக்கிறது, ஒரு அழகான முன்னடையாளம். ஆம், ஐயா. அது ஏதோவொன்றை பிரதிநிதித்துவப்படுத்துகினன்றன, அந்த மன்னவானது பொழியும் போது, அது.... ஐ குறித்துக்காட்டுகிறது. அவர்கள் சிவந்த சமுத்திரத்தினூடாக (இரத்தத்திற்கான முன்னடையாளம்) கடந்த சென்று, அந்த ஆளோட்டிகள் மாண்டுபோன பிறகு, தேவன் அதை அவர்களுக்குக் கொடுத்தார். தேவன் அவர்களுடைய ஜீவனைக் காப்பாற்ற வேண்டியிருந்தது. அவர்கள் தங்களைத்தானே பிறந்த தேசத்திலிருந்து வேறுபிரித்து, அவர்கள் வெளியே வனாந்தரத்தில் இருக்கும்படியான ஏதோவொன்றை, அவர் அவர்களுக்கு கொடுக்க வேண்டியிருந்தது. அவர்கள் அங்கே பரதேசிகளாக இருந்தார்கள். அவர்கள் ஒரு பிரயாணத்தில் இருந்தார்கள், தேவன் அவர்களுடைய ஜீவனைக் காப்பாற்ற வேண்டியிருந்தது, எனவே அவர்களுக்குத் தேவையாக எல்லாவற்றையும் அவர் கொடுப்பதாக வாக்குப்பண்ணியிருந்தார். எனவே அவர் அதைச் செய்தார், அவர் மன்னாவை கீழே பொழியப் பண்ணினார். அது ஒரு அழகான முன்னடையாளமாக இருந்தது! 79பெந்தெகோஸ்தே நாளில், இந்த சபையானது, இந்தப் பரிசுத்த ஆவி சபையானது துவங்கின போது, அவர்கள் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தைப் பெற்றுக்கொள்ள வெளியே வரும்படி, அவர்கள் தங்களுடைய சபைகளை விட்டும், மற்ற எல்லாவற்றை விட்டும், வேறுபிரித்து, அங்கேயே காத்துக் கொண்டிருந்து, நாம் என்ன செய்யப் போகிறோம்? நம்முடைய எஜமானர் மேலே போய் விட்டார், ஆனால் நாம் கொஞ்ச நேரம் காத்திருக்கும்படியாக அவர் சொன்னார் , கொஞ்ச நேரம் அப்படியே ஒரே இடத்தில் தங்கியிருக்கச் சொன்னார், நம்மை வழிநடத்தும்படியாக நமக்கு ஏதோவொன்றை அனுப்பப் போகிறார். ஓ , அவரைக் காணும்படியாக நான் மிகவும் பசியாயிருக்கிறேன்“ என்று பேதுரு சொன்னான். யோவான், “ஓ, பேதுருவே, அவரைக் காண நீ என்ன செய்ய விரும்புகிறாய்?” என்று கேட்டான். “என்னே! நல்லது, நான், 'நான் அவரை அங்கே வெளியில் மறுதலித்ததற்கு நான் வருந்துகிறேன். நான் ஒருபோதும் மறுபடியும் அதைச் செய்ய மாட்டேன்' என்றான்.” அப்போது, திடீரென்று, பலத்த காற்று அடிக்கிற முழக்கம் போல, வானத்திலிருந்து ஒரு முழக்கமுண்டாகி, இறங்கி வந்தது. தன்னுடைய கழுத்துப்பட்டையை பின்னால் திருப்பியிருக்கும் ஏதோவொரு ரோம மனிதன், அவர்களுக்கு கோஷரைக் கொடுக்கும்படியாக மேலே வருவதோ, அல்லது ஏதோவொரு விதமான ஒரு இராப்போஜனமோ அல்ல. ஏதோவொரு புரட்டஸ்டன்ட் பிரங்கியார், “நான் உங்களுக்கு ஐக்கியத்தின் வலது கரத்தைக் கொடுக்கிறேன், எனக்கு ஆறுமாத சோதனைக் காலத்தைக் கொடுங்கள். அவனுடைய பெயரை புத்கத்தில் பதிவு செய்யுங்கள்” என்று கூறுவது அல்ல. இல்லை, இல்லை. நல்லது, நாம் இன்று அந்தவிதமாகத்தான் அதைச் செய்கிறோம். 80ஆனால், சகோதரனே, பலத்த காற்று அடிக்கிற முழக்கம் போன்றது, பரலோகத்திலிருந்து வந்து, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். அல்லேலூயா! சகோதரனே, அந்தக் கட்டிடமானது அவைகளைத் தாங்கிக்கொள்ள போதுமான அளவு பெரிதாக இருக்கவில்லை. அவர்கள் வெளியே தெருக்களில் பாடிக்கொண்டும், குதித்துக்கொண்டும், நடனமாடிக் கொண்டும் போனார்கள். சகோதரியே, ஒரு நிமிடம் பொறு, அந்தக் கன்னி மரியாளும் கூட அங்கே உள்ளே இருந்தாள். ஆமாம், அவள் இருந்தாள், அவள் குடித்தவளைப் போல நடந்து கொண்டாள். அந்தக் கன்னி மரியாளை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிந்ததா? அதை ஒரு கத்தோலிக்க சபையிலோ, மெதோடிஸ்டு, பாப்டிஸ்டு, பிரஸ்பிடேரியன் சபையிலோ, அல்லது எங்காவது கூறுவதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? கன்னி மரியாளும் பரிசுத்த ஆவியினாவரின் அதிகாரத்தின் கீழாக இருந்து, குடித்த யாரோ ஒருவனைப் போன்று தள்ளாடிக் கொண்டிருந்தாள். இயேசு கிறிஸ்துவின் தாயானவளே, அவள் பரலோகத்திற்கு போக முடிவதற்கு முன்பு, பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தைப் பெற்றுக்கொள்ளும்படியாக, அங்கே மேலே போகும்படி தேவன் செய்திருப்பாரானால், அதைக் காட்டிலும் சிறிய ஏதோவொன்றைக் கொண்டு) அங்கே நீங்கள் ஒருபோதும் போகவே மாட்டீர்கள். நாற்றின் அடித்தண்டுகளை விட்டு மாவுச்சத்தை நன்றாக வெளியே எடுத்து, தொடர்ந்து வாருங்கள். அது சரியே. 81பழங்கால நாகமானைப் போன்று, நாகமான் தன்னுடைய... ஐப் பெற்றுக்கொள்ளும்படியாக இறங்கிச் சென்ற போது.... இறங்கி, ஏழு முறைகள் தண்ணீ ரில் முழுகி எழும்படியாகவோ, ஏழு முறைகள் முங்கி (எழும்படி) எலிசா அவனிடம் சொன்னான். ஓ, என்னே, அது எப்படியாக அவனுடைய கௌரவத்தை புண்படுத்தி விட்டது! “உ” “அங்கே மேலேயிருக்கும் தண்ணீர் நன்றாக இல்லையா?” என்றான். “என்னுடைய சபை நன்றாக இல்லையா?” “இல்லை, தேவன் இங்கே இறங்கும்படி சொன்னார்.” “நல்லது, இப்பொழுது, சகோதரன் பிரன்ஹாமே, நாம் சென்று, நாம் இதையும் அதையும் விசுவாசித்தால், நாம் ஒரு அருமையான சபையைக் கொண்டிருப்போம், எல்லாரையும் அருமையாக நடத்துவோம், மேலும் நான் கொஞ்சம் பணத்தை ஒன்றில் செலுத்துவேன்.” இல்லை, ஐயா. ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால், அவன் இராஜ்யத்திற்குள் பிரவேசிக்க மாட்டான்! எனவே, சர்க்கரைப்பாகுவில் உள்ள ஒரு ஆண் பூனையைப் (tomcat) போன்று, அவன் தன்னுடைய கால்களை சேற்றுக்கு வெளியே இழுத்தபடி, அங்கே வெளியே நடந்து செல்வதை என்னால் காண முடிகிறது, உங்களுக்குத் தெரியும், அங்கே வெளியே நடந்து சென்றான். ஓ , நான் அதைச் செய்ய வேண்டியிருக்கும் என்று நினைக்கிறேன்“ என்றபடி தண்ணீரில் முழுகி எழுந்தான். அது அவனுடைய கௌரவத்தைப் புண்படுத்தியிருக்கும். அவன் மேலே எழுந்த போது, இன்னும் தன்னுடைய குஷ்டரோகத்தைக் கொண்டிருந்தான். தீர்க்கதரிசி, ஏழு” முறை என்று சொல்லியிருந்தான். ஆனால் அவன் ஏழு முறைகள் முங்கி எழுந்த பிறகு, அவனுடைய சரீரத்தின் தோலானது மறுபடியும் சுத்தமாக ஆயிற்று. 82சகோதரனே, நான் உங்களுக்குக் கூறுகிறேன், சில ஜனங்கள், நான் மேலே பீடத்திற்கு வர வேண்டியிருப்பதை நம்ப மாட்டேன், கதறி அழுவதையும், சுற்றிலும் அழுவதையும், அவர்களில் மற்றவர்கள் செய்வதைப் போன்று சுற்றிலும் மூக்கொழுகுவதையும் நான் நம்ப மாட்டேன்“ என்று கூறுகிறார்கள். அப்படியானால் வராமல் அங்கேயே இருந்து விடுங்கள் (Stay back). “கர்த்தருடைய நிந்திக்கப்பட்ட சிலருடன் நான் வழியை எடுத்துக்கொண்டேன். நான் இயேசுவோடு அவர் மூலமாக தொடங்கி விட்டேன். கர்த்தாவே, என்னை அதனூடாகக் கொண்டு செல்லும்!” சகோதரனே, நான் அங்கே மந்திரவாதிகளுக்கு (witch doctors) முன்பாக நின்று கொண்டிருந்த போது, இந்தப் பழங்கால சுவிசேஷம் என்னை பற்றிப்பிடித்திருந்தது. வெறிபிடித்த பைத்தியக்காரர்கள் மேடைக்கு ஓடிவந்து, “நான் இந்த இரவே அவனைக் கொன்று போடுவேன்” என்று கூறினபோது, இதுதான் என்னை பற்றிப்பிடித்திருந்தது. விமானங்கள் மேலிருந்து கீழே விழ, விமான ஓட்டிகளின் முகங்கள் வெளிற, அந்த சோதனை வேளைகளில், இது தான் என் பக்கத்தில் நின்றது. மருத்துவர், இவர் மூன்று நிமிடங்கள் தான் உயிரோடு இருப்பார்“ என்று கூறின போது, அந்தப் பழங்கால சுவிசேஷம் தான் என்னருகில் நின்றது. அப்போது, அது என்னருகில் நின்றது, இப்பொழுதும், அது நன்றாகவே இருக்கிறது. அல்லேலூயா! நான் இன்னும் அதை நேசிக்கிறேன். அதிலுள்ள போதுமானதை நான் பெற்றுக்கொள்ள முடியவில்லை. அது சரியே. 83நல்லது, அது நம்மிடம் பிரதிநிதித்துவப்படுத்தும்படி என்ன செய்கிறது? சரி, அவர்கள் எல்லாரும் இந்தப் புதிய மன்னாவினால் வெறிகொண்டிருந்த போது ! அஹ்?“ ஆமாம், அது பரலோகத்திலிருந்து வந்தது. இப்பொழுது, மோசே ஒருபோதும், ”இன்றிரவு, கூடுதலாக ஒரு சில அப்பங்களை சுட்டுக்கொள்ளுங்கள்“ என்று கூறவேயில்லை. சுடுவதற்கு எதுவுமேயில்லை. அவர்கள் பரதேசிகளாய் இருந்தார்கள், அவர்கள் - அவர்கள் யாத்திரிகர்களும் அந்நியர்களுமாயிருந்தார்கள், எனவே அவர்கள் சுடுவதற்கு எதையும் கொண்டிருக்கவில்லை. தேவன் அதை பரலோகத்திலிருந்து பொழிந்தருளினார். தேவன் அதை பரலோகத்திலிருந்து பொழிந்தது போல, அவர் பரிசுத்த ஆவியையும் பரலோகத்திலிருந்து பொழிந்தருளினார். நல்லது, நீங்கள், “இப்பொழுது, அங்கே பின்னால் மோசே என்ன கூறினான்?” என்று கேட்கலாம். அவன், “ஆரோனே, சகோதரர்களாகிய நீங்கள் அங்கே வெளியே போக விரும்புகிறேன்” என்றான். இப்பொழுது, உங்கள் மேற்சட்டையை அணிந்து கொள்ளுங்கள். “சகோதரர்களாகிய நீங்கள் அங்கே வெளியே போய், அநேக பெரிய ஓமர் நிறைய இதை நமக்கு எடுத்துக்கொள்ளுங்கள். நீங்கள் இதை உள்ளே கொண்டு வந்து, அதைப் பாதுகாப்பாக வைத்திருந்து, அதைத் திரும்ப வைத்துக்கொள்ளுங்கள்.” அது மகா பரிசுத்த ஸ்தலத்தில் வைக்கப்பட்டிருந்தது. அது பரிசுத்த ஸ்தலத்தில் வைக்கப்பட்டிருந்தது. “இது எதற்காக?” என்று கேட்டான். “வழிவழியாக உங்கள் தலைமுறைகள் தோறும், பரிசுத்த ஸ்தலத்திற்குள் வருகிற ஒரு ஆசாரியனாக நியமிக்கப்பட்டிருக்கிற ஒவ்வொரு ஆசாரியனும், நீங்கள் இந்த ஓமர்களைக் கொண்டு அங்கே உள்ளே போகலாம், அந்த அசலான மன்னாவில் கொஞ்சம் எடுத்து, வெளியே வந்து, அதை அவனுடைய நாவில் வைத்து, அவன் ருசித்துப் பார்க்கட்டும், 84இப்போது, ​​பெந்தெகொஸ்தேக்கும் அதற்கும் என்ன சம்பந்தம்? ஓ, அவர்கள் அனைவரும் அந்த நல்ல மன்னாவை சாப்பிட்டு, கூச்சலிட்டு, கூச்சலிட்டு, குடிபோதையில் உள்ளவர்கள் போல் அங்கு நடந்து கொண்டிருந்தபோது, ​​​​ஒருவர், “நாம் என்ன செய்ய முடியும்?” பேதுரு, “நீங்கள் ஒவ்வொருவரும் மனந்திரும்பி, உங்கள் பாவங்களின் மன்னிப்புக்காக இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெறுங்கள், ஏனென்றால் நீங்கள் பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். ஏனென்றால், வாக்குத்தத்தம் உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் அழைக்கும் எவ்வளவோ தூரத்திலுள்ளவர்களுக்கும் இருக்கிறது.” சகோதரன்! அல்லேலூயா! கடவுளின் நிபந்தனைகளை பூர்த்தி செய்து, ஆசாரியனாகும் ஒவ்வொரு மனிதனும், திரைக்குப் பின்னால் வந்து, உலகத்திலிருந்து தன்னைப் பிரித்துக்கொள்வதற்கு, பெந்தெகொஸ்தே நாளில் விழுந்த அசல் மன்னாவை ஒரு வாய் மட்டுமல்ல, இதயம் நிறைந்ததாகவும் பெறுகிறார். அது போல தோற்றமளிக்கும் ஒன்று அல்ல, ஆனால் சில உண்மையான விஷயங்கள்! அல்லேலூயா! கடவுளுக்கு மகிமை! சரி! அங்கே அவர்கள் சென்றார்கள், அப்படியே நகர்ந்தனர். எவ்வளவு காலம் நீடிக்கப் போகிறது? இயேசு வரும் வரை. அவர்கள் மற்ற நிலத்தைத் தாக்கி, பழைய சோளத்தைப் பெறும் வரை மன்னா நீடித்தது. அது சரியா? 85இப்பொழுது, நமக்கு எவ்வளவு நேரம் இருக்கிறது? ஓ, நான் வருந்துகிறேன். நான் இருபத்தைந்து நிமிடங்கள் மட்டுமே தாமதமாக இருக்கிறேன். என்னே, நான் அவ்வளவு அதிகமாக ஓடுவது எனக்கு வினோதமாயிருக்கிறது, இல்லையா? சரி, சற்று பொறுங்கள். நல்லது, இன்னும் எனக்கு ஐந்து நிமிடங்கள் இருக்கின்றன, நாம் அரை மணி நேரம் கூட செய்வோம். அது எப்படியிருக்கிறது? சரி. 65-08-29சாத்தானின் ஏதேன் 86நாம் இங்கு சென்று, மிகத் துரிதமாக மூலப்பாடத்திற்கு வந்து விடுவோம், அவர்கள் வனாந்தரத்தினூடாக கடந்து சென்றார்கள். அந்த ஜனங்களைப் பாருங்கள், அது இன்றுள்ளது போலவே இருக்கிறது. ஊழியக்காரர்களே, மனந்தளர்ந்து போக வேண்டாம். இங்கே பாருங்கள், அப்படியே... (அதைப் போலவே. ஆனால் ஞாபகம் கொள்ளுங்கள், அந்த முறுமுறுப்புகள், அவர்களில் ஒருவரும் மறு தேசத்தை அடையவேயில்லை, அவர்களில் ஒருவரும் அங்கு போய்ச் சேரவில்லை. ஆனால் அவர்கள் முறுமுறுத்து, முறையிட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்கள் எகிப்திலுள்ள வெள்ளைப்பூண்டு (garlic) பானைகளை விட்டு வந்து, தூதர்களின் ஆகாரத்தை சாப்பிட்டுக் கொண்டிருந்தும், அதைக் குறித்து முறையிட்டுக் கொண்டிருந்தார்கள். அது சரியல்லவா? “நல்லது, சகோதரன் பில் அவர்களே, நான் இதை நேர்மையுடன் உம்மிடம் சொல்லுகிறேன், நான் என்ன செய்வேன் என்று எனக்குத் தெரியவில்லை. என்னுடைய கணவர் என்னை விட்டு விலகிச் சென்று விடுவார். அவர் விலகிச் செல்லட்டும். நீங்கள் எல்லாவற்றிலிருந்தும் பிரித்துக்கொள்ளுங்கள். “தனக்குரியவைகளை விட்டுவிட்டு, என்னைப் பற்றிக்கொள்ளாதவன் எனக்குப் பாத்திரன் அல்ல.” “அம்மா என்ன சொல்லுவார்கள் என்பது தெரியவில்லையே.” அம்மா என்ன கூறுவார்களோ என்று நீ ஏன் கவலை கொள்கிறாய்? அது இயேசு என்ன சொன்னார் என்பதாக இருக்கிறது! புரிகிறதா? ஆமாம். “நல்லது, என்னுடைய தையல் குழுவினர் சிதறிப் போய் விடுவார்களோ என்று பயப்படுகிறேன்.” நல்லது, அதைச் சிதறிப்போக செய்து விடுங்கள். அது சரியே. “ஓ, என்னுடைய இலக்கிய சங்கமும், இந்த மற்ற எல்லா காரியங்களும்! நான் பெற்றோர் ஆசிரியர் (சங்கத்திலும்) மற்றும் இந்த எல்லாவற்றிலும் நான் அங்கத்தினனாயிருக்கிறேன். நான் அங்கே முழங்கால்படியிட்டு, சத்தமிட வேண்டுமானால் என்னவாயிருக்கும்? நல்லது, சத்தமிடுங்கள். 87ஒருசமயம் ஒரு வயதான மனிதர், அவர் முழுவதும் பரிசுத்த ஆவியினால் நிறையப்பட்டிருந்தார். அவர் என்னவொரு அற்புதமான நேரத்தை உடையவராயிருந்தார். அவருடைய - அவருடைய மகள், அவர் அவளோடு தங்கியிருந்தார். அவர் வேதத்தை எடுத்து, வாசிப்பார், பிறகு, எழுந்து, அப்படியே சத்தமிட்டபடி, தரையில் மேலும் கீழும் நடப்பார். அவள் (அவருடைய மகள்) இந்தச் சிறு வழக்கமான தேநீர் விருந்தை (pink-tea parties) கொண்டிருக்கப் போவதாக இருந்தாள், உங்களுக்குத் தெரியும், எனவே அவள் அந்த வயதான மனிதரிடம் வந்து, எனவே அவள், “நான் இவருக்கு ஒரு முடிவு கண்டாக வேண்டும்” என்று கூறிவிட்டு, அவள், “அப்பா, இன்று பெண்கள் வருகிறார்கள். அந்த பெண்களோடு நீங்கள் நேரத்தை வீணாக்க விரும்ப மாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும் என்றாள். அதற்கு அவர், “இல்லை ” என்றார். “நான் ஒரு அருமையான புத்தகத்தை உமக்கு வாசிக்கக் கொடுக்கப் போகிறேன். நாங்கள் எங்கள் விருந்தை நடத்திக் கொண்டிக்கும் போது, நீர் மேல் மாடி அறைக்கு ஏறிச் சென்று, இதை வாசியும்” என்றாள். அவரும், “சரி” என்றார். அவர் சத்தமிடும்படியாக, அங்கே அதைக் குறித்து எதையும் கண்டுபிடிக்க மாட்டார்“ என்றாள். எனவே அவர் அங்கே மேலே சென்றார், அவள் அவருக்கு பூகோளவியல் புத்தகத்தைக் கொடுத்தாள். எனவே அவர் மேலே சென்று, பக்கங்களைப் புரட்டத் துவங்கி, “உம், ஐரோப்பா, ஆசியா” என்றார். அங்கே போன போது, அதில் “சமுத்திரம்” என்று போடப்பட்டிருந்தது. அவர் அதை மறுபடியும் நோக்கிப் பார்த்து, 'அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா!“ என்று கூறி, காலால் தரையை உதைக்கத் தொடங்கினார். அந்தப் பெண்கள், “நல்லது, என்னதான் நடக்கிறது?” என்று கேட்டார்கள். 88ஓ, அப்பாவுக்கு ஏதோ தவறு நேர்ந்து விட்டது. நாம் கட்டாயம் ஓடிப்போக வேண்டும்“ என்று சொல்லி, மேலே படிக்கட்டுகளில் ஏறி, அங்கே போனார்கள். அவர், “கர்த்தருக்கு துதி உண்டாவதாக! அல்லேலூயா! அல்லேலூயா!” என்று உரக்க கத்திக் கொண்டிருந்தார். அவள், “அப்பா, என்ன விஷயம்?” என்று கேட்டாள். அவர், “ஓ, தேனே, நீ இந்த நல்ல புத்தகத்தை எனக்கு வாசிக்க கொடுத்தாய், நான் இங்கே இதை வாசித்தேன், இதில் சமுத்திரத்திற்கு எந்த அடிப்பக்கமும் இல்லை என்று போடப்பட்டிருக்கிறது. இயேசு என்னுடைய பாவங்களை மறதியின் கடலில் போட்டு, என்னறென்றுமாக.... விட்டதாக அவர் சொல்லியிருக்கிறார். அவைகள் (சமுத்திரத்தின் ஆழம்) இன்னும் போய்க்கொண்டேயிருக்கின்றன. அல்லேலூயா! அல்லேலூயா!” என்றார். நிச்சயமாக, இன்னும் போய்க்கொண்டேயிருக்கின்றது, அதற்கு எந்த அடிப்பக்கமும் கிடையாது. அங்கே மேலே அதைப் பார்த்துவிட்டு, அவர்கள் அப்படியே கீழே இறங்கிச் சென்று, தொடர்ந்து விருந்தை நடத்திக் கொண்டிருந்தார்கள், ஓ, என்னே, அப்படியே நடத்திக் கொண்டிருந்தார்கள். அல்லேலூயா! அது சரியே. 89முறையிட்டுக் கொண்டும், எப்போதும் முறுமுறுத்துக் 'என்ன செய்வதென்றே தெரியவில்லையே“ (என்று ஓ. என்னே, முறுமுறுப்பது! வெள்ளைப்பூண்டு விட்டு, தூதர்களின் ஆகாரத்தைப் புசிக்கும்படி. எகிப்தில் தற்பெருமை பேச்சு பேசிக் கொண்டிருக்கும் வைத்தியர்களை விட்டு, மகத்தான வைத்தியரோடு இருக்கும்படி. ”அற்புதங்களின் நாட்கள் கடந்து விட்டன“ என்று கூறின ஒரு கூட்டம் ஜனங்களை விட்டு, என்னே, நன்மை, அற்புதங்கள் மற்றும் யாவும் கைகூடும் இடத்திலிருந்த அந்த ஜனங்களோடு இருக்கும்படி சரியாக அந்த கூட்ட ஜனங்களோடு, இருப்பினும், அவர்கள் முறையிட்டுக் கொண்டிருந்தார்கள்! அது சரியே. என்னவொரு நிலை! அவர்கள் எகிப்திலுள்ள சேற்றுத் தண்ணீரை விட்டு, ஒருபோதும் தீர்ந்து போகாத நீரூற்றிலிருந்து பருகும்படிக்கு. அப்பொழுதும் அவர்கள் முறையிட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது நிறுத்தப்பட்டதில் வியப்பொன்றுமில்லை. இன்றும் அதுதான் காரியம். நீங்கள் அதிகம் முறுமுறுக்கும் காரணத்தினால், வழங்கப்பட்டது நிறுத்தப்பட்டிருக்கிறது. டீக்கன்மார்களின் வேலையைக் குறித்து என்ன? என்னுடைய சபை கூறுகிறது...“ ஓ. நிறுத்துங்கள், சகோதரனே! - கிறிஸ்துவை நோக்கிப் பாருங்கள்! அவர்கள்... பின்பற்றிக் கொண்டிருந்தார்கள். 90அதன்பிறகு, நீங்கள் அறியும் முதலாவது காரியம் என்னவென்றால், மோசே, “இங்கே வெளியே அவர்களைக் கொண்டு வாருங்கள். அவர்களை இங்கே வெளியே கொண்டு வாருங்கள்” என்று கூறினான். மேலும் தேவன், “இந்தக் கன்மலையைப் பார்த்துப் பேசு, அது தன்னிடத்திலுள்ள தண்ணீரைக் கொண்டு வரும்” என்றார். அவன் அந்தக் கன்மலையைப் பார்த்துப் பேசினபோது... இப்பொழுது, முதலாவது, அவன் எடுத்து, ஒரு கோலினால் அந்தக் கன்மலையை அடித்தான். அவன் கன்மலையை அடித்த போது? அந்தக் கோலானது தேவனுடைய நியாயத்தீர்ப்பின் கோலாக இருக்கிறது. அது மோசேயினுடைய ஒரு கோல் அல்ல. தேவன் மோசேயை தம்முடைய கரத்தில் பிடித்திருந்தார். மோசேயின் கரத்தில் அந்தக் கோலானது எப்படியிருந்ததோ, இன்று சபையில் இயேசுவின் நாமமும் அவ்வாறு தான் இருக்கிறது. அது சரியே. அது சாத்தியமாக இருக்கிறது, சகோதரனே. அந்த எகிப்தியர்கள் எப்பொழுதாவது அந்தக் கோலை அவனுடைய கரத்தை விட்டு எடுக்க முடிந்திருக்குமானால், அவன் வல்லமையற்றவனாக இருந்திருப்பான். அவர்கள் இயேசுவின் நாமத்தை எப்பொழுதாவது சபையை விட்டு எடுத்துப் போட முடியுமானால், அது உங்களைத் தூரமாகக் கொண்டு சென்றுவிடும்; அப்போது நீங்கள் வெளியே சென்று, அதை தூஷித்துக் கொண்டும், அதை பரிகசித்து கேலி செய்து கொண்டும், மற்ற எல்லாவற்றையும் செய்து கொண்டும், உள்ளே வர முயற்சித்து, அதில் ஜெபித்துக் கொண்டும் இருப்பீர்கள். உங்களால் அதைச் செய்ய முடியாது. அதை புனிதமாக வைத்திருக்க வேண்டும்! அது சரியே. 91“ஓ, இயேசுவின் நாமத்தை உன்னோடு கொண்டுசெல், வருத்தமும் துன்பமுமிக்க பிள்ளையே. சோதனை உன்னைச் சூழும் வேளையில், அந்தப் பரிசுத்த நாமத்தை ஜெபத்தில் உச்சரி (breathe).” அப்போது விளக்கைப் போடும் போது, தரையிலுள்ள கரப்பான் பூச்சிகள் சிதறிப்போவதைப் போன்று, பிசாசுகள் சிதறிப்போகும். உண்மையாகவே அவ்வாறு ஆகும். 92இதோ அவர்கள் இருக்கிறார்கள். என்னே! அவன், “அவர்களை அங்கே வெளியே கூட்டி கொண்டு வாருங்கள்” என்றான். அவன் இந்த நியாயத்தீர்ப்பின் கோலை எடுத்து, கன்மலையை அடித்தான். அவன் அந்தக் கன்மலையை அடித்த போது, அங்கே அந்தக் கன்மலையின் பக்கவாட்டில் ஒரு பிளவு இருந்தது. அந்தக் கன்மலை கிறிஸ்து இயேசுவாக இருந்தது. தேவனுக்கு நன்றி! அது உங்களுக்காகவும் பொல்லாத பாவியாகவும், மரணத்திற்கு பாத்திரனாகவும், பிரிக்கப்பட்டு போவதற்கு பாத்திரனாகவும் இருந்த எனக்காகவும் உள்ள தேவனுடைய நியாயத்தீர்ப்பாக இருக்கிறது. அதைப் புசிக்கும் நாளில், சாவாய்“ என்பது தான் நியாயத்தீர்ப்பாக இருந்தது. அவருடைய நியாயத்தீர்ப்பானது அவரைக் கல்வாரியில் அடித்தது, அங்கே அவர் தொங்கியபடியே இரத்தம் வழிய, கத்திக்கொண்டே, மரித்துக் கொண்டிருந்தார். ஆதாமுடைய ஆட்டுக்குட்டியானவர் அங்கே தொங்கிக் கொண்டிருந்தார், இன்னும் சரியாகச் சொன்னால், ஆபேலின் ஆட்டுக்குட்டியானவர், உலகத்தோற்ற முதற்கொண்டு அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர். 93அங்கிருந்து, மிகவும் அழகான ஒரு உவமை (இருக்கிறது). அந்த வெண்கல சர்ப்பம் எதற்காக உயர்த்தப்பட்டது? சுகமளித்தலுக்காக இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட காரணங்களுக்காக உயர்த்தப்பட்டது. அவர்களுக்கு சுகம் தேவைப்பட்ட போது, அவர்கள் ஒரு வெண்கல சர்ப்பத்தை உயர்த்தினார்கள். அது என்னவாக இருந்தது? அதற்கு காரணம் என்னவென்றால் அவர்கள் முறுமுறுத்துக் கொண்டும், தேவனுக்கு விரோதமாகவும் மோசேக்கு விரோதமாகவும் பிதற்றிக் கொண்டும் இருந்தார்கள். அது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட காரணங்களுக்காக இருந்தது, அவர்கள் முறுமுறுத்துக் கொண்டும், பாவம் செய்து கொண்டும் இருந்த காரணத்தினால், அவர்கள் வியாதிப்பட்டு, அவர்களுக்கு சுகம் தேவைப்பட்டது. “மோசே” இயேசு, “மோசே வனாந்தரத்தில் வெண்கல சர்ப்பத்தை உயர்த்தினது போல,” என்று இயேசு கூறினது போன்று, அந்த அதே நோக்கத்திற்காகவும், அதே காரணத்திற்காகவும், அதே பரிகாரத்திற்காகவுமே, “அப்படியே மனுஷ குமாரனும் உயர்த்தப்பட வேண்டும்,” இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட காரணங்கள், உங்கள் ஆத்துமாவை இரட்சிக்கும்படியாக“ அழிந்து கொண்டிருந்த ஜனங்களை இரட்சிக்கும்படியாக, அந்த நிலத்திற்குள் இருந்து வெடித்துக் கிளம்பிய (belched out), தண்ணீரைக் கொண்டு வந்த, அடிக்கப்பட்ட கன்மலை. புதிய ஏற்பாட்டில், “தேவன் இவ்வளவாய் உலகத்தின் மேல் அன்புகூர்ந்தார்”, அதைக் குறித்த முன்னடையாளம், இன்னும் சரியாகச் சொன்னால், அதற்கு எதிர்முன்னடையாளமாக (antitype) இருக்கிறது, “தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். அங்கே தான் காரியம். அழிந்து கொண்டும், மரித்துக் கொண்டும், உதவியற்றவர்களுமாயிருந்த ஜனங்களுக்காக, வெண்கல சர்ப்பம் உயர்த்தப்பட்டது போலவும், ஜீவனையும், சுகத்தையும், சமாதானத்தையும் அருளும்படிக்கு அந்த அடிக்கப்பட்ட கன்மலையானது அடிக்கப்பட்டது போலவும் அது இருந்தது, அவ்வண்ணமாக, நீங்கள் கெட்டுப்போகாமல், நித்திய ஜீவனை அடையும்படிக்கு, தேவன் தம்முடைய குமாரனை உயர்த்தினார். 94என்னுடைய சகோதரனே, சகோதரியே, நீங்கள் இன்றிரவு அவரை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன். நான் என்னுடைய பாடத்தை குழப்பினதற்காக நான் வருந்துகிறேன். நான் -நான் நீண்ட காலமாக பிரசங்கம் பண்ணியிருக்கவில்லை. என்னுடைய உணர்ச்சிப்பெருக்கிற்காக மன்னித்துக் கொள்ளுங்கள், ஆனால் நான் எவ்வளவு நன்றாக உணருகிறேன்! என்னை மன்னித்துக்கொள்ளுங்கள். இன்னும் ஒரு சில நாட்களில், நான் அமைதியாகி விடுவேன், அப்பொழுது என்னால் போதிக்க முடியும். இன்றிரவு, அந்த தாளில் புகைப்படம் எடுக்கப்பட்ட அந்த அதே தூதனானவர் சரியாக இங்கே இந்த மேடையில் இருக்கிறார். அது என்னவாக இருக்கிறது? அது உடன்படிக்கையின் தூதனாக இருக்கிறது. அது தம்மைத்தாமே அடையாளத்தை நிருபித்துக் கொண்டிருக்கிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவாக இருக்கிறது. நீங்கள் இப்பொழுதே அவரை உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்வீர்களாக. நான் பீட அழைப்பைக் கொடுக்கும்படி பரிசுத்த ஆவியானவர் எனக்கு வழிநடத்துதலைக் கொடுக்கும் வரையில், நான் என்னுடைய பீட அழைப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறேன். 95இங்கே ஜெபர்ஸன்வில்லினூடாக அடித்துச் செல்லும் (swing out) ஒரு கதறுதலை நீங்கள் கேட்கும் அளவுக்கு, தேவன் இந்தச் சபையைப் பரிசுத்த ஆவியால் நிரப்பப் போகிறார் என்று விசுவாசிக்கிறேன். நான் ஒவ்வொரு இரவும் பகலும் காத்துக் கொண்டும், ஜெபித்துக்கொண்டும் இருக்கிறேன், அந்த மிக முக்கியமான நேரத்திற்காக, நான் காத்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் தொடர்ந்து உபவாசித்துக்கொண்டும், ஜெபித்துக் கொண்டும் இருங்கள், பிள்ளைகளை ஒன்று கூட்டி, உங்கள் வீட்டைச் சுற்றிலும் இருக்கிற எல்லா பாவங்களையும் ஒதுக்கித் தள்ளி தூக்கி எறிந்து விடுங்கள், காதணிகளைக் கழற்றி, உங்கள் வஸ்திரங்களை துவையுங்கள்“ என்று யாக்கோபு கூறினது போல. ஆயத்தப்படுங்கள்! ஓ, பெருமழையின் இரைச்சலை நான் கேட்கிறேன்! இப்பொழுது கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக. நாம் நம்முடைய தலைகளை வணங்குகையில், தேவனுடைய ஆட்டுக்குட்டியானவரை நோக்கிப் பாருங்கள். 96எங்கள் பரலோகப் பிதாவே, அந்த அழகான சபையானது சர்வாயுதவர்க்கத்திலே தொடர்ந்து போய்க் கொண்டிருக்கிறது! அவர்களுடைய வஸ்திரம் ஒருபோதும் கிழிந்து பழையதாக போகவோ, அவர்களுடைய பாதரட்சைகள் ஒருபோதும் அவர்களுடைய கால்களை விட்டு பிரிக்கப்படவும் இல்லை. அவர்கள் வனாந்தரத்திலிருந்த நாற்பது வருடங்கள், அவர்கள் மத்தியில் பலவீனமான ஒருவனும் இருந்ததில்லை . எந்த மருத்துவரும் இல்லை, பூமிக்குரிய மருத்துவர்கள் யாருமில்லை; வெறுமனே அந்த மகத்தான வைத்தியர் தான் (இருந்தார்). ஸ்திரீகளுக்குரிய தொப்பி முதலியன செய்து விற்பவர்கள் யாரும் கிடையாது, வஸ்திரங்களை உண்டு பண்ண எதவுமேயில்லாதிருந்தது. ஆனால் அவர்களுடைய வஸ்திரங்கள் உடுத்துக் கிழிந்து கந்தலாகி விடாதபடி பாதுகாத்த மகத்தான சிருஷ்டிகர் அங்கேயிருந்தார். அவர்கள் ஆழமான தண்ணீர்களினூடாகவும், சுட்டெரிக்கும் மணலினூடாகவும் போக வேண்டியிருந்தது, முட் புதர்களினூடாகவும், திண்மையான மலைகளினூடாகவும் உந்தித் தள்ளிக்கொண்டு போக வேண்டியிருந்தது. எல்லாமே வழியில் இருந்தன, ஆனால் அந்த மகத்தான அக்கினிஸ்தம்பமானது பாதையில் வழிநடத்திக் கொண்டிருந்தது. ஓ விடிவெள்ளி நட்சத்திரமே, எங்களுக்கு முன்னே இருந்து, எங்களை வழிநடத்தி, போகும் வழியைக் காட்டும். எங்கள் பாவத்தை எங்களுக்கு மன்னித்து, உமது ஊழியக்காரர்களாக இருக்க உதவி செய்தருளும், கர்த்தாவே. உம்முடைய வார்த்தையிலிருந்து வாசித்து, நான் இங்கே நின்று கொண்டு, தூவின இந்தச் சில வார்த்தைகளை நீர் எடுத்து, அதை ஒவ்வொரு இருதயத்திற்குள்ளும் ஆழமாக பதித்தருளும். அது ஒருபோதும் அழிந்து போகாமல், நீர் அவர்களுக்கு நித்திய ஜீவனைக் கொடுப்பீராக. 97நாம் நம்முடைய தலைகளைத் தாழ்த்தியிருக்கையில், (ஒவ்வொரு கண்ணும் மூடியிருக்க), நீங்கள் உங்கள் கரத்தை உயர்த்தி, “சகோதரன் பிரன்ஹாமே, தயவுசெய்து என்னை நினைவுகூரும். நான் -நான் இழக்கப்பட்டு விட்டேன், நான் - நான் - நான் இயேசுவை என்னுடைய இரட்சகராக அறிந்திருக்கவில்லை. நான் மறுபடியும் பிறந்திருக்கவில்லை . நீர் எனக்காக ஜெபிக்க விரும்புகிறேன்” என்று கூறுகிற ஒரு நபர் இங்கே உள்ளே இருக்கிறார்களா? அப்படியே இப்பொழுது உங்கள் கரத்தை - கரத்தை உயர்த்துவீர்களா? உங்கள் கரத்தை உயர்த்துங்கள் (Slip up), அப்பொழுது என்னால் உங்களுக்கு ஜெபத்தை ஏறெடுக்க முடியும். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. கட்டிடத்தில் எல்லாவிடங்களிலும், உங்களில் அநேகர் உங்கள் கரங்களை மேலே உயர்த்தியுள்ளீர்கள். அது அற்புதமானது. எல்லாவிடங்களிலும், தேவன் உங்களை ஆசீர்வதிப்பராக. இப்பொழுது, “சகோதரன் பிரன்ஹாமே, தேவன் என்னுடைய ஆத்துமாவை அழைக்க வேண்டுமானால், அந்த ஜீவக்கிருமி எனக்குள் இல்லை. அது எனக்குள் இல்லை. நான் அவரை அந்தவிதமாக அறியவில்லை. நான் - நான் உண்மையாகவே அவரை அந்தவிதமாக அறியவில்லை. நான் உண்மையாகவே ஒருபோதும் மறுபடியும் பிறந்திருக்கவேயில்லை, ஆனால் நான் மறுபடியும் பிறக்க விரும்புகிறேன். நான் அவ்வாறு இருக்க விரும்புகிறேன், நீர் எனக்காக ஜெபிக்க விரும்புகிறேன் என்று கூறுங்கள். உங்கள் கரத்தை உயர்த்துவீர்களா? வேறு யாராவது ஒருவர் உங்கள் கரத்தை உயர்த்துவீர்களா? ஏறக்குறைய ஒரு டஜன் கரங்கள். சரி, உங்களுக்கு நன்றி. சகோதரியே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. வேறு யாராவது ஒருவர். சரி. இப்பொழுது, உம்மையும், உம்மையும், உம்மையும் தேவன் ஆசீர்வதிப்பாராக. சரி. 98இப்பொழுது, நீங்கள் வியாதியாயிருந்து, ஜெபத்தில் நினைவுகூரப்பட விரும்புகிற யாராவது ஒருவர் இங்கே உள்ளே இருக்கிறீர்களா, அப்படியானால், “சகோதரன் பிரன்ஹாமே, என்னை நினைவுகூரும், நான் வியாதியாயிருக்கிறேன்” என்று கூறுங்கள். நமக்கு ஒரு சுகமளிக்கிய ஆராதனை இல்லாதிருக்கிறது, ஏனென்றால் நாம் அவை எல்லாவற்றையும் சுவிசேஷத்திற்குள்ளாகவே முக்கியத்துவம் கொடுக்கிறோம், ஆனால் நான் வியாதியஸ்தருக்காக ஜெபிக்கிறேன். இப்பொழுது, நீங்கள் உங்கள் கரத்தை உயர்த்தி, “என்னை நினைவுகூரும், நான் வியாதியாயிருக்கிறேன், சகோதரன் பிரன்ஹாமே” என்று கூறுங்கள். சரி, மறுபடியுமாக வியாதியாயிருக்கும் பல கரங்கள் உயர்த்தப்படுகின்றன. சரி, நாம் நம்முடைய தலைகளை வணங்கியிருக்கையில். கர்த்தாவே, அந்தப் பாவியையும், பின்வாங்கிப்போனவரையும் இரட்சியும், ஆண்டவரே. இதை அருளும், கர்த்தாவே. இன்றிரவு அவர்களை மேலே வீட்டிற்குக் கொண்டு வந்து, நன்மையால் அவர்களைப் போஷித்தருளும். இவர்கள் இன்றிரவு இங்கிருந்து சென்று, தங்கள் உடன்படிக்கையை புதுப்பித்துக் கொள்வார்களாக. அந்தப் பரிதாபமான பாவி, அவனுடைய தலையணை இன்றிரவு கல்லைப் போன்று இருப்பதாக, அவர்களால் இளைப்பாற முடியாதிருப்பதாக. ஓ தேவனே, அவ்விதமாக ஒரு மனிதன் ஜெபிப்பது என்பது பயங்கரமாக இருப்பது போன்று தோன்றுகிறது. ஆனால், ஓ தேவனே, ஏதாவது, அவனுடைய ஆத்துமா இழக்கப்பட்டுப் போக அனுமதியாதேயும். அது... கர்த்தாவே, உம்மை அறியாமலேயே அவன் இந்த உலகத்தை விட்டு வெளியே போவான் என்றால்! ஓ, நீர் அவனோடு கூட இருக்க வேண்டுமென்று ஜெபிக்கிறேன். இவனுக்கு உதவி செய்யும், இவளுக்கும் கூட, எல்லாருக்கும் உதவி செய்யும், கர்த்தாவே. 99இப்பொழுது இங்கேயுள்ள வியாதியஸ்தர்கள், கர்த்தாவே. மோசே அந்த சர்ப்பத்தை உயர்த்தி, அந்த சர்ப்பத்தைப் பார்த்த எல்லாரும்... போல. அந்த சர்ப்பமானது யாருக்காகவும் ஒருக்காலும் ஜெபிக்கவில்லை. அவர்கள் வெறுமனே நோக்கிப் பார்த்து, பிழைத்துக் கொண்டார்கள், அவர்கள் நோக்கிப் பார்த்துக் பிழைத்துக் கொண்டார்கள். கர்த்தாவே, நோக்கிப் பார்த்த எல்லாரும் பிழைத்தார்கள். கர்த்தாவே, இன்றிரவு இந்தக் கட்டிடத்திற்குள்ளேயிருக்கும் இந்த வியாதிப்பட்டவர்களும், அல்லற்படுகிறவர்களும் அதோ அங்கேயுள்ள சிலுவையை நோக்கிப் பார்த்து, சமாதான பிரபு அங்கே தொங்கிக் கொண்டிருப்பதைக் காண்பார்களாக; அந்த சர்ப்பத்துக்கு நேர் எதிர்முன்னடையாளம் (Antitype), பாவ சர்ப்பத்தை ஒத்திருக்கின்றன, அவர் எங்களுக்காக பாவமானார். கர்த்தாவே, இப்பொழுதே நீர் அவர்கள் எல்லாரையும் சுகப்படுத்த வேண்டுமென்று ஜெபிக்கிறேன். பரிசுத்த ஆவியானவர் தாமே சரியாக அங்கே அதனூடாக அசைவாடி, இப்பொழுதே அவர்களுடைய ஜீவனினூடாக அலை போல பாய்ந்து (surge), அவர்களுடைய பலவீனத்தைச் சுகமாக்குவராக. 100காலால் நடைப்பிரயாணம் செய்யும் மனிதர்களாக, வழியில் இருக்கிறவர்களை ஆசீர்வதியும். பந்தயப்பொருளைப் பெற்றுக்கொள்வதற்காக போராடி, இரத்தக் கடல்களினூடாக உபத்திரங்களிலும் குடும்பப்பிரச்சனைகளிலும் மற்றும் எல்லாவற்றிலும் தாங்கி நின்று, இன்னுமாக தொடர்ந்து போய்க்கொண்டேயிருக்கிற (waving on) வயதான மனிதர்களையும் ஸ்திரீகளையும் ஆசீர்வதியும். இந்த மகிமையான நாட்களில் ஏதோ ஒன்றில், எங்களுடைய மகத்தான கப்பலானது அதோ அங்கேயுள்ள துறைமுகத்தை விட்டுப் புறப்படும். அந்தப் பழைய சீயோன் கப்பலானது அந்த மூடுபனியினூடாக விரைந்து வரும்போது, அறைக்குள், மரணமானது எங்கள்மேல் வரத் துவங்கி, எங்களுடைய அன்பார்ந்தவர்கள் கதறிக் கூச்சலிடும் போது, அந்தப் பழைய சீயோன் கப்பல் ஊதும் சத்தத்தை நாங்கள் கேட்போம். அது ஊதும் சத்தத்தை நாங்கள் கேட்போம். அல்லேலூயா! அல்லேலூயா! அந்த மூடுபனியினூடாக அது படுக்கையின் பக்கம் வரும், அப்போது நாங்கள் எங்களுடைய கால்களை அங்கே எடுத்து வைத்து (ஏறி), நாங்கள் ஒருபோதும் வயதானவர்களாக ஆகாத, அதோ அங்கேயுள்ள அந்த தேசத்திற்குள் கரை சேருவோம். அப்போது முகத்திலுள்ள சுருக்கங்கள் போய்விடும். அல்லேலூயா! நரைத்த தலைமயிர்கள் முழுவதும் மறைந்துவிடும். அவருடைய சொந்த மகிமையான சரீரத்தைப் போன்ற ஒரு சரீரத்தை நாங்கள் உடையவர்களாக இருப்போம். அவர் இருக்கிற வண்ணமாகவே நாங்கள் அவரைக் காண்போம், அந்த சந்தோஷமான தேசத்தில், எங்களுடைய அன்பார்ந்தவர்களை நாங்கள் சந்திப்போம். இவர்களுக்கு தைரியத்தைக் கொடும். ஓ தேவனே, இந்தப் பட்டணத்தின் மேல் வந்து, பாவிகளை உள்ளே அனுப்பும், அங்கே அந்த ஆத்துமாவில் ஒரு பெரிய எழுப்புதல் இருப்பதாக. இதை அருளும், கர்த்தாவே. இப்பொழுது, மேற்கொண்டு ஆராதனையின் பாகத்திலும் எங்களோடு கூட இரும். இயேசுவின் நாமத்தில், நாங்கள் இதைக் கேட்கிறோம். ஆமென். 101கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. இப்பொழுது, நீங்கள் இங்கிருந்து போகையில், வாயில் காப்போராகிய சகோதரர்கள், அவர்கள் முன்னால் வந்து, அங்கேயுள்ள அந்தச் சிறு புத்தங்களையும், படங்களையும் பெற்றுக்கொள்வார்களா என்று அவர்களிடம் கேட்பேன். வாயில் காப்போராகிய சகோதரனே, அவர்கள் ஒவ்வொருவரும் கூட இதைப் பெற்றுக் கொள்கிறார்கள், மேலும் - மேலும் அந்தச் சிறிய... அங்கேயுள்ள அந்தப் புகைப்படம்) ஒன்றை நீங்கள் விரும்புவீர்களானால் நாங்கள் புத்தகங்களை விற்பனை செய்வதில்லை, நாங்கள் படங்களையும் விற்பதில்லை. உங்களுக்கு அவைகள் தேவைப்படுமானால், சரிதான்; உங்களுக்கு தேவையில்லை என்றால், அது அப்படியே... நாம் அந்த நோக்கத்திற்காகவே அவைகளை வைத்திருக்கிறோம். இப்பொழுது சகோதரர்களாகிய நீங்கள் முன்னால் வந்து, அவைகளைப் பெற்றுக்கொள்வீர்களா, அவ்வாறு நீங்கள் செய்வீர்களா? ஜனங்களுக்கு அவைகள் தேவையாயிருக்குமானால், சகோதரன் காக்ஸ் மற்றும் சகோதரன் ஃபிளீமன், மற்றும் சிலர் அங்கே ஒவ்வொரு கதவண்டையிலும் நின்று கொண்டிருக்கிறார்கள். 102எத்தனை பேர் கர்த்தரை நேசிக்கிறீர்கள், அப்படியானால், “ஆமென்!” என்று கூறுங்கள் [சபையார், “ஆமென்” என்று சத்தமிடுகிறார்கள் - ஆசிரியர்.) சரி. அங்கே தன்னுடைய கையில் குழந்தையை வைத்திருக்கிற அந்த சகோதரி, இசைக்கருவியை இசைக்கும் சகோதரி, அல்லது இங்கேயா என்று வியப்படைகிறேன், சரியாக... அவள் உட்கார்ந்திருப்பாளானால். சரி, நீ மேலே இருந்து, உனக்கு விருப்பமானால், கொஞ்ச நேரம் இங்கே முன்னால் வந்து, பியானோ இசைக்கருவியில் எங்களுக்கு ஒரு இசைத் தந்தியை இசைப்பாயா? இப்பொழுது, நாளை இரவு துவங்கும் ஆராதனைகள் நினைவிருக்குட்டும், நாம் நாளை இரவில் எங்கே தொடங்கப் போகிறோம் என்று தெரியுமா? நாம் இஸ்ரவேல் புத்திரர்களை காதேஸ் - பர்னேயாவுக்குக் கொண்டு வரப் போகிறோம். அது நியாயத்தீர்ப்பின் ஆசனமாக இருக்கிறது. அங்கே தான் இயேசுவாவும் காலேபும் போய் திரும்ப கொண்டு வந்தார்கள். 103அதன்பிறகு, கர்த்தருக்குச் சித்தமானால், ஞாயிறு காலையில், இவைகளின் பேரில், இந்தக் கேள்விகளும் பதில்களும், பேரில், கர்த்தருக்குச் சித்தமாயிருக்குமானால், நாம் அதைக் கொண்டிருப்போம். ஞாயிறு இரவில், நாம் (இஸ்ரவேல் புத்திரர்களை தாய்நாட்டுக்கு அழைத்துவர விரும்புகிறேன். அல்லேலூயா! யோர்தான் சுழன்று பின்னிட்டுத் திரும்பினது, அந்த சேறான நீரோடைகள் சுழன்று அப்பால் போயின. மேலும் அவர்கள் எரிகோ மதில்கள் வரைக்கும் ஏறிப்போய், உரத்த சத்தமிட்ட போது, மதில் கீழே விழுந்தது, அவர்கள் ஜெயம் பெற்றார்கள். அல்லேலூயா! ராகாப் வேசியிடமிருந்த, அந்த வேவுகாரர்களை கீழே இறக்கும்படி அனுமதித்த இடத்தில் கீழே தொங்கிக் கொண்டிருந்த, அங்கேயிருந்த அந்த கருஞ்சிவப்பு நிற நூலை நாம் கவனிப்போம். அதன்பிறகு, கர்த்தருக்குச் சித்தமானால், அடுத்த வாரம், வெளிப்படுத்தின விசேஷ புத்தகத்தினூடாகச் சென்று, ஆழமாக ஆராய்ந்து பார்க்கலாம், அதிலிருந்து தானியேல் புத்தகத்தினூடாக, அல்லேலூயா, ஒரு மகிமையாக, அற்புதமான நேரத்தைக் கொண்டிருக்கலாம். நீங்கள் கர்த்தரை நேசிக்கிறீர்களா? ஆமென். சரி. 104இப்பொழுது, எத்தனை பேருக்கு இந்தப் பாடல் தெரியும்..... (எங்களுக்குக் கொஞ்சம் கொடுங்கள், குடும்ப ஜெபத்தை மறுந்துவிட வேண்டாம். அது உங்களுக்குத் தெரியுமா?) இப்பொழுது இசையின்றி அதை நம்மால் பாட முடியுமா என்று பார்ப்போம். குடும்ப ஜெபத்தை மறுந்து போக வேண்டாம் என்ற இங்கேயுள்ள அந்தச் சிறு பழைய பாடல் எத்தனை பேருக்குத் தெரியும்? சரி, நாம் மெதுவாகத் துவங்கலாம். குடும்ப ஜெபத்தை மறந்து விடாதீர்கள், இயேசு உங்களை அங்கு சந்திக்க விரும்புகிறார்; உங்கள் கவலைகளெல்லாம் போக்கிடுவார், ஓ, குடும்ப ஜெபத்தை மறந்து விடாதீர்கள். எத்தனை பேர் குடும்ப ஜெபம் செய்கிறீர்கள்? நாங்கள் காணட்டும். ஆமாம், இப்பொழுது அவள் இசைத் தந்தியைப் பெற்றுக்கொள்ளட்டும். அது அதைப் பெற்றிருக்கிறது. நாம் அதை முயற்சித்துப் பார்ப்போம், தொடங்குவோம். குடும்ப ஜெபத்தை மறந்து விடாதீர்கள், இயேசு உங்களை அங்கு சந்திக்க விரும்புகிறார்; உங்கள் கவலைகளெல்லாம் போக்கிடுவார், ஓ, குடும்ப ஜெபத்தை மறந்து விடாதீர்கள். 105நாம் கலைந்து செல்லும்போதும் பாடும் பாடலாகிய, இயேசுவின் நாமத்தை உன்னோடு கொண்டு செல், அது உங்களுக்குத் தெரியும், உங்களுக்குத் தெரியாதா? இப்பொழுது, நாம் சற்றுநேரம் நிற்போமா. இப்பொழுது, நாம் முதல் அடியைப் பாடுகையில், மறுபுறம் திரும்பி, உங்கள் அருகில் இருப்பவரோடு கரங்களைக் குலுக்கி, “என்னுடைய பெயர் ஜான் டோ, நீங்கள் இன்றிரவு இங்கே கூடாரத்தில் இருப்பது எனக்கு மகிழ்ச்சியாயிருக்கிறது. நான் உங்களை மறுபடியும் காண்பேன் என்று நம்புகிறேன்” என்று கூறுங்கள். இப்பொழுது கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆனால் போய்விட வேண்டாம், சற்று (நேரத்தில்), நாம் வழக்கமாக செய்யும், உரிய விதத்தில், உங்களை அனுப்பப் போகிறோம். (உங்களுக்கு விருப்பமானால், சகோதரர்களாகிய நீங்கள் கதவண்டை செல்லுங்கள்). சரி, இப்பொழுது இயேசுவின் நாமத்தை கொண்டு செல்.... இப்பொழுது, பின்னால் சென்று, கரங்களைக் குலுக்கி, மறுபுறம் திரும்புங்கள். அது சரியே. இப்பொழுது கரங்களை குலுக்கி, வித்தியாச பேதங்களை சமாதானம் செய்து விடுங்கள். யாருக்கு விரோதமாவது உங்களிடம் ஏதாகிலும் இருக்குமானால், திரும்பிச் சென்று, அவர்களுடைய கரத்தைக் குலுக்கி, “இல்லை, நாம் ஒருமித்து யாத்ரீகர்களாக இருக்கிறோம்” என்று கூறுங்கள். செல்லுமிடமெல்லாம் அதைக்..... விலையுயர்ந்த நாமம் , ஓ எவ்வளவு இனிமை! புவியின் நம்பிக்கையும், பரலோகத்தின் சந்தோஷமுமாமே; (...?.. சகோதரன் ஸ்மித், நான்...?) புவியின் நம்பிக்கையும், பரலோகத்தின் சந்தோஷமுமாமே. இப்பொழுது, கூர்ந்து கவனியுங்கள். இயேசுவின் நாமத்தில் வணங்கி, அவருடைய பாதங்களில் சாஷ்டாங்கமாய் விழுவோம், பரலோகத்தில் ராஜாதிராஜாவாய் அவருக்கு முடிசூட்டுவோம், ஓ, நமது யாத்திரை முடியும் போது. விலையுயர்ந்த நாமம், (ஓ விலையுயர்ந்த நாமம்), ஓ, ஓ எவ்வளவு இனிமை! புவியின் நம்பிக்கையும், பரலோகத்தின் மகிழ்ச்சியுமாமே; விலையுயர்ந்த நாமம், (விலையுயர்ந்த நாமம்), ஓ எவ்வளவு இனிமை! புவியின் நம்பிக்கையும், பரலோகத்தின் மகிழ்ச்சியுமாமே; 106நீங்கள் இங்கே இன்றிரவு இருந்ததற்காக நாங்கள் மகிழ்ச்சியுள்ளவர்களாயிருக்கிறோம். உங்களால் கூடுமானால், நாளை இரவில், நீங்கள் திரும்பி வந்து, எங்களோடு கூட இருக்க விரும்புகிறோம். உங்களுக்கு கடமையின் வேலை இல்லை என்றால், எங்களோடு இருங்கள். இப்பொழுது, சற்று முன்பு உள்ளே வந்து, இங்கே முன் வரிசையில் நின்றுகொண்டிருக்கிற, ஓஹியோவிலுள்ள, போர்ட்ஸ்ம வுத்திலிருந்து (வந்துள்ள) எல்டர் ஸ்டீல் அவர்கள். அவர் ஒரு சிறு ஜெபம் செய்து, எங்களை அனுப்ப வேண்டுமென்று அவரைக் கேட்டுக்கொள்ளப் போகிறோம். சரி, சகோதரன் ஸ்டீல் அவர்களே.